கைரவிணி புஷ்கரிணி - திருவல்லிக்கேணி திருக்கோவிலின் இந்த திருக்குளம் மிக புனிதமானது. இப்பொய்கையை கண்டாலே ஆனந்தம் மிகுந்து, தீவினைகள் எல்லாம் அகலும். பருகிலினாலே மிக பேறு கிட்டும்; குடைந்தாடுவோர்க்கு மறு பிறவியே கிடையாதாம் ! - அவ்வளவு சிறப்பு பெற்றது இந்த குளம். திருவல்லிக்கேணி என்ற பெயர்க்காரணம் ஆன தடாகை. கைரவம் என்றால் செவ்வல்லி - ஆம்பல் வகை பூவினம். இந்த தடாகத்தில் செவ்வல்லி மண்டி நீரை மறைத்து இருந்து வந்தது.
The tank of Sri Parthasarathi Swami is famous ~ it is ‘Kairavini Pushkarini’… the pond of Lily – ‘allikkeni’ from which the place itself derives its name .. .. today’s incessant rains have added loads of water and here is a look of the beautiful pushkarini and a close-up of the neerazhi mantapam.
திருவல்லிக்கேணி பெயர் அமையக் காரணமானது திருக்கோவில் குளம் - கைரவிணி புஷ்கரிணியில் இருந்து. நம் பகவத் ராமானுஜர் பிறக்க சோமயாஜி வேண்டி தவம் இருந்த குளம் இது. இதன் மையத்தில் சிறிய அழகான 'நீராழி மண்டபம்' உள்ளது. தண்ணீர் தளும்பும் நாட்களில் இதனுடைய கீழ் படிக்கட்டுகள் தெரியாது.
26.11.2021 @ 18.30 hrs.
No comments:
Post a Comment