Thiruvallikkeni Kannadi pallakku 12-5-2023
பட்டொளி
என்றால் பளபளத்தல் என அறிவோம் - தட்டொளி என்றால் !! - கொஞ்சம் வார்த்தை மாறினால் தட்டொலி
!! 12.5.2023 மாலை திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் ஸ்ரீ
பார்த்தசாரதி எம்பெருமானுக்கு கண்ணாடி பல்லக்கு புறப்பாடு
கொரோனா தீநுண்மி பாதிப்பு, ஊரடங்கு மூலம் பாரத தேசமும் உலக நாடுகளும் எதிர்கொண்டது நன்கு அறிவோம். 26.04.2020 அன்று மனதின் குரல், 11ஆவது பகுதியில் பிரதமர் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள் : நண்பர்களே, பாரதத்தில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மக்களால் இயக்கப்படும் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராடி வருகிறார்கள், நீங்கள் எதிர்கொண்டு வருகிறீர்கள் .. .. .. கரவொலிகள், தட்டொலிகள், விளக்கு, மெழுகுவர்த்திகள் என அனைத்து வகைகளிலும் மக்களின் உணர்வுகள் உயிர் பெற்றன.
இங்கே தட்டொலி என்பதன் அர்த்தம் நாட்டு மக்கள் மாண்பு மிகு பிரதமரின் மொழி கேட்டு கையாலும் தட்டுகளாலும் - மருத்துவர்களை பாராட்ட ஏற்படுத்திய சப்தம். தட்டொலி என்பது ஒரு வரி என அறிகிறோம். (one of the ancient taxes!!). பண்டைய காலத்திலேயே அரசின் வருவாய் இனமாக நிலவரியும் பல்வேறு வகையான தொழில் வரிகளும் நடைமுறையிலிருந்தன.
வரிகளைக் கணக்கிடவும் வாங்கவும் பதிவுசெய்யும் முறையான நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வமைப்பில் பல்வேறு படிநிலைகளில் அரசு அலுவலர்கள் பணிபுரிந்தனர். கரணம் என்பவர் வரிக் கணக்குகளைப் பதிவு செய்யும் அடிநிலை ஊழியராவார். கணக்கு மத்தியஸ்தன் என்றும் இப்பதவி அழைக்கப்பட்டது. பணியாற்றும் நிறுவனத்துடன் இப்பதவி தொடர்புபடுத்தப்பட்டு நாடுகரணம், கோயில்கரணம், வாரியக்கரணம், ஊர்க்கரணம், என அழைக்கப்பட்டது. சில வரிகள் குறித்த நிர்வாக அமைப்பு ‘புரவு வரித் திணைக்களம்’ என்ற பெயரில் இருந்தது.
கணக்குமுதல், கையேற்பு, கொடிக்கடமை, கொட்டைக்கூலி, கோள்நிறை கூலி, சண்டாளப் பேறு, சந்திவிக்கிரகப்பேறு, சாட்டு வரி, சிறுபாடி காவல், சூலவரி (சூலவரிப் பொன்), செக்கிறை, செக்கு மன்றாடி, செங்கொடிக்காணம், சென்னீர்வெட்டி, சென்னீரமஞ்சி, சேவகக்காசு, சோறுமாடு, தசவந்தம் தட்டடுவு, தட்டாரப் பாட்டம் (தட்டுக்காயம், தட்டொலி) தடிப்பதக்கு, தண்டல்மேனி (தண்டலிற் கடமை, தண்டவிலக்கை, தண்டற் கடமை), தண்டநாயகர் மகமை, தண்டாளர் முதல், தரகு (தரகு பாட்டம்), தலையாரிக்கம், தலைவிலை, தறியிறை (தறிப்புடைவை), தனப்பணம், தாட்பிடியரிசி (தாப்படியரிசி), தானமானியம், திருமுன் காட்சி, திருமுகக் காணம், திங்கள் மேராமு, திங்கட் சோறு, திங்கள் நெய், திங்கள் மோகம், திரைக்காசு, துலாக் கூலி, .. .. … (and much more )
மேலே கூறப்பட்ட
வரிகளெல்லாம், எல்லாக் காலத்தும் எல்லாவிடத்தும் எல்லாரிடத்தும் வாங்கப்பட்டவையல்ல.
வேறு வரி குறிப்பன போல் தோன்றும் பல பெயர்கள் ஒரே வரி குறிப்பன
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
13.5.2023
இணையத்தில் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டியது - படங்கள் நான் எடுத்தவை.
No comments:
Post a Comment