At Thiruvallikkeni after
3 days of theppam for Sri Parthasarathi, today 26th Feb 2020 –
it was theppothsavam for Sri Thelliya Singar.
திருவல்லிக்கேணி
திவ்யதேசத்தில் மாசி மாதம் அம்மாவாசை முதல் தெப்போத்சவம் விமர்சையாக நடை பெறுகிறது.
முதல் மூன்று நாட்கள் ஸ்ரீ பார்த்தசாரதி; இன்று ஸ்ரீ தெள்ளியசிங்கர் தெப்போத்சவம் கண்டருளினார்.
ஸ்ரீ நரஸிம்ஹம்
என்றாலே சீற்றம் ~ பல இடங்களிலே ப்ரஹலாதனுக்காக கோபம் கொண்டவர் உக்ரமூர்த்தியாக
சேவை சாதிக்கிறார். திருவல்லிக்கேணி விஷயம்
வேறு! இங்கே மூலவர் யோகநிஷ்டையில் யோக நரசிம்மர்.
உத்சவர் - அற்புத அழகு மிளிரும் அழகிய சிங்கர். இரணியனை இருகூறாக பிளந்த
உருவம் சாந்த சொரூபியாகுமா என ஐயுற வேண்டா!! இதோ நமக்கு திருமழிசைப்பிரான் அருளமுது
:
இவையா பிலவாய்
திறந்தெரி கான்ற*
இவையா எரிவட்டக்
கண்கள் – இவையா*
எரிபொங்கிக் காட்டும்
இமையோர் பெருமான்*
அரி பொங்கிக் காட்டும்
அழகு.
இமையோர் பெருமான் என நித்யஸூரிகளுக்கு
நிர்வாஹகனான ஸர்வேச்வரன் குறித்து ஆழ்வார் வினவுகிறார். நெருப்பை உமிழ்ந்த பாழி போன்ற
பெரியவாய் இவையா ? ; இவையா கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
திருக்கண்கள் ?? இதுவா - அக்னிபோல கிளர்ந்து தோன்றின திருமேனி ~ இதுவா
அவனது திருமேனி அழகு !!! என்ன அற்புதம் !
நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு
பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி அன்பர்கட்குப்
பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று அழகிலே முடிக்கப்பட்டதென்க.
[சுவாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் விளக்கம்]
Sri
Azhagiya Singar was exceptionally attractive – oozing beauty. Is He not
the Lord whose anger ensured that in protection of His baktha Prahalada, the
powerful Hiranya was shredded by the finger nails; in His anger, His red eyes
shone like hot embers, fire came through his gaping mouth, He resembled a
ferocious mighty lion. What a beautiful form it was! – at
Thiruvallikkeni, He is the most beautiful Azhagiya Singar – He is always
beautiful and pleasant – for His anger is only directed at those enemies of His
devotees.
Here are some photos of
Sri Azhagiya Singar purappadu
adiyen Srinivasa dhasan
[Thiruvallikkeni S. Sampathkumar]
26.o2.2020
No comments:
Post a Comment