To search this blog

Friday, October 18, 2024

Thula Sankramana Punniya Kalam 2024

Today 17.10.2024 is significant .. .. Pournami  pirappu – Thula sankramana punya kalam;  Aippaisi pandigai – the month where we celebrate the birth of Muthal Azhwargal and our great Acaryan Swami Manavala Maamunigal.



இன்று சிறப்பான நாள் - ரேவதி நக்ஷத்திரம் - முழு நிலவாக சந்திரன் பவனி வரும் பௌர்ணமி நன்னாள்.  இன்று துலா ஸங்க்ரமண புண்ய காலம்.    துலா மாசம் ஒரு சிறப்பான மாதம்  - துலை (இராசியின் குறியீடு:  துலாம்) என்பது இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் என்ற பொருள்.

ஸங்க்ரமணம் அல்லது ஸங்க்ராந்தி - ஆகாயத்தில் க்ரஹங்கள் ஸஞ்சரிக்கும் 360° வட்டப் பாதையை 30° கொண்ட 12 பகுதிகளாகப் பிரிப்பர். சித்ரா நக்ஷத்ரம் நிற்கும் புள்ளியை துலா ராசியின் தொடக்கமாக வைக்கப்படுகிறது.   புண்ய காலங்களில் ஸ்நானம், ஶ்ராத்தம்/தர்ப்பணம், ஜபம், தானம் முதலியவற்றைச் அவசியம் செய்ய வேண்டும் என்று ஶாஸ்த்ரம் சொல்கிறது. செய்தால் மற்ற நாட்களில் கிடைப்பதை விட அதிக புண்யத்தைத் தரும்.  ஸூர்யன் வருடம் தோறும் 6 மாதம் வடக்கு நோக்கி நகருவதை உத்தராயணம் என்றும் 6 மாதம் தெற்கு நோக்கி நகருவதை தக்ஷிணாயனம் என்றும் சொல்கிறோம்.  ஸூர்யனின் இந்த நகர்வினால்  தான் ருதுக்கள் அதாவது பருவ காலங்கள் அமைகின்றன. பருவ காலங்களின் அடிப்படையில் தான் விவசாயம் முதலியவை நடந்து மக்களின் வாழ்க்கையின் பல சிறப்பம்சங்கள் அமைகின்றன.  உத்தராயணம் ஆரம்பித்தவுடன் பாரதத்தில் குளிரும் இரவு நேரமும் குறைந்து வெளிச்சத்தின் காலம் கூடுகிறது. இதன் மூலம் செடிகொடிகளும் அவை மூலம் அனைத்து ஜீவராசிகளும் ஊட்டத்தைப் பெறுகின்றன.  

ஆகவே உத்தராயணத்தின் தொடக்கத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குவது இயற்கையே.  இந்த மாதத்தில் திருக்காவேரியில் புனித ஸ்னானம் செய்வது விஷேஹஸம். காவேரியின் பெருமை புராணங்களில் சொல்லபட்டிருக்கின்றது, அதில் ஐப்பசி துலா ஸ்நானமும் உண்டு.  ஶ்ரீரங்கத்தில், மற்ற மாதங்களில் வடதிருக்காவிரியில் (கொள்ளிடம்) இருந்து நன்னீர் கொணர்ந்து அரங்கனுக்கு திருமஞ்சனம் கண்டருள, இந்த துலா மாதத்தில் மட்டும் தென்திருக்காவிரியில் இருந்து தீர்த்தம் தங்க குடத்தில் கொணர்வர்!



The chants of ‘Jai Jai Maatha, Cauvery Maatha’ and other devotional callings filled the morning air at Talacauvery and the rituals were led by priests.  The chants ‘Ukki Baa Cauvery’ broke the morning mist at Talacauvery as the sacrosanct event of Cauvery Tula Sankramana was witnessed by thousands of devotees.  The holy water gushed out from the ‘Kundike’ at 7.41 am, a minute later than the predicted time. Rituals followed the holy event and the temple towns of Bhagamandala and Talacauvery flourished with devotion on Thursday.  

The roads leading to Bhagamandala and Talacauvery were flooded with devotees from midnight hours even as hundreds of devotees dressed in traditional Kodava attire marched barefoot to the temple from Bhagamandala. A few hundreds of  devotees  carried out ‘padayatra’ from Virajpet and the temple towns were witness to the endless devotions from thousands of devotees. Thousands  took a dip in the holy water even as arrangements were in place to distribute the holy water to the gathered devotees.

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனது பரத்துவத்தை அறுதியிட்டு உரைப்பவர் பக்திசாரர்.  இதோ இங்கே திருமழிசைப்பிரானின் நான்முகன் திருவந்தாதி பாசுரம் :  


தமராவார்  யாவருக்கும் தாமரை  மேலாற்கும்

அமரர்க்கும் ஆடரவர்த்தாற்கும் - அமரர்கள்

தாள்  தாமரை  மலர்களிட்டிறைஞ்சி, மால்வண்ணன்

தாள்தாமரை   அடைவோமென்று.

 

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே மிகவும் உயர்ந்தவன்.  அந்த கரியமேனியனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்  பல்வேறு மணம் கமழும் புஷ்பங்களை ஸமர்ப்பித்து வணங்கி  அத்திருவடித்தாமரைகளையே  அடைவோமென்று பக்தராயிருக்குமவர்கள் -  திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்,  ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும், நித்யஸூரிகளுக்கும் மற்றுமெல்லார்க்கும்  மேற்பட்டவராவர். அத்தகைய எம்பெருமானை அனுதினமும் வணங்குவோர்க்கு எல்லா நலன்களும் தானே அமையும். 

Here are some photos of Sri Parthasarathi Perumal siriya mada veethi purappadu on the occasion of Pournami & Thula Sankramana Punya kalam this evening.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.10.2024.

  









No comments:

Post a Comment