To search this blog

Saturday, August 10, 2019

Thirumayilai Sri Adhi Kesava Perumal Thirumanjanam 2019


திருமஞ்சனம் என்பது ஒரு அற்புத அனுபவம். திருமயிலை கேசவப்பெருமாளின் வனபோஜன உத்சவத்திலே திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில் நடைபெற்ற அற்புத திருமஞ்சன வைபவ படங்கள் இங்கே : 


திருமஞ்சனம் ஸ்ரீவைணவ திருத்தலங்களிலே  எம்பெருமானது திருமேனிக்கு திருநீராட்டு சிறப்பாக நடைபெறும் வைபவம்.   அஞ்சனம் என்பது ,பெயர்ச்சொல்.   அஞ்சனம் என்றால் மை என்றும்  பொருள்.  கண்ணுக்கு இடும் மையை தவிர, அஞ்சனம் என்ற சொல்லுக்கு : தாது நஞ்சு வகை; கண்ணிடு மை; சலவைக் கல்; அவுரி; கரியாற் சித்திரம் வரையப் பட்ட படத்துணி (அஞ்சனப்படம்); எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை  என பல அர்த்தங்கள் உண்டு.   திருமஞ்சனம் என்பது திருக்கோவில் எம்பெருமானின் திருமேனிக்கு நறுமண எண்ணெய் பூசுவதாகவும் உள்ளது.  மெய்யஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் பூசுவது எனவும் அதுவே  திருமஞ்சனம் என மருவியிருப்பதாகவும் கொள்ளலாம்.

கண்ணன் மதுராவில் ஜனித்து கோகுலத்தில் வளர்ந்த ஒவ்வொரு பருவத்தையும் மிக அழகாக தனது பெரியாழ்வார் திருமொழியில் பாடுகிறார் பட்டர் பிரான் எனும் விஷ்ணுசித்தர்.  இதோ கண்ணனை மஞ்சனமாட அழைக்கும் பாடல்களில் ஒன்று. 

எண்ணெய்க் குடத்தை  உருட்டி இளம்பிள்ளை கிள்ளியெழுப்பி*
கண்ணைப் புரட்டி விழித்துக் கழைகண்டு செய்யும் பிரானே*
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகடல் ஓதநீர் போலே*
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.

திருவாய்ப்பாடியில் வளர்ந்த கண்ணபிரான் தனது பால்யத்தில், எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டிவிட்டு, உறங்குகிற  சிறு குழந்தைகளை   கிள்ளி தூக்கம் களைந்து எழுந்திருக்கச் செய்து, கண் இமையை தலைகீழாக மாற்றி (அப்பூச்சி காட்டி) விழித்து,  பல பொறுக்க முடியாத தீம்புகளை (கழைகண்டு) செய்யும் பிரானே ! - உனக்கு நல்ல பழங்களை  உண்ணும்படி கொடுப்பேன், கடலினுடைய அலைகளையுடைய நீர் போலே திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற, உத்தமபுருஷனே! - வந்து திருமஞ்சனம் கண்டு அருள வேணும் என விழைகிறார் நம் பெரியாழ்வார். 

(21.7.2019) was  Poorattathi in the month of Aadi and it was a great day at Thiruvallikkeni as Thirumayilai Sri Adhi Kesava Perumal had vanabojana uthsavam and had thirumanjanam at Thiruvallikkeni Sri Vanamamalai Mutt.

Mylapore and Thiruvallikkeni existed much before the coming of the British.  Sri Adhi Kesava Perumal Devasthanam better known as ‘ Mylai Kesava Perumal Kovil’ is near Mylai Kapaleeswarar Temple and the Chithirai kulam belongs to this Temple  The presiding deity here is Sri Adhi Kesava Perumal and thayar is Mayuravalli – the place itself was historically known as ‘Mayurapuri’. The temple is quite ancient and dates back to centuries.  This perumal Sri Adhi Kesvar had purappadu to Thiruvallikkeni and had  Vana bhojanam at Thiruvallikkeni Sri Vanamamalai Mutt.   After the grand thirumanjanam – there was  periya mada veethi purappadu and later  thirumbugal purappadu to Thirumylai.

Here are some photos of Thirumanjanam of Sri Adhikesavar

~adiyen Srinivasa dhasan.





















No comments:

Post a Comment