To search this blog

Friday, December 25, 2020

Thirumylai Sri Madhava Perumal Vaikunda Ekadasi purappadu 2020

Vaikunda Ekadasi, is a day of supreme significance for all Sri Vaishnavaites.  Today 10th  day of Margazhi (25.12.2020)    is the all important  day....  being December do you feel cold ?  .. .. some of us might say, it is very cold in  Margazhi / December – elsewhere in Delhi –  now a cold wave has enveloped the Capital and its surrounding areas with  dense  fog and mist recording temperatures of   a minimum of 5.3 degrees Celsius  and less in nights.  There are places in globe which experience – minus degree Celsius .. ..  

At the Bhooloka Vaikundam, : Thiruvarangam Divyadesam the festivities  begin from Suklapaksha Ekadasi and celebrated for 23 days whence Namperumal listens to the vedas and Nammazhvar's Thiruvaimozhi as rendered by the Araiyars. The festival is divided into two parts, ten days before Vaikunda Ekadasi known as Pagalpathu  and  10 days from today, known as Raapathu. The Vaikunta Ekadasi festival is an occasion when the Paramapada vaasal is opened for devotees. Paramapada Vasal also colloquially  known as Sorga vaasal is the Gateway to Heaven.  

இன்று 25.12.2020 வைகுண்ட ஏகாதசி நன்னாள்.   ஸ்ரீவைஷ்ணவ உலகமே கொண்டாடும் ஓர் அற்புத நாள். இன்று முதல் பத்து நாள்கள் அனைத்து கோயில்களிலும் எம்பெருமான்,  ஸ்ரீசடகோபராகிய நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையாம்  திருவாய்மொழியை அனுபவித்து பத்தாம் நாள் நம்மாழ்வார் அனுபவித்த பரமபத அனுபவத்தை 'திருவடி தொழல்' எனும் நிகழ்வில் காரிமாறனை திரும்ப அளித்து நமக்கு அருள் செய்வான்.  பத்து நாட்கள் பகல் பத்து உத்சவம் முடிந்து, இன்று முதல் இராப்பத்து.  

நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனை 'முனித்தலைவன்'  என்று கொண்டாடுகிறார் திருமங்கை மன்னன் தம் திருமொழி பாசுரத்தில்.  நெஞ்சினுள்ளே சிந்தை செய்பவதற்கு முனி யென்று பெயர்; எப்போதும் உலகங்கட்கு நன்மையைச் சிந்தை செய்பவனான தலைவன் என்றபடி. இவ்வுலகங்களெல்லாம் திருவயிற்றினுள்ளே புகம்போது உண்டாகக்கூடிய ஆரவாரத்தின் மிகுதியைச் சொல்லுகிறது  இப்பாசுரம்.  

நீரானது வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது நீர்ம (திரவ) நிலையிலிருந்து திண்ம நிலைக்கு உறையும்போது தோன்றும் திண்மப் பொருளே பனி (Ice) ஆகும்.  அந்தப் பனியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள வளிமத்தின் அளவிலேயும் தங்கியிருக்கும். மண் போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.   முன்னொரு காலத்தில், உலகத்தின் பல பகுதிகளும் பணியில் மூழ்கி இருந்தனவாம்.   பனிக்கட்டி என்றால் சாதாரணப் பனிக்கட்டி அல்ல. தரையிலிருந்து 3 முதல் 4 கிலோ மீட்டர் உயரத்துக்குப் பனிக்கட்டி மூடியிருந்ததாம்.  பூமியில் இப்படிச் சில பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்த காலத்தை பனி யுகம் என்கிறார்கள்.  

வட துருவப் பகுதியில் உள்ள கிரீன்லாந்தின் நிலப் பகுதி இப்போது 80 சதவிகித அளவுக்குப் பனிக்கட்டியால் மூடப்பட்டதாக உள்ளது. பூமியானது திடீரென்று குளிர்ந்து போனால் கிரீன்லாந்தின் பனிக்கட்டி தெற்கு நோக்கிப் பரவி பழையபடி மேலே குறிப்பிட்ட நாடுகளை எல்லாம் மூடிவிடும். அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் பனிக்கட்டியால் மூடப்பட்டுவிடும்.  பூமியின் வளிமண்டலமும் பெருங்கடலும் வெப்பமடைவதால், வெப்பக்காற்றில் அதிக ஈரப்பதம் கலக்கிறது. இதன் விளைவாக மழையும் பனியும் புதிய உச்சங்களைத் தொடுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் `காலநிலை மாற்றம் வானிலைக்கு கூடுதல் `கிக்’ (kick ) கொடுத்து வளிமண்டல சுழற்சியைப் பாதிக்கிறது.  ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்தில் கூட  பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது.   1979-ம் ஆண்டு கடைசியாக அங்கு பனிமழை பொழிந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு, கடந்த 2016ல் மிதமான பனிப்பொழிவு நிகழ்ந்தது.  சில மாதங்கள் முன் உலகின் எழில் கொஞ்சும் பேரருவிகளில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, பனியில் உறைந்தது. பனிக் குவியல்கள், வெண்மை போர்த்திய மரங்கள் என நயாகராவின் அழகைக் கண்டுகளிக்க சுற்றுலாவாசிகள் அங்கு குவிந்தனர்.

 

இதோ இங்கே கலியனின் திருமொழி பாசுரம் : 

பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் நெடுங்கடலே ஆன காலம்,

இனிக்களைகண் இவர்க்கில்லை என்று  உலகம் ஏழினையும் ஊழில்வாங்கி

முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில் வைத்தும்மை உய்யக்கொண்ட

கனிகளவத்   திருவுருவத்து  ஒருவனையே கழல்தொழுமா கல்லீர்களே. 

இந்த பூவுலகு முழுவதும்  குளிர்ந்துபரந்திருக்கின்ற  அலைகளானவை ததும்பி எறியும்படி,  மஹாப்ரளய வெள்ளமே பரந்தபோது,  இவ்வுலகத்தார்க்கு இனிமேல் ரக்ஷகராவார் வேறு ஆருமில்லை என்று  ஏழு உலகங்களையும் முறையாலே வாங்கி மஹாகோஷம் நிரம்பிய திருவயிற்றினுள் வைத்து உலகத்தினை காத்து  உஜ்ஜீவிப்பித்தருளினவனும் ஸாத்விகர்களில் தலைவனும் கனிந்த களாப்பழம் போன்ற திருவுருவத்தை யுடையனுமான  திவ்யமூர்த்தி ஸ்வரூபனான எம்பெருமானின் திருவடிகளையே  தொழும்படி இப்புவியின் மடந்தைமார்களை அறிவுறுத்திகின்றார் நம் திருமங்கைமன்னன்.  

நாம் எம்பெருமானை பல்வேறு வாசனை மலர்கள் அளித்து, மிக அழகான திருவாபரணங்கள் சாற்றி, அற்புதமான பட்டு பீதாம்பரங்கள் சாற்றி - அவரது திருமேனி அழகை அனுபவிக்கின்றோம்.   தங்க அங்கி, வெள்ளி அங்கி, மலர் அலங்காரம்  இவைகள் தரிசித்து இருப்பீர்கள்.   எம்பெருமானுக்கு கபாயம்  எனும் போர்வையும் சாற்றப்படுகிறது.  சில திவ்யதேசங்களில், இரவு அல்லது அதிகாலை புறப்பாடு கண்டருளும்போது, எம்பெருமான்  பனிப்போர்வை போர்த்திக்கொண்டு அருள் பாலிக்கிறார்.  இதோ இங்கே திருமயிலை திரு அரவிந்த மாதவர் பரமபத வாசலுக்கு அதிகாலை புறப்பட்டு கண்டு அருளும்  போது பனிப்போர்வையுடன் எழுந்து அருளிய அற்புத வைபவம். 

Today being Vaikunda Ekadasi – at Thirumylai Sri Madhava Perumal Thirukovil, Sri Aravindha Madhavar had purappadu inside the temple (wearing Paniporvai) and there was Paramapada vasal opening.  ‘Vedha vinnappam’ was rendered by goshti. Here are some photos taken this morning.

 

adiyen Srinivasadhasan
Manandur Veeravalli Srinivasan Sampathkumar
25.12.2020
 
நன்றி : நன்றி :  கட்டற்ற நம் ஸம்ப்ரதாய களஞ்சியம் திராவிடவேதா இணையம்.
- ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சார் சுவாமி உரை. 






















1 comment: