Picture of
Green parrots in front of a house – (the window / allegorically door – AI added
reflection on the same) rings in the mind the words “பூங்கதவே தாழ் திறவாய் “–
something away from the popular hit of Isaignani Illayaraja – lyrics of GangaI Amaran
– on Vedharanyam sthalam significance.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில் (திருமறைக்காடு), தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 125-ஆவது சிவத்தலமாகும். மூலவர் திருமறைக்காடர் (வேதாரண்யேசுவரர்), இறைவி வேதநாயகி. அப்பர், சம்பந்தர் பாடி கதவு திறக்கச் செய்த தலமாகவும், நான்கு வேதங்களும் சிவனை வழிபட்ட தலமாகவும், சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகவும் இது போற்றப்படுகிறது.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில், நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த பிரதான கதவை, திருநாவுக்கரசர் (அப்பர்) பதிகம் பாடி திறக்க, திருஞானசம்பந்தர் பதிகம் பாடி மூடிய அற்புத நிகழ்வு நடைபெற்றது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் சிவபெருமானை வழிபட்ட தலம் திருமறைக்காடு. கலியுகத்தின் தொடக்கத்தில், இனியும் பூமியில் இருப்பது உசிதமல்ல என்று உணர்ந்த வேதங்கள், திருமறைக்காடு கோவிலின் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுவிடுகின்றன. அப்போது முதல் அந்த ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள சிறிய வாசல் வழியாகச் சென்று இறைவனை வணங்க ஆரம்பித்தனர். பல ஆண்டுகாலம் இந்த நிலையே தொடர்ந்தது. சிவாலயங்களுக்குச் சென்று தரிசித்து, பதிகங்களைப் பாடிவந்த திருநாவுக்கரசரும் (அப்பர்) திருஞானசம்பந்தரும் ஒருசேர திருமறைக்காடு வந்தடைந்தனர். கோவிலின் முன்பக்கக் கதவு மூடியிருக்கவே, மக்கள் அனைவரும் திட்டிவாசல் கதவு வழியாகக் கோவிலுக்குச் சென்று வருவதைக் கண்டு துணுக்குற்றனர். அங்கிருந்த சிவனடியார்களிடம் கோவிலின் பிரதான வாசல் கதவு மூடியிருப்பதன் காரணத்தைக் கேட்டறிந்தனர். வேதங்களைக் கற்றுத் தெளிந்த மறையோர்கள் பலர் முயன்றும் தாழிட்ட கதவுகளைத் திறக்க முடியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டனர்.
திருஞானசம்பந்தர்
உடனே நாவுக்கரசரை நோக்கி, “அப்பரே! வேதங்கள் ஆராதித்த வழியில்தான் நாம் கோவிலுக்குள்
செல்ல வேண்டும். எனவே பூட்டியிருக்கும் கதவைத் திறக்க நீங்கள் பதிகம் பாடுங்கள்,” என்று
அன்புடன் கேட்டுக் கொள்ள, அவர் பாடிய பாசுரம்
“பண்ணின் நேர்மொழியாளுமை பங்கரோ
மண்ணினார் வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணினாலுமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே”
என்று பத்து
பதிகங்களைப் பாடி முடித்தார் அப்பர். பதினோராவது பதிகத்தைப் பாடியதும், ஆலயத்தின் மணிகள்
தாமாகவே ஒலிக்க, கதவின் தாழ்ப்பாள் தானாகவே விலகி கதவு திறந்தது. இந்த நிகழ்வு இத்தலத்தில் இன்றளவும் மாசி மாதத்தில்
நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் ஏழாம் நாள் நிகழ்வில் கொண்டாடப்படுகிறது.
Interesting
!!
29.3.2026

No comments:
Post a Comment