To search this blog

Thursday, July 11, 2019

Aani Swathi ~ Aani Garudan and Sri Periyazhwar sarrumurai 2019


Today 11th July 2019 is a day of significance for the Srivaishnavaites – today is “Aani Garudan”  for Sri Azhagiya Singar  – this day being ‘Swathi nakshathiram in the tamil month of Aani’ marks the birth anniversary [sarrumurai] of Sri Periyazhwar.  Generally Periyazhvar sarrumurai would fall during Aani brahmothsavam of Sri Thelliya Singar [once in 4 years] – it occurs thus – Sri Azhagiya Singar Aani garuda Sevai and Sri Periyazhwar velli yanai vahanam.




ஸ்ரீவைணவனுக்கு திருமண் காப்பு அடையாளமாக (உண்மையில் இது நமக்கு ரக்ஷை) இருப்பதை போல; ஸ்ரீமன் நாராயணனை தொழும் அனைத்து அடியார்களும் ஏனையோரும் அறிந்தது  **'திருப்பல்லாண்டு'**

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு

- இந்த அரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்தவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆனி மாசம் சுக்லபக்ஷம், ஏகாதசி கூடின ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கருடாம்சராய், அந்தணர் குலமான வேயர் குலத்தில் முகுந்தபட்டர் என்பவருக்கும் - பதுமவல்லி நாச்சியாருக்கும்  புத்திரராக அவதரித்தவர் விஷ்ணு சித்தர்.   ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில்  வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர். 

Periyaazhwaar was born as ‘Vishnu chithar’ at Sri Villiputhur.  With exceptional commitment, he rendered  floral service to the Lord Vada Bhathrasayee.  With the blessings of Lord, he proved before the Pandya King, the uniqueness of Sriman Narayanan.  He was honoured by the King and was taken around atop bridled elephant.  To honour him Lord Sriman Narayana along with Pirattiyar appeared on Garuda vahanam and Vishnu Chithar instead of asking for favours [which any other normal human would have done] started singing paeans in a manner that he sought that HIS wealth and other blessings should remain as they are without diminishing in any manner.  Such was his devotion that he was called ‘Periyaazhwaar’ –the elderly and bigger person  among all others. 

நம் பொய்யிலாத மணவாள மாமுனிகள் தம் உபதேசரத்தினமாலையிலே 'பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான் - "பெரியாழ்வார் எனும் பெயர்" என்கிறார்.  அது என்ன பொங்கும் பரிவு ? என கேட்க தோன்றுகிறதா ?



வடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில்  இருக்கும் வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை  சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார்- விஷ்ணு சித்தர்.   வல்லப தேவன்  என்ற அரசன் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஒரு நாள் இரவு அவன் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணனது  வார்த்தைகளால் சிந்தனை கிளரப்பெற்று  'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்ன வழி?' என்று வினவினான்.  விஷ்ணுசித்தர் '‘ஸ்ரீமந்நாராயணனே  பரம்பொருள்; பிரபஞ்ச காரணமான பரமாத்மா; அவனடி சரணே சகலத்தையும்  அடையும் உபாயம்’ என்று பரத்துவத்தைப் பாண்டியன் சபையில் நிலைநாட்டினார்.  அப்போது கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லப தேவன் மகிழ்ந்து 'பட்டர்பிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரச்செய்தான்.   அதைக் கண்டுகளிக்க  எம்பெருமான் ஸ்ரீமன்நாரணனே பிராட்டியுடன் கருடன் மேல் ஏறி  வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில்  உள்ள மணிகளைத்  தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.

பொங்கும் பரிவு என்றவுடனே பால் ஞாபகம் வரலாம்.  பாலில் நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்ற தாதுப் பொருள்கள் உள்ளன. பாலைக் கொதிக்க வைக்கும்போது தனது கொதிநிலையான 100 °C அடையும் போது நீர், கொதித்து நீராவியாக மாறுகிறது. அதேநேரத்தில் கொழுப்பு, புரதம் போன்றவை தனியாகப் பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஆடையாகப் படர்கின்றன.  நீராவி மேல் நோக்கி ஆவியாகச் செல்கிறது.  அந்த நீராவியை மேலே செல்லவிடாமல் பாலில் படர்ந்துள்ள பாலாடை தடுக்கிறது. அப்போது அந்த ஆடையைத் தள்ளிக்கொண்டு நீராவி மேலெழும்பி வருவதைத்தான் பால் பொங்குகிறது என்கிறோம்.

பரிவு என்பது ஒத்துணர்ச்சி, அஃதாவது பிறருடைய துன்பத்தில் கலந்து அவர்களுடன் அனுதாபப்படுதலும் அவர்கள் இன்பத்தில் கலந்து மகிழ்தலுமாம்.  பெற்ற தாய்  தன குழந்தைகள் மீதும், பசு தன்  கன்றின் மீதும் பரிவு காட்டும்.  எம்பெருமானுக்கு நன்றாக காய்ச்சிய பாலை சமர்ப்பிப்பது நம் சம்ப்ரதாயம்.  அப்படி அவருக்கு திருவமுது செய்விக்கும் போது  அதிக சூடான பால் எம்பெருமானுக்கு தீங்கு தருமோ ! என கவலைப்படுவது பொங்கும் பரிவு !! பெருமாளுக்கு நாவல் பழம் சமர்ப்பித்தால் அதன் குளிர்ச்சி அவருக்கு கேடு விளைவிக்குமோ என நினைத்தவர் நம் ஆசார்யர்
ஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் கருட வாஹனத்திலே எம்பெருமானே எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார்  இந்நிலத்திலே எம்பெருமானுக்கு  யாராலே என்ன தீங்கு விளைந்துவிடக்கூடுமோ என்று அதிசங்கைப்பட்டு ‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு; பல கோடி பல்லாண்டு என வேண்டினவர்.    எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்ல தேஹவலிவு கொண்டவனும்  மல்லர்களை  புறந் தள்ளினவனுமான  புஜபல பராக்கிரமசாலியை கண்டு – மீண்டும்,  மீண்டும் மங்களாசாஸநம் பண்ணின பரிவாளர் நம் பெரியாழ்வார்.   சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார்.

பெரியாழ்வார் இயற்றியவை "திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்". 

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்
தான் மங்களம் ஆதலால்*-- ~~~~

                                  'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே- மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது - "திருப்பல்லாண்டு" என நம் ஆசார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார்.  ஸ்ரீநாலாயிர திவ்யப்பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு.  திருப்பல்லாண்டு மொத்தம் 12  பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*.

Let us prostrate at the feet of the Alwar and pray that we are bonded with Emperuman ever.
adiyen Srinivasadhasan (S. Sampathkumar)
11th Jul 2019.

















No comments:

Post a Comment