திருமழிசைப்பிரான் வைபவம் : Thirumazhisai Alwar Sarrumurai 2020
எம்பெருமானான ஸ்ரீமன் நாரணன் எத்தகையன் ? - அவனது கல்யாண குணாதிசயத்தை "மெய்யினோடு பொய்யுமாய்" என விளக்கியவர் யார் ??
யதார்த்த ஞானிகளுக்கு மெய்யனாய், அல்லாதார்க்குப் பொய்யனாய் இருக்கவல்லன் எம்பெருமான். தனது மெய்யடியார்க்கு தனது ஸ்வரூபரூபகுணாதிகளைக் காட்டி அணைப்பவனாயும், ஞான நன்னறிவு இல்லாத நாஸ்திகர்கட்கு அவற்றைக் காட்டிக்தாராதிருப்பவனாயும் உள்ளவனிறே எம்பெருமான், என தனது பாடல்களில் இயம்புவர் இவ்வாழ்வார். சிறந்த தமிழ் புலமையும், பக்தியும், ஞானமும் பெற்றிருப்பினும் - நான் ஒரு அற்பன் - எம்பெருமானின் அடிமை எனும் பக்குவம் பெற்ற சிறந்த ஆழ்வார் நம் பக்திசாரன்
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னமே வந்துதித்த காரணத்தினை பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் - முதலாழ்வார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே வணங்கத் தக்கவன் என்கிற ஶாஸ்த்ர ஞானம் பூரணமாகக் கைவரப் பெற்று, தேவதாந்தர உபாசனத்தை ஸவாஸநமாக விடுத்தவர் என்பதால் நம் மணவாள மாமுனிகள் திருமழிசை ஆழ்வாரை, “துய்ய மதி பெற்ற” என்று உபதேஶ ரத்னமாலையில் போற்றினார். மேலும்
தையில் மகம் இன்று தாரணியீர்!* ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் * - துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான் பிறந்த நாள் என்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.
என நம் ஆசார்யரான மணவாள மாமுனிகள் உகந்த நன்னாள் இந்நாள்.
A
great day today ~ Monday 10th
Feb 2020 happens to be Magam in the
month of Thai marking the birth anniversary of Sri Thirumazhisai Azhwar.
Thirumazhisaippiran’s works are : Naanmukhan Thiruvanthathi (96) and
Thiruchanda Virutham (120). Here are some photos taken during the
Sarrumurai purappadu at Thiruvallikkeni divyadesam of Thirumashisai Alwar
with Sri Varadha Rajar.
Bakthisarar
was born in Thirumazhisai near Poonamallee.
This kshetram is famously known as ‘Mahisara Kshethram’ : mahisara
means mahima (greatness); saram (essence) – the sthalam of Lord Jagannatha, the
essence of all greatness is also known as Madhya Jagannatha Kshetram ~ the
Perumal here is in Veetru iruntha (Sitting) thirukolam with Rukmani and
Sathyabhama ~ inside the sannathi maharishis Brugu and Markendaya are sitting
in penance near Lord. The Emperuman here is Madhya Jagannathan, Adhi
(dakshina) Jagannathan is at Thirupullani and there is the most famous Puri
Jagannath Temple in Orissa.
செவிக்கின்பம்
ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும்
புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய்
நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும்
அத்தனையே தான்.
நம் காதுகளுக்கு இனிமையாக ஒலிக்க வல்லது எம்பெருமான் ஸ்ரீமன்
நாராயணின் திருநாமங்கள் மட்டுமே ! அந்த இனிய திருநாமமே இப்பூவுலகில்
வசிப்பவரெல்லாம் கவலையற்று ஒதுங்குவதற்கு இடமாகவும் அமையும். மகா
புருஷனான ஸ்ரீமன் நாராயணன் ஒருவன் மட்டுமே பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருப்பவன்
. அவனையே தெய்வாதீனமாக அடையப்பெற்றேன், ஆராய்ந்து பார்த்தால் வேதங்களில் தேர்ந்த
பொருளும் அவ்வளவே.
எம்பெருமானைத் தவிர்த்து மற்றையோரைச் கவிபாட நினைத்தால் சொற்களையும்
பொருள்களையும் திருடித் திருடிக் கவிபாட வேண்டும். அங்ஙனன்றிக்கே எம்பெருமான் கவிக்கு
நிறைந்த பொருளாயிருப்பன், என்று அறுதியிட்டு உரைத்தவர் 'உறையிலிடாதவர்' என பிரசித்தி
பெற்ற நம் திருமழிசைப்பிரான்.
சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக
திருவள்ளூர், திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் "திருமழிசை". - உலகுமழிசையும்
உள்ளுணர்ந்து, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் “மாநீர் மழிசை வலிது” என பிரசித்தி பெற்ற இத்தலத்தில் துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தைமாசம் கிருஷ்ணபக்ஷம் பிரதமை திதி கூடிய மகம் நட்சத்திரத்தில், பார்க்கவமுனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக திருமழிசைப்பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு
அம்சம்.
திருமழிசை ஆழ்வார் இவ்வுலகத்தில்
இருந்தது 4700
ஆண்டுகள்.
அதிலே துவாபர யுகத்திலே 1100 ஆண்டுகளும், கலியுகத்திலே 3600 ஆண்டுகளுமாக வாழ்ந்திருக்கிறார் என்று
வைணவ ஆசாரியர்கள் அருளிச்செய்த "பன்னீராயிரப்படி" வியாக்யானம் தெரிவிக்கிறது
என பெரியவர்களிடம் கேட்டுள்ளேன். தனது காலத்திலே, ஆழ்வார் சமணம், பௌத்தம், சைவம்
என பல்வேறு சமயங்களையும் கற்று, அந்த சமயத்தின் கோட்பாடுகள், அவற்றைச் சார்ந்த நூல்கள்
ஆகிய அனைத்திலும் புலமை பெற்றவராய் இருந்தார்.
"சாக்கியம் கற்றோம் சமணமும் கற்றோம் அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூலும் ஆராய்ந்தோம்" என்று
உரைத்தார்.
சைவ மதத்தில் புகுந்து, சிவ வாக்கியராய் இருந்து சிவனைப்
போற்றித் துதிகள் பாடி, அதிலும் தான் காணவேண்டிய வஸ்து கிடைக்காமல், பின்னர் பேயாழ்வாரால்
திருத்தப்பட்டு, எம்பெருமானே சிறந்த தெய்வம் என்று உணர்த்தப்பெற்று, ஸ்ரீ வைஷ்ணவரானார்
.
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 - நான்முகன் திருவந்தாதி (96) திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை "துய்ய மதி பெற்ற" என ஸ்ரீமணவாளமாமுனிகள்
கொண்டாடுகிறார். இன்று 10.2.2020 இவரது சாற்று முறை மஹோத்சவத்தில் - திருவல்லிக்கேணியிலே
- ஆழ்வார் ஸ்ரீ தேவப்பெருமாளுடன் புறப்பாடு கண்டு அருளினார். வீதியில்
இராமானுச நூற்றந்தாதி சேவிக்கப்பெற்றது. முன்னதாக காலை அவர் இயற்றிய நான்முகன்
திருவந்தாதியும் திருச்சந்தவிருத்தமும் திருக்கோவிலினுள்ளே
சேவிக்கப்பெற்றன. திருவீதி புறப்பாடு கண்டு அருளிய பின்பே, கோவிலினுள் - திருவாய்மொழி
பத்தாம் பத்து சாற்றுமுறை; ஸ்ரீவரதராஜப் பெருமாள் அமுது செய்த பிரசாதம், திருமழிசைப்பிரானின் ஆச்சார்யனான
பேயாழ்வார் சந்நிதிக்கு குடை, திருச்சின்ன மரியாதையுடன் ஏளப்பண்ணப் பெற்று, பேயாழ்வார் சுவீகரித்த பின்பு திருமழிசைப்பிரானுக்கும்,
அவரது பக்தர்களுக்கும் வழங்க பெற்றது.
~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன் (மாமண்டூர் ஸ்ரீனிவாசன்
சம்பத்குமார்)
PS : திரையுலக ஆரம்பத்தில் பல புராண கதைகள் படங்களாக வெளிவந்தன.
1948ல் சி. கண்ணன் பிள்ளை தயாரிப்பில் எம். எம். தண்டபாணி, பி. வி. ரங்காச்சாரி
மற்றும் பலரும் நடிக்க, திரு எஸ். வி. வெங்கட்ராமன் மற்றும் திரு டி ஆர் ராமநாதன் இசையமைப்பில்
திரு தண்டபாணி தேசிகர் இனிதே கர்நாடக சங்கீதம் இசைக்க வெளிவந்த படம் ~ ஆழ்வாரின் கதையான
'திருமழிசை ஆழ்வார்'.
No comments:
Post a Comment