இன்று (13.8.2019) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள்.
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை**
.. ..
Sri Alavandhar @ Periamet
[pic courtesy Kannan swami]
At Chennai, it has rained
little – residents are still worried
about water shortage. Every street we see water tankers and people running
after them with colour colour plastic pots. Though there are four
reservoirs of Poondi, Cholavaram, Redhills and Chembarakkam as lifelines for
drinking water needs of Chennaites, there is another important water source
that supplements daily water supply to the city and that is more than two
hundreds of kilo meters away……
ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து
பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம்
செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர்
குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.
“I take you all on
time-machine (in a boat) to a period aeons ago … started a great novel written
in 1950” … the wonder Ponniyin Selvan of Kalki – much happens here – the
story starts with the description ‘bounded by Chozha kingdom and
Thondainaadu, nearer ThillaiChirrambalam is a vast ocean-like lake ……….-and on
that 18th day of Aadi – a young horse rider ‘VanthiyaThevan’ was …… ’
here are few lines from that great novel :
ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம்
இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும்
ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக்
கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது
மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர
நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின்
எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப்
பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. வந்தியத்தேவன்
களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஆஹா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்?
தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின்
காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள்
என்றே சொல்லத் தோன்றும் அல்லவா?
Wonder what the
description is all about ~ it is the immortal writing of Kalki ‘Ponniyin
Selvan’ novel. The lake spoken about is 235 km away from Chennai, yet
becoming its lifeline, supplying roughly 50 to 180 million litres of water to
the city every day. The lake owes its existence to Chozha prince
Rajaditya who in the 10th century
assigned his men the task of excavating this tank, to collect the surplus
waters of the Kollidam River.
விஜயாலயச் சோழனின் பேரனான
முதலாம் பராந்தகச் சோழன் சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப்
பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும் முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி,
சூரசிகாமணி முதலிய பெயர்களோடு விளங்கிய இவன், வீர நாராயணன் என்னும் பெயரையும் பெற்றிருந்தான். 1011 - 1037 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ஏரி,
16 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. தொடக்கத்தில் 74 மதகுகளும்
வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரைத்
தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க
முடிகிறது.
அமரர் கல்கி தனது “பொன்னியின்
செல்வன்” நாவலின் கதையை, அப்போதைய சோழ சாம்ராச்சியத்தின் நிலையை, சுவையோடு தொகுத்தளிக்க
‘வந்தியத்தேவன்’ என்கின்ற கதாபாத்திரத்தை கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தார். அக்கதாபாத்திரத்தின் போக்கிலேயே நம்மை காஞ்சி, கடம்பூர்,
குடந்தை, திருவையாறு, தஞ்சை, திருப்புறம்பியம், பழையாறை, கோடிக்கரை, இலங்கை, மாதோட்டம்,
அனுராதபுரம், தம்பள்ளை, நாகைப்பட்டினம் என ஒவ்வொரு இடமாகத் தரிசிக்கச் செய்தார். இன்றைய தமிழகத்திலே, சித்திரை வெயிலிலும், வற்றிப்போன
காவிரிக் கரையோரத்தில் தாமரையும் அல்லியும் மண்டிக் கிடக்கும் இரண்டு மூன்று குளங்கள்
மிச்சம் இருக்கின்றனவென்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நீர் மேலாண்மைக்குப் பெயர்போன
சோழ தேசம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது ஒரு இனிமையான கற்பனை. அதன் உண்மை பிரதிபலிப்பு தான் வீராணம் ஏரி !!
In the 1830s,
Arthur Cotton, the engineer who later harnessed the waters of the Krishna
and Godavari, studied the tank in detail. He noted that there was no serious
defect in the tank (this, 900 years after it was constructed) .. in recent
decades much water has flown in concrete pipes becoming hotly debated
corruption topic. The Veeranam lake derived its name from the nearby place ‘Veera
Narayana puram’ which is of great significance to Srivaishnavaites. From
Veeranam lake in Cuddalore from which water is brought in by 230 km long
pipeline. The Veeranam project, to supply water to Chennai, was
conceived in 1967; later got mired in rampant corruption; once there were so
many pipes lying unutilized in the city that were synonymous with the
corruption in the project . The project's completion in 2004 was a major
political victory for the AIADMK government of the time due to the project's
long history of corruption and politicking. At some point of time, water
started flowing from the lake to Chennai.
Sri Veeranarayana Perumal
Kovil - Alavanthar Avathara sthalam – Kattumannar Kovil.
Sri Alavanthar at
Avatharasthalam
Sri Alavanthar @
Thiruvallikkeni
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு
செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய
பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில்
நாதமுனிகள். ஸ்ரீமன்நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார் மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார்.
ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில்
அவதரித்தார். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர்
ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும்
யாமுனாசாரியர். நாதமுனிகளின் பேரன்.
நாதமுனிகள் வடநாட்டில்
கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால்
நம்பி சூட்டினார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர். பூர்வ
ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய
அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச்
செய்துள்ளார். :
நிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதி பெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.
- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார்
நம்மைக் காத்து அருள்வார்.
நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.
வாதத்தில் வெற்றி பெற்றதால்
கிடைக்கப்பெற்ற ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், மணக்கால் நம்பி
அவரை மறுபடி சம்பிரதாயப்பணிக்கு திரும்பப்பெற தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு
வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு
சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு, நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த
நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை
தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அரண்மனைக்கு சென்று கீதையின்
உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாருக்கு
’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம்
அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார்.
ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.
ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம்
ராமானுஜரைப் பற்றி கூறினாராம். இராமானுஜர்
ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை
அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே.
ஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் " எட்டு" -
இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகம ப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.
Now getting back to the
lake, Sri Vaishnavaites have more to remember and like of this. The
Veeranam lake derived its name from the nearby place ‘Veera
Narayana puram’ which is of great significance to Srivaishnavaites.
It is here that our Acharyars Nathamunigal and later Sri Alavanthar were
born. Yamunaaryar [Alavandar] born in Aadi Uthirada nakshathiram, was a genius
– a child prodigy known for his prowess of eka-santha–graha (remembering
forever by learning only once). He was known for his sparkling intelligence,
didactic logic and exceptional devotion to Sriman Narayanan. His
defeating a much learned Akkiyalvan is very famous. After the debate, the
Queen hailed Yamunar as 'Alavandar'-' one who came to rule / save me'.
He gave our Sampradhayam, priceless
treasure-trove of 8 works of which most important are the : Chatusloki on Pirattiyar;
Sthothra Rathinam extolling Emperuman; Sri Geethartha Sangraham, which formed
the basis for Udayavar’s Gita Bashyam. He identified and gave us
the Greatest of Acharyas – ‘Sri Ramanujar’ as he spontaneously called Udayavar
‘He is the First of all - 'ஆ முதல்வனிவன்' [aa muthalvan ivan]’.
~ adiyen Srinivasa
dhasan.
13th Aug 2019.
Comprehensive and commendable work
ReplyDelete