To search this blog

Sunday, July 10, 2022

Sripadham kainkaryam at Thiruvallikkeni

  Sripadham kainkaryam at Thiruvallikkeni 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீதெள்ளியசிங்கருக்கு ஆனி ப்ரஹ்மோத்சவம் சிறப்புற நடந்து வருகிறது.  

திருவல்லிக்கேணி வாகனங்கள் அழகானவை ! - கருட, ஹம்ச, சூர்ய, சந்திர, ஹனுமந்த, வாகனங்கள் கனமானவையும் ஆகும்.   எம்பெருமானுக்கு செய்யும் கைங்கர்யங்களில் 'ஸ்ரீபாத கைங்கர்யம்' சிறப்பானது - உடல் ரீதியாக கடினமானதும் கூட.  

திருவல்லிக்கேணி  தென்னாச்சார்ய ஸ்ரீபாதம் தாங்கிகள் அமைப்பில் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் (நன்கு படித்து, நல்ல உத்தியோகத்திலும் உள்ளவர்கள்) - எல்லா புறப்பாட்டிலும் எம்பெருமானிடம் உள்ள ஈடுபாட்டில் இக்கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ளனர்.  திரு பிரவீன் தலைமையில் இது சிறப்புற நடந்து வருகிறது.  

நேற்றைய கருட சேவை புறப்பாட்டில் குளக்கரை, தெற்கு மாட வீதியில், மற்றும் இன்றைய புறப்பாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் சில ! ஏளப்பண்ணுபவர்கள் முறையில் மாறி மாறி  ஏளப்பண்ணுவதால் - சிலரது படங்கள் இந்த தொகுப்பில் இல்லாமல் போகலாம்.  

அடியேன் ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.  

More  photos of Sripadham kainkaryabarargal  posted on my fb page :  https://www.facebook.com/sampathkumar.srinivasan.3/posts/pfbid02NMCbPZG13yUyoHYN6ghVP66oMCdXP5uRwH7T8vcZQMvVJ8UgdoVob5mq6gzy9o3Wl?__cft__[0]=AZWx-szK_kRSTZUOIarKSZZzU4Z8zpaz52JLmoQV0E1rPEnNwzRnK0ppS0OF68g3Qg7Qpz_VBzNuFGArhhny2vL5NoQWFUv4cIx1jLNvRXJUN2eTKXU_RiNMC5O2wq_4K2Hcg6hcfC7xbuxBVxNbtM2Uk72mGXSV0inrFevSNOBXvw&__tn__=%2CO%2CP-R













No comments:

Post a Comment