To search this blog

Tuesday, July 24, 2018

Sri Ramanujar Vellai sarruppadi ~ Kuresar kashayam sarruppadi 2018


புண்ணியர் தம் வாக்கிற்பிரியா ராமானுசா!
Yathiraja astride horse wearing white silk !! 2018
வெள்ளை ஆடைகளை அணிந்து இராமானுஜர் :

The morning of 17th Apr 2018 would remain etched in my memory – on that day,  had the fortune of visiting Sriperumpudur ~ the avatara sthalam of Swami Ramanujar on a very significant day.  The mada veethis wind lengthily at this divine place – yet, on day 6 of uthsavam,  Acaryar purappadu extended miles on the Bangalore highway.  I had darshan of Swami Ramanujar at place a few kilometers away from the Temple and this was termed as ‘Delhi purappadu’.. .. .. confounding !! – more as I was to have darshan of Swami Ramanujar astride a horse wearing white robes.  Yathiraja, the King of all hermits wearing while and not the saffron associated with Yathis ~ the answer lies in a sad story which gets enacted on 6th day of Acaryar Avathara uthsavam – and alongside this journey gets associated an  ancient and beautiful town variously known as Yaadusaila, Yadavagiri,  Gomanta, Bhuvaikuntha, Narayanadri, Jnanamantapa, Daksina Badarikasrama … more popularly Melukote Thirunarayanapuram ~ the place where our greatest Acharyar lived for 12 years – the yatra, albeit not a very happy note of its origin.

While I have been having darshan of Yathiraja ‘Vellai Sarruppadi’ at Thiruvallikkeni  for very many years now and have been posting on that sad incident too !  # Sriperumpudur was more unique, besides the King of all Sages donning white, His disciple Koorathazhwan donned ‘kashayam’ and had purappadu in a closed palanquin.


On the  6th  day of the Uthsavam, in the morning,  Sri Ramanujar gives darshan astride a horse adorning  pure white silk dress.  The 6th day celebration is known as  “Vellai Sathupadi” a symbolic tradition when our Great Acharyar dons white garment and is seen without tridandam. Symbolic of the travail and travel that Ramanujar had to undertake donning the dress of a ‘grahastha’ instead of his reverred kashaya.   History has it that Chozha king Kulothunga  ordered Acharyar to subscribe to the view of prevalence of Shiva; Kuresar donned the orange robes of Sanyasi, visited the court of the King and had his eyes plucked out; Periya Nambi lost his life.. !


Swami Emperumanar travelled along the course of river Kaveri, went out of Cholanadu adorning white dress and went places traversing Kongu nadu,  reached Thondanur, where he constructed a huge lake; thence reached Melukote (Thirunarayanapuram) in Mandya district, where he performed many religious discourses and brought in disciplined ways of temple management.    More was to happen as Udayavar travelled to Delhi to the Court of Delhi sultan where the uthsava vigraham of "Ramapriyan" had been taken by the muslim ruler. The vigraham when invited by Udayavar walked on its own and sat on the lap of Udayavar.

Marking this, on sixth day of Udayavar Uthsavam - Emperumanar  alights Kuthirai vahanam donning white silk. At Sriperumpudur, his Delhi visit symbolises visit to this place on way to Kanchi. Similar festivity takes place at Triplicane also. By some historical accounts, these events took place at his ripe age around 80.  For those who fall at the feet of Udayavar and who takes care of the disciples of Udayavar, there would never be any hardship. Yet it makes us sad to read of those dark events when even our Acaryar and his sishyas more specifically Koorathazhwan and Periya nimbi underwent untold sufferings .. .. .. the purappadu of Kurathazhvan in a pallakku made us grieve more for those sufferings of our Acaryar for our sampradhayam. 

                                    Though blinded in that unsavoury incident, Koorathazhwan ensured that Yathi Rajar moved safely to Melukote, lived a complete life, devoted in service, with malice to none; in fact seeking good for the traitor too. Koorathazhwan (Srivatsankamisrar),   gifted us five important stotras, popularly known as Panchastavam. These are Sri Vaikunta Stavam, Athimanusha Stavam, Sundarabahu Stavam, Sri Stavam and Varadaraja Stavam. Before ascetic life, he was a very wealthy person not only endowed with riches – more so with atma gunas and took care of needy by feeding thousands daily.  He was never attached to the material riches and the World. 

He lived a long life of more than 120 years and in 1132, Sri Koorathazhwaan ascended to Sri Vaikuntam, 6 months before Sri Mudaliandan attained Vaikuntam, in service of Lord Ranganatha & Swami Ramanuja. With his head on Pillai azhwaan's lap, lotus feet on Andal's lap (Azhwan's wife) and hand on Parasara Bhattar's lap, thinking about Swami Ramanuja's lotus feet, azhwaan attained Sri Vaikuntam.

It is our fortune that we are in the lineage of such great Acaryas and have the fortune of worshipping them and reciting the holy works of Azhwar, Acharyas.

கூரத்தாழ்வான் காஷாயம்

சித்திரையில் செய்ய திருவாதிரை நம் உடையவர் அவதரித்த அற்புத திருநாள்.  அவரது உத்சவத்தில் ஆறாம் நாள் காலை வெள்ளையுடை உடுத்து குதிரை வாகனத்தில் எழுந்து அருளுகிறார்.



நம் சுவாமி இராமானுசன் வெள்ளையாடை தரித்த அன்று கூரத்தாழ்வான் காஷாயம் தரித்தார்.  நம்மிராமாநுசன் யதிகட்கெல்லாம் அரசன் ~ கூரேசனோ குடும்பஸ்தர் - என்னே விந்தை .. .. அல்ல, ஐயகோ, வேதனை அது.  நமது  வைணவ திருக்கோவில்களில்  பிரம்மோத்சவத்தில் - குதிரை வாஹனம் சிறப்பானது.  எனினும்,  முனிவர்களின் அரசன் யதிராஜராஜர்  வெள்ளை சாற்றுப்படி  - குதிரையின் சிறப்பை எடுத்து உரைப்பதல்ல - அது ஒரு அதி முக்கிய நிகழ்வு.  காரேய் கருணை இராமானுஜருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் சுமார்  ஆயிர ஆண்டுகள் முன் நடந்த துயர நிகழ்ச்சி தான் இதற்கு காரணம்.






எம்பெருமானாரின் அருளுரைகளால் அவர் திக்விஜயம் சென்ற இடங்களில் எல்லாம் ஸ்ரீ வைணவர்கள் பல்லாயிரக்கணக்கில் அவரடி பரவின காலம் அது அல்லவா ! வைணவம் திக்கெட்டும் பரவி, அரங்கன் புகழ் அனைவரும் பாடி,  அடியார்கள் பெருகி வாழ அரங்கநகர் வளர்ந்த அக்கால கட்டத்தில், ஒரு பெருந்துன்பம் ஒரு வெறி பிடித்த மன்னன் ரூபத்தில் ஏற்பட்டது. சோழமண்டலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு "குலோத்துங்க சோழன்" என்னும் மன்னன் ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் - ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ அல்லது வலுக்கட்டாயப் படுத்தியோ, நிலைநாட்டிக் கொண்டிருந்தான்.

வைணவத்தின் தரிசனத்தின் தலைவரான மகாஞானியான இராமானுஜர் ஒப்புக் கொண்டாலே ஒழிய தாங்கள் நினைப்பதை சாதிக்கவியலாது என்று வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான். இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று உணர்ந்த கூரத்தாழ்வான் ஆழ்வான் மற்றும் சீடர்கள்,  வடதிருக்காவேரிக்கு நீராட சென்று இருந்த உடையவரது காஷாயத்தினை ஆழ்வான் தரித்து உடையவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து பத்திரமாக எழுந்துஅருள ஏற்பாடு பண்ணினார்.   வெள்ளை ஆடைகளை அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான்,வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் காவிரிக்கரை ஓரமாகவே மேல் திசை நோக்கி பயணித்தார்.  இராஜ்ய சபைக்கு சென்ற கூரத்தாழ்வானுக்கும் பெரிய நம்பிக்கும் மிகப்பெரிய துன்பம்  ஏற்பட்டு,  மஹாபூரணர் தன்  உயிர் மாய்த்ததும், கூரேசன் தன் கண்பார்வை இழந்து பலவருடங்கள் பிறகே எம்பெருமானாரின் முயற்சியால் அருள் பெற்றதும், தனி வரலாறு.

நாம் அனுதினமும் அநுஸந்திக்கும் தனியனாக ஆம் ஆசார்யர் மணவாளமாமுனிகள்  அருளிச்செய்த  'ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்; யதீந்திர  பிரவணம்  வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்' .. .. பிறகு  அநுஸந்திக்கும் தனியன்: 

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாதயா முநிமத்யமாம் |
அஸ்மதார்சாய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

இந்தத் தனியனில் ஸ்ரீ கூரத்தாழ்வான் , குரு பரம்பரையைக் கூறுகிறார்.   ஸ்ரியப்பதியான லக்ஷ்மீ நாதன் முதல் துவங்கி,  குரு பரம்பரை மத்தியில் ஸ்ரீமந் நாதமுநிகளை விளித்து - அஸ்மத்  ஆச்சார்ய பர்யந்தாம் என்று பகவத் ராமாநுஜர் வரையில் சொல்கிறார்.  ஸ்ரீ கூரத்தாழ்வான் ,காஞ்சி மாநகரின் வடமேற்கே அமைந்துள்ள  கூரம் என்கிற அந்நாளில் பெரிய நகரமாக விளங்கிய இடத்தில் கி.பி. 1010ம் ஆண்டு,  தை மாத ஹஸ்த நக்ஷத்ரத்தில் அவதரித்தார். .ஸ்ரீ வத்ஸமிச்ரர், செல்வச் செழிப்பில் மிதந்தவர். பகவானிடம், அனவரதமும், அத்யந்த பக்தியுடன் விளங்கினார். இதனால்,செல்வத்திலும், சுகபோகங்களிலும் பற்று  அற்று எல்லாச் செல்வங்களையும் ஸத்கார்யங்களுக்கும், வறியோர்க்கும் வாரிவழங்கி, ஸதாசார்ய சம்பந்தத்தைத் தேடி காஞ்சிக்கு வந்தார்.  ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ வேதவ்யாஸ பட்டர் -இவர்களின் திருத்தகப்பனார்.  நிகரில்லாத வைராக்யமும்,நெறியும் எம்பெருமானார்க்கு இணையான ஜ்ஞானமும் கொண்டவர்.

எழில்நகர் புகழ்க் காஞ்சிக்கு வந்த இவர், அங்கு பரம ஞானியாக விளங்கிய நம்மிராமாநுசமுனிகளின் திருவடிகளைச் சரணம் என்று அடைந்து, அவரிடம் கூடவே இருந்து சேவை செய்து இன்புற்றார்.  வைணவத்தின் சிரம திசையில், நாலூரான் தூண்டுதலால்,  சோழ மன்னன், ஸ்ரீரங்கத்துக்குச் சேவகரை அனுப்பி, யதிராஜரை அழைத்து வரச் சொல்ல,  கூரத்தாழ்வான், தானே காஷாயம் தரித்து, பெரியநம்பிகளுடன் அரச சபைக்குச் சென்று,  ”த்ரோண மஸ்தி தத :பரம் “‘ ( முகத்தல் அளவையில்,சிவம் என்றால் ”குறுணி” ”த்ரோணம் ”என்றால் பதக்கு ) என்று எழுதிக் கையெழுத்திட , அரசன் ,கூரத்தாழ்வானின் கண்களைப் பறிக்க சேவகர்களுக்குக் கட்டளையிட,  கூரத்தாழ்வான் ”உன்னைப்போன்ற பகவத் த்வேஷிகளைப் பார்த்த கண்கள் எனக்கு வேண்டியதில்லை” என்று கூறி, தன்னுடைய கண்களைத் தன் கையாலேயே பறித்து, அரசவையில் வீசி எறிந்தார். பின்னாளில் எம்பெருமானருக்காக காத்திருந்து, அவரருளால் பிரார்த்திக்கும் போது கூட, தமக்கு கிடைத்த பாக்கியம், தமக்கு தீமை செய்த நாலூரானுக்கு கூட கிடைத்திடல் வேண்டும் என விரும்பியவர்.

திருவல்லிக்கேணி ஏனைய திவ்யதேசங்களில் - 'உடையவர் வெள்ளை சாற்றுப்படி புறப்பாடு சேவித்துள்ளேன் ~ ஆறாம் உத்சவம் அன்று ஸ்ரீபெரும்புதூரிலே 'உடையவர் வெள்ளை பட்டுடன் குதிரையில்' ஆரோஹணிக்க  - கூரேசர், காஷாயத்துடன் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார்.

ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம்  :  என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே அடியேனுக்கு தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை, அருளவேணும் !!   அவதாரஸ்தலமாம் திருப்பெரும்புதூரிலே உடையவர் டெல்லி புறப்பாடு கண்டு அருளியபோது எடுத்த படங்கள் சில இங்கே:

ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம் -
நம் இராமானுஜன் திருவடிகளே சரணம்.
கூரத்தாழ்வான்  ~ ஆசார்யர்  திருவடிகளே சரணம்.

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்







1 comment: