To search this blog

Wednesday, December 9, 2020

Thiruvennai Nallur Sri Vaikundavasa Perumal Thirukoyil

இன்றைய திருத்தலம் - 'ஸ்ரீ நவநீதபுர க்ஷேத்திரம்'  - நவநீதம் என்றால் வெண்ணை ..  இது திருவெண்ணைநல்லூர் - இங்குள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீவைகுண்டவாசப்பெருமாள் கோவில். 




நமக்கு மிக முக்கிய பிரமாணங்கள்  - ஸ்ம்ருதி, இதிஹாச புராணங்கள்.  ஒழுக்க சீலனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் காதை 'ஸ்ரீராமாயணம்".   வடக்கே இமயமலையில் மானச சரஸிலிருந்து உற்பத்தியாகி இடைவிடாத நீரொழுக்கொடு கூடிய, சூரிய குலத்து அரசர்களின் நல் ஒழுக்கத்தைப் போல ஓடிவருகின்ற நதி  புனித சரயு.  இந்த சரயு நதி ஓடி வளப்படுத்தும் நாட்டிற்கு கோசல நாடு என்று பெயர். நீர்வளமும் நிலவளமும் நிரம்பிய நாடு கோசல நாடு. அந்த கோசலை நாட்டை அரசாண்டவன் தசரத சக்கரவர்த்தி.   வால்மீகி முனிவரின் அற்புத வார்த்தைகளை தமிழில் சிறப்புற எழுதியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

சைவசமய குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர்.  திருநாவலூரில் சடையனார் - இசைஞானியார் தம்பதிகளுக்கு ஆதிசைவ மரபில் நம்பிஆரூரர் எனும் திருநாமத்தில் சுந்தரர் பிறந்தார். சிறு வயதில் சுந்தரரை பார்த்த, அந்தப் பகுதி மன்னனான நரசிங்கமுனையர், அவரை தன்னுடைய அரண்மனையிலேயே வளர்த்து வந்தார். சுந்தரருக்கு 16 வயதான போது, புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை அவருக்கு மணம் செய்து வைக்க பேசி முடித்தனர். சுந்தரருக்கு கொடுத்த வாக்கின்படி, அவரை தடுத்தாட்கொள்ள வேண்டிய தருணம் சிவபெருமானுக்கு வந்தது. அதன்படி திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு ஓர் அந்தணக் கிழவராக உருவெடுத்து வந்தார் சிவபெருமான். அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் நம்பி ஆரூரரை காட்டி, “இவன் என் அடிமை. இவனை என்னோடு அனுப்புங்கள். மணம் செய்து வைக்காதீர்கள். இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலையில், அவனும், அவனது வழிவழி சந்ததியினரும் இந்த திருவெண்ணெய் நல்லூர் அந்தணனுக்கு அடிமை” என்று கூறியதோடு, அதற்கான ஓலையையும் காட்டினார்.

முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. “இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்குச் செல்வோம். அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்” என்று கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார் முதியவர்.  பின்னர் வழக்கு திருவெண்ணெய்நல்லூரில் மறையவர்கள் முன்னிலையில் நடந்தது.  சிவபெருமான் சுந்தரரை ஆட்கொண்ட இடம்  திருவெண்ணெய்நல்லூர் - இங்குள்ள பாடல் பெற்ற ஸ்தலம் - அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில் - சிவபெருமானுக்கு  ' தடுத்து ஆட்கொண்ட நாதர்' என்று பெயர். 

விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள  திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் அரங்கில் கம்பன் விழா  சிறப்பாக நடைபெறுகிறது.  இவ்வூருக்கு  என்ன சம்பந்தம் ? - என்ன பெருமை ??

வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்,

தீம் கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்;

ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை, அன்பு எனும் நறவம் மாந்தி,

மூங்கையான் பேசல் உற்றான் என்ன, யான் மொழியல் உற்றேன்.

ஒரு சொல்லைக் கூட எடுத்து விட முடியாதபடி, நான்கு அடிகள் கொண்ட (இருபத்து நான்காயிரம்) சுலோகங்களால் இராமாயணத்தை இயற்றினான் வான்மீகி முனிவன். தேவர்களும் தம் செவிகளே வாயாகப் பருகும்படி இனிமையான அமுதமயமான கவிதைகளைச் செய்தான். தனது ஆதி காவியத்தில் அந்த முனிவன் புகழ்ந்துரைத்த (கோசல) நாட்டை, அன்பு என்னும் மதுவைப் பருகி, ஊமையே பேசத் தொடங்கி விட்டான் என்றது போல நான் பேசலானேன், என ஆரம்பிக்கிறார் கம்பர். 

நல்வழியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றமாக நிகழ்ந்தது புகழ்மிக்க இராமாவதாரம். அந்த மகத்தான கதையைக் கூறும் செய்யுள்கள் நிறைந்த குற்றமற்ற சிறந்த இந்தக் காவியம், வள்ளல் சடையனின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது (காவியம் முழுவதும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது பெயரை எங்கும் கூறவில்லை,  தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பெயரை மட்டுமே தொடக்கத்திலும்  சில இடங்களிலும் கூறுகிறார்.

கம்ப நாட்டாழ்வாரின் புரவலர் - 'திருவெண்ணைநல்லூர் திரு சடையப்ப வள்ளல்'.   கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, கம்பர்  "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார், என்று பாடினாராம்  சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர். இவரின் சமாதி இன்றும் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காணப்படுகிறது.  கம்பராமாயணம் கம்பர் இயற்றிய உடன் கம்பர் வரும் போது அவருக்கு நெற்கதிர்வேய்ந்த பந்தலிட்டு இவர் வரவேற்பு அளித்ததால் அவ்வூருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. 

 





India lives on its villages -  Thiruvennainallur is now a small place  in Viluppuram district.   It is about 24 km from Viluppuram and 22 km from Thirukkoilur. It is a major agricultural region where sugarcane is grown aplenty. The town is built around the Kripapureeswarar Temple. It had its years of glory as it is associated with Saiva saint Sundaramurthi Nayanar and Kamba Ramayanam.  Kavichakravarthi was fully supported by Thiruvennainallur Sadayappa vallal, who hailed from this place, which is obscure now.  Kambar methions the name of Sadayappa vallal in so many places in his Kamba Ramayanam.


Other than the ancient Sri KrupaPureeswarar temple’ – there is ‘Sri Vaikundavasa Perumal’ Thirukovil.  The Presiding Deity is Lord Vishnu as Vaikundavasa Perumal.  His Consort is known as Janakavalli Thayar.  This Temple has a five tiered east facing Rajagopuram.  The Bali Peedam and Dwajasthambam are found close to the Main Entrance.  The Temple Inscriptions dates back to early Chola period.   The Uthsavar is known by the name Prayoganathar.  Emperuman  Vaikundavasa Perumal is in a standing posture with Sreedevi Bhoodevi nachimars.   The Sthala Viruksham is Punnai maram and theertham is Chakra pushkarini. In almost all temples, Garudazhwar would be in front of the main sannathi – here in the place of Garuda, there is sannathi for Soundilya maharishi, upon whose penance Emperuman came here straight from His abode of Srivaikundam and hence the name.

We had the fortune of worshipping at this temple in Apr 2019 at which time, there was balalayam and renovation activities were on.  Thirukovil archagar can be contacted on : 95853 23201

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.12.2020 










1 comment:

  1. Very nice.very good informations about kambar and sundarar. Very interesting .nice photos.

    ReplyDelete