While the number of novel Coronavirus cases in the country
has been rising steadily, between eight and nine thousand a day these days, the
growth rate has been coming down, nationally as well as in most of the states with
major caseloads. At the start of May, the compounded daily growth rate of cases
in India was around 6.2 per cent. It rose to about 7 per cent before starting a
decline that has continued since then. On Tuesday, the national growth rate was
4.67 per cent. One of the main reasons
for the decline in growth at the national level is the fact that Maharashtra,
which accounts for more than a third of all cases in India, has been slowing
down for more than two weeks now. On
June 2, Maharashtra’s growth rate was 4.05 per cent, well below the national
rate; but Delhi is growing at a rate higher than national rate
The
State Human Rights Commission (SHRC) on Friday sought an explanation from
various government officials on the reason for the change of water colour in
Thamirabarani river. Meanwhile, Tirunelveli collector said the colour change
was due to sudden release of excess water from the bottom of the Karaiyar dam
from May 15.
As we
travel from Thirunelveli towards Tiruchendur – approx. 25 km away – on the
banks of Tamirabarani, is this beautiful divyadesam Thiru Kurugur. The temple is
‘Aathinadhar Azhwar Thirukovil’. It was one of the largest towns of Pandya
dynasty. The presiding deity is Aathippiran and Utsavar is
PolinthuNinraPiran. Thayar is Aathinaayaki and ThirukurugurNayaki.
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்*
உண்டோ சடகோபர்க்கு
ஒப்பொருவர் – உண்டோ*
திருவாய்மொழிக்கு
ஒப்பு தென்குருகைக்குண்டோ*
ஒருபார் தனில் ஒக்குமூர்**
Great words of our Acharyar
Sri Manavala Maamunigal when hailing the birth of Swami
Nammazhwar. Acharyan Manavalamaamunigal
in his ‘Upadesa Rathinamalai’ says : there is no other day matching
Vaikasi Visakam; there is none matching Sadagopar; there is nothing equivalent
to ‘Thiruvaimozhi’ and there is no place on earth which can be treated on par
to Thirukurugai – the birthplace of Swami Nammalwar. Today 4th June
2020 [Vaikasi 22] is a great day –
‘Vaikasi Visakham’ ~ celebrating the birth of Swami Nammalwar.
" ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த
எந்தை யேகமூர்த்திக்கே" ~ என ஸர்வேச்வரானாயும்,
ஜகத்துக்கு ஸர்வப்ரகார ரக்ஷகனாயும், அந்தத் தன்மையினால் என்னை யீடுபடுத்திக் கொண்டவனாயும்
அத்விதீயமான திருமேனியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான் திருவுள்ளம் பற்றுவதே! என
நமக்கு உபதேசித்த அற்புத ஆசார்யர் ஆழ்வார் ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்த
நன்னாள் இந்நாள் .
திருக்கச்சியிலே
ஸ்வாமி நம்மாழ்வார் சன்னதிக்கு தேவப்பெருமாள் எழுந்து அருள்வது விசேஷம். நம்
திருவல்லிக்கேணியில் ஆழ்வார் சாற்றுமுறை அன்று ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாளுடன் பெரிய
வீதி புறப்பாடு நடைபெறும். ஆயினும் ஆழ்வார் உத்சவம் ஸ்ரீஅழகிய சிங்கர் ப்ரஹ்மோத்சவத்தில் வரும் போது ஆழ்வார் அழகியசிங்கருடன் புறப்பட்டு கண்டு அருள்வார். சென்ற வருஷம் (2019) இரண்டாம் நாள் இரவு சிம்ம வாஹனம். ஒரு அசந்தர்ப்பத்தாலே திருவீதி புறப்பாடு நடைபெறவில்லை. ஸ்ரீதெள்ளியசிங்கர் நம்மாழ்வார் சன்னதியிலேயே இரவு
முழுதும் தங்கி இருந்து திருவாய்மொழி சாற்றியவருடன் உசாவி இருந்தார். மறுநாள்
அவருடனேயே திருமஞ்சனம் கண்டருளி அருளிச்செயல்
இசைக்கப்பெற்று, சாயங்காலம் 4 மணி அளவில் கருடசேவை புறப்பாட்டிலே உடன் செல்லும் பிரபாவம். திருவல்லிக்கேணியில் அப்படி ஒரு திவ்யசேவை. இந்த வருடம் [2020] கொரோனாவால் புறப்பாடு இல்லை என்பது
வருத்தமே !
திருவரமங்கை, எனும் வானமாமலை திவ்யதேசத்தில் ஸ்ரீசடகோபனிலே
(ஸ்ரீசடாரியில்) நம்மாழ்வாரின் அழகு திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
Of the Nava Thirupathi
divyadesams, ThirukKurugoor is hailed as “AzhwarThirunagari”- as
this is the Avatharasthalam of Swami
Nammalwar. Madura Kavigal saw the leading light from Thiru
Ayodhya, travelled all the way to Kurugoor, identified Nammazhwar in the
Puliyamaram [tamarind tree]. Mathurakavigal was so attached to
Nammazhwaar that he sang only in praise of Nammazhwaar and considered his duty
to spend life devoted to Nammazhwaar.
நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள
"உறங்கா' புளிய மரம்
பூக்கும், காய்க்கும்
ஆனால் பழுக்காது. இன்றும் கோவில் உள்ளே
இந்த மரத்தை சேவிக்கலாம்.
The Greatest among Alwars
preached to us – “ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,”
– that when we do kainkaryam to Lord (to Him at Thiruvenkadam), we
must do service by being with HIM throughout our life and do as a slave would
serve his master. Swami Nammazhwaar was born on
the auspicious poornima day of Tamil Vaikasi month
in Visakha nakshathiram at Thirukurugur, now famously known as ‘Azhwar
Thirunagari’. He was born to Kari and Udayanangai. Nammazhwaar has
greatly contributed and his works are Thiruvaimozhi (1102 verses),
Thiruvirutham (100), Thiruvasiriyam (7) and Periya Thiruvanthathi (87)
வைகாசி
விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும் (இவர் திருவண்பரிசரத்தில் பிறந்தவர்)
- நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம். சடம் என்றால் காற்று. வாயுவை முறித்ததனால் சடகோபன் என பெயர் பெற்றாராம். இந்த சடகோபர் ஆழ்வார்
திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய மர பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல்
வாசம் செய்தார்.
ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் – நவதிருப்பதிகளில் ஒன்றான
அழகான திவ்யதேசம். நம்மாழ்வார் இத்திருத்தலத்தை 11 பாசுரங்களால் 'ஸ்ரீமன்
நாராயணனையே பற்றுதல்பற்றி அறுதியிட்டு மங்களாசாசனம் செய்து உள்ளார்.
திருவாய்மொழி தனியனில்:- “திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும்,” - என பாண்டியநாட்டு தாமிரபரணிநதியின் பெருமையும் குருகூர்
திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.
இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமானதால் “ஆழ்வார்திருநகரி” என்றழைக்கப்படுகிறது. திருவாய்மொழி திராவிட வேதசாகரம் என போற்றப்படுகிறது. ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தையும் அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்ய வேண்டியதையும் மிக சிறப்பாக
அழுத்தமாக ஆழ்வார் நிலை நாட்டியுள்ளார். இதோ இங்கே ஒரு துளி :
கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள்,*
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,என்*
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.
குப்பையைக் கிளறினாற்போல்
குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து, வள்ளல் என்றும் உயர்ந்தவன்
என்றும் போற்றுவதால் நீங்கள் பெறும்பலன் சிறிதுமில்லை. உங்கள் வாய்மையை இழப்பதை
தவிர; நீங்கள் பாடுகிற துதிமொழிகளுக்கு மிகப்பொருத்தமானவன்
- பக்தர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும் எவ்வித
குறைகளும் இல்லாதவன் ஆன மிக சிறப்பான நீலமணிவண்ணனுமான மணிவண்ணன் மட்டுமே; நம்
நா அவனை மட்டுமே எவ்வெப்பொதும் துதிபாட வேண்டும் !
ஆனதிருவிருத்தம் நூறு மருளினான் வாழியே !!
ஆசிரியமேழு பாட்டளித்த பிரான் வாழியே !!
ஈனமறவந்தாதி யெண்பத்தேழீந்தான் வாழியே !!
இலகு
திருவாய்மொழியாயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே !!
வானணியும்மாமாடக் குருகைமன்னன் வாழியே !!
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !!
சேனையர் கோனவதாரஞ் செய்தவள்ளல் வாழியே !!
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே. !!
Blessed are We to be born as
Srivaishnavas, singing the glory of Alwars, Acaryas and Emperuman. Glory
to the feet of Swami Nammalwar and Sri Adhipiran. The photos here are of Irapathu Sarrumurai of
7.1.2018 and one can have darshan of Swami Nammalwar without kavacham and Sri
Parthasarathi Perumal in grand floral decoration.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli
Srinivasan Sampathkumar
3.6.2020.
No comments:
Post a Comment