Most of Srivaishnavaites know this fully well .. .. yet, adiyen
scribble few lines on the significance of 6th day of Udayavar Uthsavam
today.
"தஸ்மை ராமானுஜார்யாய நம: பரமயோகினே" ~ we fall at the feet of
the Greatest of Acharyas who is hailed as the King of all Sages.
The annual Uthsavam of Emperumanar is set to culminate on 9th May 2019
and today is day 6 – a significant day. ஸ்வாமி
எம்பெருமானார் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை மிக நன்கு வளர்த்தபடியால், இந்த சித்தாந்தம்
'எம்பெருமானார் தரிசனம்' என்றே அறியப்படுகிறது.
இந்த தரிசனத்துக்கும் ~ நம் ஸ்வாமி
எம்பெருமானாருக்கும் கூட விளைய இருந்த கேடு பற்றி நினைவு கூறும் விதமாய் அமைகிறது
இந்நாள்.
The
morning of 17th Apr 2018 would remain etched in my memory – on that
day, had the fortune of visiting Sriperumpudur ~ the avatara sthalam
of Swami Ramanujar on a very significant day. The mada veethis wind
lengthily at this divine place – yet, on day 6 of uthsavam, Acaryar
purappadu extended miles on the Bangalore highway. I had darshan of
Swami Ramanujar at place a few kilometers away from the Temple and this was
termed as ‘Delhi purappadu’.. .. .. the
first two photos were taken on that day ~ what would confound you is 1)
purappadu not on the mada veethi but on the high way 2) Swami
Ramanujar astride a horse wearing white robes.
புண்ணியர் தம் வாக்கிற்பிரியா ராமானுசா!
Yathiraja astride horse
wearing white silk !! 2019
வெள்ளை ஆடைகளை அணிந்து இராமானுஜர் :
In those golden days when Swami Emperumanar walked on the streets
of Thiruvarangam and other Divyadesams – tens of thousands of his disciples and
hundreds of Jeeyars followed him hailing “Ramanujo Vijayathe – Yathiraja
Rajaha”
Yathiraja, the King of
all hermits wearing while and not the saffron associated with Yathis ~ the
answer lies in a sad story which gets enacted on 6th day of
Acaryar Avathara uthsavam – and alongside this journey gets associated
an ancient and beautiful town variously known as Yaadusaila,
Yadavagiri, Gomanta, Bhuvaikuntha, Narayanadri, Jnanamantapa, Daksina
Badarikasrama … more popularly Melukote Thirunarayanapuram ~ the place where
our greatest Acharyar lived for 12 years – the yatra, albeit not a very happy note
of its origin.
குதிரை- புராணங்களிலும், சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், சிறப்பாக கருதப்பட்டு வந்து உள்ளது. இளவரசர்கள் யானை ஏற்றம், குதிரை ஏற்றம், ரதம் ஓட்டுதல் இவற்றில் தேர்ச்சி அடைந்தனர்.
பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.
குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை - அவற்றின் சக்தி பிரம்மிப்பூட்ட்ட வல்லது.
நமது வைணவ திருக்கோவில்களில் பிரம்மோத்சவத்தில் - குதிரை வாஹனம்
சிறப்பானது. எனினும், முனிவர்களின் அரசன் யதிராஜராஜர்
வெள்ளை சாற்றுப்படி - குதிரையின் சிறப்பை எடுத்து உரைப்பதல்ல - அது ஒரு அதி முக்கிய
நிகழ்வு.
கலியுகத்தில் பிங்கல வருஷத்தில் சித்திரை மாதத்தில் திருவாதிரை
திருநக்ஷத்திரத்தில்,ஸ்ரீபெரும்புதூர் திருத்தலத்தில், நம்மிராமனுசன் அவதரித்தார்.
On the 6th day
of the Uthsavam, in the morning, Sri Ramanujar as seen in the photo above
- gives darshan astride a horse adorning pure white silk
dress. The 6th day celebration is known as “Vellai
Sathupadi” a symbolic tradition when our Great Acharyar dons white
garment and is seen without trithandam. Symbolic of the travail and travel that
Ramanujar had to undertake donning the dress of a ‘grahastha’ instead of his
reverred kashaya. History has it that Chozha king Kulothunga
ordered Acharyar to subscribe to the view of prevalence of Shiva; Kuresar
donned the orange robes of Sanyasi, visited the court of the King and had his
eyes plucked out; Periya Nambi lost his life.. !
Swami Emperumanar
travelled along the course of river Kaveri, went out of Cholanadu adorning
white dress and went places traversing Kongu nadu, reached Thondanur,
where he constructed a huge lake; thence reached Melukote (Thirunarayanapuram)
in Mandya district, where he performed many religious discourses and brought in
disciplined ways of temple management. More was to happen as
Udayavar travelled to Delhi to the Court of Delhi sultan where the
uthsava vigraham of "Ramapriyan" had been taken by the muslim ruler.
The vigraham when invited by Udayavar walked on its own and sat on the lap of
Udayavar.
Marking this, on sixth
day of Udayavar Uthsavam - Emperumanar alights Kuthirai vahanam donning
white silk. At Sriperumpudur, his Delhi visit symbolises visit to
this place on way to Kanchi. Similar festivity takes place at Triplicane also.
By some historical accounts, these events took place at his ripe age around
80. For those who fall at the feet of Udayavar and who takes care of the
disciples of Udayavar, there would never be any hardship. Yet it makes us sad
to read of those dark events when even our Acaryar and his sishyas more
specifically Koorathazhwan and Periya nimbi underwent untold sufferings .. ..
.. at Thiruvallikkeni, symbolically, Sri Ramanujar halts at Sri Yadugiri
Yathiraja Mutt that has connections with Melukote.
*********************************
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாட்களிலும் 'வாழ்வான நாள் ஆன' - 'சித்திரையில் செய்ய திருவாதிரை' அன்று [9.5.2019] "எம்பெருமானார்
உத்சவ சாற்றுமுறை." இன்று (5.5.2019)உடையவர் உத்சவத்தில் ஆறாவது நாள். காலை
எம்பெருமானார் அழகாக வெள்ளை பட்டு அணிந்து புறப்பாடு கண்டு அருளினார்.
யதிகளுக்கெல்லாம் இறைவனான எம்பெருமானார் வெள்ளை பட்டு
உடுத்துவதா ?
காரேய் கருணை இராமானுஜருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் சுமார் ஆயிர ஆண்டுகள் முன் நடந்த துயர நிகழ்ச்சி
தான் இதற்கு காரணம். எம்பெருமானாரின் அருளுரைகளால் அவர் திக்விஜயம் சென்ற இடங்களில் எல்லாம்
ஸ்ரீ வைணவர்கள் பல்லாயிரக்கணக்கில் அவரடி பரவின காலம் அது அல்லவா ! வைணவம் திக்கெட்டும் பரவி, அரங்கன் புகழ் அனைவரும் பாடி, அடியார்கள் பெருகி வாழ அரங்கநகர் வளர்ந்த
அக்கால கட்டத்தில், ஒரு
பெருந்துன்பம் ஒரு வெறி பிடித்த மன்னன் ரூபத்தில் ஏற்பட்டது. சோழமண்டலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு
வைணவத்வேஷம் கொண்டு "குலோத்துங்க சோழன்" என்னும் மன்னன் ‘சிவாத் பரதரம் நாஸ்தி’
(சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று அனைத்து
மதத்தினைச் சார்ந்தவர்களையும் - ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ அல்லது வலுக்கட்டாயப் படுத்தியோ, நிலைநாட்டிக் கொண்டிருந்தான்.
வைணவத்தின் தரிசனத்தின் தலைவரான மகாஞானியான இராமானுஜர் ஒப்புக் கொண்டாலே ஒழிய தாங்கள் நினைப்பதை
சாதிக்கவியலாது என்று வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி
இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான். இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால்
தீங்கு நிச்சயம் என்று உணர்ந்த கூரத்தாழ்வான் ஆழ்வான் மற்றும் சீடர்கள்,
வடதிருக்காவேரிக்கு நீராட சென்று இருந்த
உடையவரது காஷாயத்தினை ஆழ்வான் தரித்து உடையவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து
பத்திரமாக எழுந்துஅருள ஏற்பாடு பண்ணினார்.
வெள்ளை ஆடைகளை அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் காவிரிக்கரை ஓரமாகவே மேல் திசை நோக்கி
பயணித்தார். இராஜ்ய சபைக்கு சென்ற கூரத்தாழ்வானுக்கும் பெரிய நம்பிக்கும்
மிகப்பெரிய துன்பம் ஏற்பட்டு, மஹாபூரணர் தன் உயிர் மாய்த்ததும்,
கூரேசன் தன் கண்பார்வை இழந்து பலவருடங்கள் பிறகே எம்பெருமானாரின் முயற்சியால் அருள்
பெற்றதும், தனி வரலாறு. தொண்டனூர்
சேர்ந்த உடையவர் அங்கே வைணவத்தை ஸ்தாபித்து, ஒரு மிகப்பெரிய ஏரியை நிர்மாணித்தார். உடையவர் மைசூர் மேல்கோட்டை திருநாரயணபுரம்
அடைந்து அங்கே பல திருப்பணிகள் செய்வித்தார். திருக்கோவில் நிர்வாகத்தை சீர்
செய்து நிலையான ஏற்பாடுகள் பல செய்தார்.
அவ்வூர் உற்சவ விக்கிரகமான ராமப்ரியர் டெல்லி மன்னரிடம் இருப்பது அறிந்து அங்கு
யாத்திரையாக சென்றார். டெல்லி மன்னனோ, ‘‘என் மகளின் விளையாட்டுப் பொருளாக உள்ள அந்த பொம்மையைக்
கேட்கிறீர்களா? முடிந்தால்
அழைத்துச் செல்லுங்கள்..’’ என கூற, ராமானுஜரோ கண்களில் நீர் சுரக்க,
‘‘என் செல்வப் பிள்ளாய் வாராய்..’’ என கனிவுடன் அழைக்க, கலகலவென சலங்கை ஒலிக்க பாதுஷா மகளின் மடியில்
இருந்த ராமப்ரியர் (விக்கிரகம்) ஓடோடி வந்து ராமானுஜர் மடியில் அமர்ந்தாரம். “தொடர்
சங்கிலிகை சலார் பிலார் என பொன்மணிகள் குலுங்கி ஒலிப்ப” ராமப்பிரியன் தள்ளித் தளர்நடையிட்டு
உடையவரின் மடிதனிலே வந்து அமர்ந்த வைபவமும் பிறிதொரு நாளில் ஸ்ரீபெரும்புதூரிலே கொண்டாடப்படுகிறது.
இப்படியாக பல சிறப்புகள் கொண்ட நம் சுவாமி எம்பெருமானார் மேலே பயணித்த ஆச்சர்யம் உத்சவத்தில் ஆறாம் நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
திருநாராயணபுரத்திலே யதிராஜர் உத்சவம் மிக விமர்சையாக நடைபெறுகின்றது.
எம்பெருமானார் அங்கே வாழ்ந்த நாட்களை என்றென்றும் அவர்கள் போற்றி ஆனந்திக்கின்றனர். இதுவே வெள்ளை சாற்றுப்படி என
கொண்டாடப்படுகிறது.
பல்கலையோர் தாம்
மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம் நாம்
மன்னி வாழ, நெஞ்சே சொல்லுவோம், அவன் நாமங்களே !!"
ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம் : என்றுமழியாத செல்வமுடைய
யதிராஜரே அடியேனுக்கு தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை,அருளவேணும் !! இன்று
திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே உடையவர் வெள்ளை
சாற்றுப்படியுடன் கண்டு அருளிய குதிரை வாகன புறப்பாட்டின் போது எடுத்த படங்கள் சில
இங்கே:
ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம் -
நம் இராமானுஜன் திருவடிகளே சரணம்.
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
5th May 2019.
No comments:
Post a Comment