To search this blog

Saturday, July 13, 2019

‘Aani Anusham ~ Sri Natha Munigal Sarrumurai’ - 2019


‘Aani Anusham ~ Sri Natha Munigal Sarrumurai’ - 2019

இன்று 13.7.2019  ஆனி அனுஷம்  ~ நம் ஆசார்யர் சுவாமி நாதமுனிகள் சாற்றுமுறை. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள்.   


பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு வந்திய தேவனையும் அவனது குதிரை மெல்ல நடந்து சென்ற கடல் போன்ற வீராணம் ஏரியையும் நன்கு தெரியும்.   தமிழகத்தில் வாழ்ந்து வரும் 50வயதுக்கு மேற்பட்டோருக்கு வீராணம் ஏரி, அதனை சுற்றிய ஊழல், பெரிய பெரிய பைப்புகள், ஒரு காலத்தில் அதனுள் குடித்தனம் நடத்திய ஏழைகள் என பல நினைவுகள் மலரும்.  வாணர் குல மாவீரன் வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார்.  வந்தியத்தேவனின் கதாபாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.  அவரது குதிரை வீராணம் ஆற்றின் கரையில் பதினெட்டாம் பெருக்கு அன்று மக்களிடையே நடந்து போவது உங்களில் பலருக்கு ஞாபகம் வரலாம் !  

                             Chennaites would well remember this project that ran into many a political troubles ~  first conceived in mid 1970s,  the Veeranam project, was to deliver water to the parched metropolis of Chennai.  The pipes at some point were lying ungainly at many places, providing housing for some .. .. years later water was not to  flow from the parched Veeranam tank, 235 km away from the city, but instead the Chennai Metropolitan Water Supply and Sewerage Board (Metrowater)  dug out  a network of 45 deep borewells north of the tank.

The reference pops up often.  Last year Chief Minister Edappadi K. Palaniswami announced that corruption and other criminal cases pending against around 10 former DMK Ministers will be tried by a special court the State government had set up. Addressing an event marking the 47th foundation day of the AIADMK in Veerapandi town, Mr. Palaniswami claimed that scam in execution of the Veeranam project was still lingering in the minds of the people,  a controversy that has awakened from a two-decade long slumber.  The brainchild of a former Tamil Nadu chief minister, C.N. Annadurai, implementation tried during Karunanidhi reign, MGR had it scrapped in 1976, citing corruption and technical non-viability. In the final report, the Sarkaria Commission has cast very serious aspersions on the veernam scheme and the then CM Karunanidhi abusing his official position as Chief Minister, unduly  favouring  Sathyanarayana Brothers with the award of the contract for the Veeranam project, directing  the Chief Engineer, ussain, to tailor his recommendations on the tenders in such a manner as would enable the Government to accept the tender of Sathyanarayana Bros....

At Chennai, in summer we start worrying about the drinking water as the storage capacity in the tanks that supply water to the metropolis run dry.  In the  sweltering heat – residents are worried about water shortage.  Every street we see water tankers and people running after them with colour colour plastic pots.  Though there are four reservoirs of Poondi, Cholavaram, Redhills and Chembarakkam as lifelines for drinking water needs of Chennaites, there is another important water source that supplements daily water supply to the city and that is more than two hundreds of kilo meters away……  The lake spoken in Ponnyin selvan is  about is 235 km away from Chennai, yet becoming its lifeline, supplying roughly 50 to 180 million litres of water to the city every day.  The lake owes its existence to Chozha  prince Rajaditya  who in  the 10th   century  assigned his men the task of excavating this tank, to collect the surplus waters of the Kollidam River.

                                                                                   In the 1830s,  Arthur Cotton, the engineer who later harnessed the waters of the Krishna and Godavari, studied the tank in detail. He noted that there was no serious defect in the tank (this, 900 years after it was constructed).  The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to Srivaishnavaites. 


நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில்  உள்ள கோவில் சுவாமி நாதமுனிகள்  அவதார திருத்தலம்.   ஸ்ரீமந்நாதமுனிகள், இத்திவ்ய தேசத்தில், ஈச்வர பட்டருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீரங்கநாதமுனி, நாதப்ரஹ்மர் என்று திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவகானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர்  தொடங்கி வைத்தார். அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், மேல்கோட் திருநாராயணபுரம்  மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது.



நாதமுனிகள்  தமது தந்தை மற்றும் குமாரருடன் (ஈச்வர முனி) -  வடமதுரை, விருந்தாவனம்,  கோகுலம், கோவர்தனகிரி, த்வாரகை, பதரிகாஸ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்யதேசங்களை மங்களாசாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு) கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்ப பல திவ்யக்ஷேத்திரங்களை சேவித்துக்கொண்டு திரும்பினார். 

ஒரு சமயம் சில வைணவர்கள் இவரது குடில் முன்பே ''ஆராவமுதே!  அடியேன் உடலம் நின்பால் அன்பாயே' எனும் திருவாய்மொழி பாசுரத்தை சேவித்ததை கேட்டுண்டு - அதன் முடிவில் -  ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருவதால், அப்பாசுரங்களை தேடி அலைந்தார்.  ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் சிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார்.  அவரிடம் கண்ணிநுண்சிறுத்தாம்பு  பாசுரங்களை கற்று, அவற்றை  12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்தித்து, தமது  அஷ்டாங்க யோக  பலத்தால்  நம்மாழ்வாரைத் தியானித்து  நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் மற்றும் அதனுடைய சகல அர்த்த விஷேசங்களையும்  - சடகோபனிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டார்.  நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளியதையே உபதேசரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச்செய்தார். இவ்வாறாக நாம் அநுஸந்திக்கும் 'நாலாயிர திவ்யப்ரபந்தம்' - ஸ்ரீமந் நாதமுனிகளாலேயே நமக்கு கிடைக்கப்பெற்றது.

நாதமுனிகள் முயற்சியால் தான் நமக்கு இந்த ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ (அருளிச்செயல்) கிடைத்தது. ஸ்தோத்ரரத்னத்தில் ஆளவந்தார் முதல் மூன்று ஸ்லோகத்தில் நாதமுனிகளுடைய பெருமைகளையே கூறுகிறார். “அச்சுதன் மீது அளவில்லாத, உண்மையான அன்பும் அறிவும் உடையவரை, ஸம்ஸாரத்திலிருந்து அனைவரையும் காப்பற்ற வந்தவரை, முழுமையான பக்தியும் உடையவரை, யோகிகளுகெல்லாம் தலைவருமான நாதமுனிகளை வணங்குகிறேன்” என்று ஆளவந்தார்  கூறுகிறார்.


                       In Sri Vaishnava Satsampradhayam, great emphasis is on ‘Guru Parampara’ that starts from Sriman Narayana Himself, down to Sri Nathamunigal who has to be remembered ever for what he gave us – *Sri Naalayira Divyaprabandham*.  Sri Nadhamunigal was born in  Anusha nakshatra of ‘Ani’ month at Sri Veeranarayanapuram.   Sri Nathamuni went on a long pilgrimage that took him to holy places  like Mathura, Vrindhavan, and other holy places including Puri.  Back home, upon hearing some Srivaishnavaites reciting Thiruvaimozhi pasuram (that had sort of become extinct ) ‘Aaravamuthe’ and curious to know the rendering in full  ~ he followed its trail that led him to KUmbakonam; Lord Aravamudhan directed him to ThiruKurugoor; with the divine blessings, collated Sri NalayiraDivyaprabandham and thence onwards these hymns are continually sung in  Divyadesams and other Sri Vaishnavaite temples,  Dravida  Veda.

Nathamunigal was also a great Bhakti Yogi and practiced the Yoga of eight accessories ( ashtAnga yoga); he authored the  treatise “Yoga Rahasya”.  He was also an exponent of divine music  who initiated the ‘singing of divyaprabandham ~ now known as ‘Arayar Sevai’. Without this great Acharyar’s efforts in retrieving aruliCheyal,  theVaishnava World would not have got the rich possessions that we have today.  Alavanthar in his SthothraRathnam sings the glories of Nathamunigal in the first 3 slogas.

                            Acharyar Nathamunigal codified the treasure of the most divine ‘Nalayira Divya Prabandham’. He also revived the Adhyayana Utsavam instituted by Thirumangai Azhwar.  After him, the Guru paramparai mantle passed on to Uyyakondar, Manakkal nimbi and  thence to Yamunacharyar @ Aalavandhar, the grandson of NathaMunigal. 

Salutations to Naatha muni who had the single minded devotion to the Lord and who is the treasure of both Gnaana and Vairaaghya.  At Thiruvallikkeni Sri Nathamunigal had purappadu with Sri Parthasarathi.  Here are some photos taken during today’s  purappadu.

~adiyen Srinivasadhasan. [S. Sampathkumar]
13th July 2019.
















No comments:

Post a Comment