To search this blog

Sunday, February 23, 2020

Thiruvallikkeni Theppothsavam day 1 : 2020 - kulakkarai purappadu


Thiruvallikkeni Theppothsavam day 1 : 2020

On Masi Amavasai starts theppothsavam at Thiruvallikkeni ~ in most big temples, the presiding deity is placed in float constructed in Temple tank and taken around .. ..



It is  purely a  double bonanza  !!   In the divyadesam of Thiruvallikkeni, there are   Grand Celebrations ’ throughout the year.... the tamil month of Masi has special significance.  On the Full moon [Pournami day and Magam Nakshathiram] Sri Parthasarathi Swami visits the shores of Marina, famously known as Masi Magam.   On Masi New moon [Amavasyai] starts the float festival at Thiruvallikkeni.   The tank of Sri Parthasarathi Swami is famous ~ it is‘Kairavini Pushkarini’ that attracts.  This year the Theppa Utsavam began today on 23rd Feb 2020  and here are some photos taken during Emperuman’s purappadu for ascending theppam.


In my younger days, have seen this to be a festival of the masses – so many shops would spring up – many selling eatable items, some wearables for the girls, small sized carousels and merry-go-rounds and more – as people would throng in thousands.  The steps of the thirukulam ‘Kairavini’ would be filled with people everywhere.  One will have to enter at least half-an-hour before the start to get a vantage seat.  Those days,  the tank would brim with water and it would be a big Theppam pulled around – 7,11,13!  - now a days, it is standard 5 rounds around the neerazhi mantap.

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே மாசி அம்மாவாசை துவங்கி தெப்போத்சவம்.  கேரளாவில் பள்ளியோடம் என பெரிய படகு போட்டிகள் திருக்கோவில்கள் முன்பே, முக்கியமாக - திருவாறன்விளை (ஆரமுளா) ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் பம்பை நதியினில் நடைபெறுவது சிறப்பு.  மாசி மாதத்தில் பல ஊர்களில் தெப்ப திருவிழா திருக்கோவில் குளத்தில் நடைபெறும்.   தெப்பக்குளத்தின் நடுவே இருக்கும் நீராழி மண்டபத்தினைச் சுற்றி தெப்பத்தில் பெருமாள் வலம் வர,  இவ்விழா கொண்டாடப்படுகிறது.

பெரியாழ்வார் கண்ணனை இவ்வாறு கொண்டாடுகிறார். "  **  பன்மணி முத்து இன் பவளம் பதித்தன்ன *  என் மணிவண்ணன் இலங்கு பொற்றோட்டின் மேல்,  நின்மணி வாய் முத்திலங்க .. ..  **  கோகுலத்திலே பல மஹிமை காட்டி வளர்ந்து வந்த  நீலமணிபோன்ற நிறமுடை மணிவண்ணன்,  பலவகைப்பட்ட மணி சதகங்களையும், முத்துக்களையும், இனிய பவழத்தையும் பதித்து செய்யப்பட்டதான அழகிய  பொன்தோடு இதர ஆபரணங்களையும் அணிந்து  அழகிய வாயிலே முத்துப்போன்ற பற்கள்  விளங்கும்படி, சிரித்துக் கொண்டு காட்சி அளித்தானாம்.  அத்தைகைய சிறப்புடன், ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் மாலை வெய்யிலிலே எழுந்து அருளினார்.

இவ்வருடம் 23.2.20 அன்று திருவல்லிக்கேணியில் தெப்ப திருவிழா தொடங்கியது.  முதல் மூன்று நாட்கள் ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமானுக்கு தெப்பம்.  இன்று மாலை ஸ்ரீபார்த்தசாரதி இரண்டு கிளிகள் தோள்களை அலங்கரிக்க, உபய நாச்சிமாருடன், குளக்கரை வலம் வந்து, தெப்பத்துக்கு எழுந்து அருளிய படங்கள் இங்கே.:

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.  [Mamandur Veervalli Srinivasan Sampathkumar]
23.2.2020.










No comments:

Post a Comment