To search this blog

Wednesday, June 17, 2020

Praying Sri Parthasarathi on Ekadasi - பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள் .. .. முடிந்து.


Today 17.6.2020 is  Aani Ekadasi  ~ on Ekadasi days, Sri Parthasarathi Perumal would have periya mada veethi purappadu.  Panguni Ekadasi purappadu was affected and since then there have been no purappadu and Triplicanites have not had darshan of Sri Parthasarathi Emperuman and are weeping in disbelief. We pray our Emperuman that Covid 19 is eradicated sooner and life returns to normalcy. 



கொரோனா ஒரு வைரஸ்.  வைரஸ் ஒரு உயிருள்ள உயிரினம் அல்ல, அது ஒரு புரத மூலக்கூறு (டி.என்.ஏ). அது லிப்பிட் (கொழுப்பு) என்னும் ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்டிருக்கும். இது, கண், நாசி அல்லது சளிச்சுரப்பியின் உயிரணுக்களால் உறிஞ்சப்படும்போது, அவற்றின் மரபணு குறியீட்டை மாற்றுகிறது (பிறழ்வு). அதற்கடுத்த நிலைகளில், உயிரணுக்களை கட்டுப்படுத்தி தனது எண்ணிக்கையை பன்மடங்காக்கும்.  வைரஸ் ஒரு உயிரற்ற புரத மூலக்கூறு என்பதால், அது கொல்லப்படுவதில்லை. ஆனால் அது தானாகவே சிதைகிறது. வைரஸின் சிதைவு நேரமானது வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் பொருளின் வகையைப் பொறுத்தது.

இப்புவியில் இவ்வளவு பாவங்களை செய்யும் நாம் எங்கு சென்று உழல்வோம் ?  ~ அத்தகைய நரகத்தில் நம்மை காக்கவல்லன் எவன் ?? கொடிய நோய்கள் பரவும்போது நம்மை ரக்ஷிக்க வல்லவன் எவன் ?



Not a day passes without our hearing something on Corona and its ill-effects. Today our Prime Minister Narendra Modiji held  the second round of meeting with the Chief ministers  to discuss the road ahead amid coronavirus pandemic.  Modiji  started today's virtual conference by paying tribute to jawans martyred at the borders during India-China clash.  The chief ministers of Maharashtra, Tamil Nadu, Delhi, Gujarat, Rajasthan Uttar Pradesh, Madhya Pradesh, West Bengal, Karnataka, Bihar, Andhra Pradesh, Haryana, Telangana and Odisha and the Lieutenant General of Jammu & Kashmir were part of the meeting.   These states are accounted for over 85% of the total coronavirus cases in the country. Home minister Amit Shah and Defence minister Rajnath Singh also attended the meeting.  The news is grim as India’s covid tally has crossed   3.5 lakh today.

Global cases of the novel coronavirus cases reached over 8.2 million today, as infections surged in Brazil. The virus has so far claimed 444,563 lives thus far.  The United States has by far the largest number of cases with 2,141,276 infections and 117,030 deaths.   Honduran President Juan Orlando Hernández has tested positive for the novel coronavirus.  Meanwhile, China’s capital Beijing imposed restrictions in the city to contain the resurgent coronavirus cases by cancelling scores of flights, shutting schools and blocking off some neighbourhoods. In the past six days, Beijing has witnessed a resurgence of the disease, with some fearing the entire city is headed for a lockdown   ~  when will all this end ? – and what should we do ?

ஜூன் 19ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற தேவைகளுக்கு வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி கிடையாது.


சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்று குறைந்த நிலையில் இன்று திடீரென அதிகரித்திருக்கிறது. சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 919 ஆக மட்டும் இருந்தது. சென்னையில் 10 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியதாக இருந்தது.  இந்த நிலையில் சென்னையில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1276 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்ததால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்பது அரசு தரப்பு கருத்து.

எது நல்லது ? எது கெட்டது ?  எது உண்மை ? எது பொய் ? யாவர் நல்லவர் ? யார் கேட்டவர் ? -எவை செய்ய வேண்டியவை ? எவை செய்யக்கூடாதவை ?  - கேள்விகள் மேலும் கேள்விகள் - ஸ்ரீவைணவர்களுக்கு இது போன்ற ஐயங்கள் எழுவதில்லை. இங்கே நம் தமிழ் தலைவன் மயிலை பிறந்த ஸ்ரீ பேயாழ்வாரின் அமுத வாக்கு. 

அதுநன்று   இது   தீதென்று  ஐயப்படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து.

பேயாழ்வார் நமக்கு வழங்கும் அமுத அறிவுரை :  எது நல்லது, எது கெட்டது, எதை செய்ய வேண்டும் என்றெல்லாம்   ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்,  தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய (ஸ்ரீமன் நாராயணனுடைய) பொற்றாமரை மலர்ப்பதங்களையே தொழுவீராக !  அப்படி தொழும் அனைவருக்கும், எல்லா ஜென்மங்களில் செய்த பாவங்களும், உருமாய்ந்து விட்டு நீங்கி ஓடி விடும். 



Leave your fears ! ~ try and forget all the difficulties !! fall at the lotus feet of Sriman Narayana and pray to Emperuman Sri Parthasarathi for the well being of us all. Here are some photos of Ekadasi purappadu of  18.07.2009 ~ it was Thiruvadipura uthsavam and hence Sri Andal had purappadu with Sri Parthasarathi on that occasion.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.6.2020.
Photos taken with Konica Dimage Z10 3.2 mp camera.










No comments:

Post a Comment