To search this blog

Friday, July 19, 2019

Sri Athigiri Vaibhavam 2019 : அத்திகிரி அருளாளர் வந்தார் : உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார்


Ever imagined in your dreams those days of Emperors, their mighty horse warriors, battles and more ~ Kancheepuram would easily fit the description .. .. and amongst its rulers, were the Pallavas of whom, Simha Vishnu’s (575-600 A.D.) – who waged war against the Cholas, the Pandyas and their allies. He put an end to the Kalabhra interregnum in Tondaimandalam (Kanchi region) and extended his kingdom southward upto the Kaveri delta. Pallavas are known for their architecture - the development of temple architecture, particularly Dravida style, not only set the standard in the South Indian peninsula, but also largely influenced the architecture of the Indian colonies in the Far East. The characteristic Pallava or Dravidian type of Sikhara is met with in the temples of Java, Cambodia and Vietnam.

Now all roads, all thoughts, every action lead to Thirukachi ~ for lakhs are thronging Kanchi every day to have darshan of Athigiri Perumal ~ before, we proceed – this is no post on whether the Lord is made of Athi (fig) tree, whether He took His place inside the temple tank during invasion are simply irrelevant.  Sri Athigiri Arulalar – the present thirumeni now worshipped was the one worshipped by our Acaryas and our fore-fathers many many years ago and that is the sole reason for us to go near Him and have His darshan.  Though I was a teen-ager, could not have darshan in 1979 and unlikely to have darshan next time in 2059 – today (19th July 2019) provided the life’s great moment of His darshan. 

pic credit : Sri VN Kesavabashyam swami 

நம் அத்திகிரி வரதன் எத்தகையவன் ? .. .. எம்பெருமானின் பரம போக்கியமான வைகுண்டத்தில் காணும் பெருமாளை வரதனாய் காண நாம் பாக்கியம் பெற்றோம் ! அவரைக்கண்ட  கணத்திலேயே நம் ஊழ்வினைகள் நொறுங்கி விலகின.  பெரிய திருவடியை தன்  வாஹனமாகக் கொண்டு  அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்  வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிற தேவாதி ராஜனை - 'அத்தியூரான்  புள்ளை  ஊர்வான்' என விழிக்கிறார் நம் பூதத்தாழ்வார். 

The area where Sri Varadharaja Perumal temple is located is now known as Vishnu Kanchi.  Kanchi has a rich history and was associated with the Pallava dynasty as the Pallava rulers ruled the Thondai mandalam for long.  Pallavas established their capital at Kanchi (modern day Kanchipuram famous for weaving and silk sarees) which gradually became popular and famous for its temples and as centre of Vedic learning. The city famous for silk sarees and  is called as "City of 1000 Temples"; a famous Sanskrit poem ascribes it as ‘nagareshu kanchi’ – the best of the cities.

அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள், பிரம்மா செய்த யாகத்திற்கு மகிழ்ந்து வரம் தந்ததால் வரதராஜர் என அழைக்கப்படுகிறார்.  எம்பெருமானை அயிராவதமே மலை உருவில் தாங்கினதால் இதற்கு ‘அத்திகிரி’ என பெயர் பெற்றது.   திருக்கோவில் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள அனந்த சரஸ் எனும் திருக்குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் தான் மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

Over the past 19 days, billions of people have had darshan ~ so much has been written on Him, great Srivaishnavaite scholars have spoken on media and there is so much circulating in the media, that worthless adiyen can add nothing more.  The craving for having His darshan was ever increasing – and alongside the fears grew. People have been telling and writing about the ordeals, lack of facilities, lack of planning, the difficulties faced by the bakthas, and most importantly the long hours one would have to wait for getting His darshan.

This day [19.7.19]  dawned so well for our family – we started from home around 1.15 am – reached Kanchi [Pammal / Wallaja route] – had our vehicle parked near Pachaiyappas college and walked to Eastern gate. It was dark but there were more than 10000 people lined up as we joined the queue.  At so early morning, people of all ages, young, old and more – with children were almost well disciplined, chanting the names of Sriman Narayana [Govindha nama sankeerthanam] and talking about His mahimai.  Those waiting on the streets slowly swelled – yet was largely orderly and by 0430 am, crowd started moving as the temple gates at eastern side were opened.  Then was the zig-saw formation winding its way in front of the Temple gate and then inside the sands of the temple – it was long long queue and around 08.45 am – excitement went many notches as we were nearing the vasantha mantap. There were VIPs and others waiting – while tens of thousands / lakhs of people were standing anxiously to have His glimpse. 

It was a few seconds of divine grace – fully imbued with magnanimity, thaya, karunyam, compassion and much much more .. .. even as one was leaving, mind wandered for that another golden opportunity to have His darshan. 

பள்ளிகொண்ட திருக்கோலத்தில் லக்ஷோபலக்ஷ பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நம் அத்திவரதனை சுவாமி தேசிகர் தமது திருச்சின்னமாலை எனும் பாடலிலே -  ஹஸ்தகிரியில் எழுந்தருளியிருக்கும் பேரருளாள பெருமாள் , யானை, குதிரை, தேர் ஆகிய வாஹனங்களில் கண்ணை மயக்கும் வண்ணம் வந்தார்; மனதால் நினைத்த மாத்திரமே வேண்டிய வரத்தை அருளும் பெருமாள் வந்தார். தேவர்களுக்கும் பக்தர்களுக்கும் மோக்ஷத்தையளிக்கும் பெருமாள் வந்தார். யானைக்கு அருளிய பெருமாள் வந்தார்.உத்திர வேதிக்குள்ளே ஆவிர்பவிப்பவர் , நித்யசூரிகளால் தொழப்படுபவர், பக்தர்களுக்கு திருவடியை காண்பித்து அடைக்கலம் அருளும் பெருமாள் வந்தார் என ஆர்ப்பரிக்கிறார்.

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
கச்சிதனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரம் தரும் தெய்வப்பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்
மூலம் என ஓலம் இட வல்லார் வந்தார்
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்
உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
ஸ்ரீ அத்திகிரி அருளாளனே சரணம், சரணம் !!

Here are some photos of the bakthas who stood in the queue waiting to have His darshan.   

                                  ~ அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.  S(rinivasan) Sampathkumar.
19th July 2019.
















 

No comments:

Post a Comment