To search this blog

Monday, June 11, 2018

Thiruvallikkeni Vaikasi Ekadesi Purappadu 2018


                                  Oh what a day ! today ~ 10th June 2018 ~ Vaikasi Ekadasi – in the morning it was the grace of our Acaryan Sri Koil Kanthadai chandamarutham U.Ve. Singarachar Swami – in the evening being Ekadasi – it was the most benevolent divine grace of our Emperuman Sri Parthasarathi periya mada veethi purappadu. 



இன்று 10.6.2018 வைகாசி ஏகாதசி ~ திருவல்லிக்கேணியிலே ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.  மாலை வெய்யிலிலே சூரியனின் பொன்னிறக்கிரணங்கள் திருமேனியை தீண்ட கதிரவனை விஞ்சும் ஒளியுடன் அதிஅத்புத சேவை அளித்தார் நம் ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்.


முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒருநல்ல மழை நாளில் திருகோவலுரில்  இடைகழியில் சந்தித்த போது - பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் - 'வையம் தகளியா  - அன்பே தகளியா' என நூறு நூறு பாடல்கள் இயம்ப, இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் பெற்று, பேயாழ்வார்,  திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து "மூன்றாம்திருவந்தாதி"  நூறு பாடல்கள் பாடினார். திருமகள் கேள்வனான எம்பெருமானின்  'அழகிய திருமேனியையும் சூரியன் போன்று விளங்குகின்ற ஒளியையும், போரில் கிளர்ந்து எழுகின்ற அழகிய சக்கரத்தையும் உடைய எம்பெருமானை கண்டேனே  என பொருள் படும் 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழுமருக்கன் அணி நிறமும் கண்டேன்' என துவங்குகிறது இவரது மூன்றாம் திருவந்தாதி.


"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக் கண்டேன்,*
என்னாழி வண்ணன் பால் இன்று"  

 திருவல்லிக்கேணியில் பற்பல நாட்கள் போல அருளிச்செயல் கோஷ்டியினர் மூன்றாம் திருவந்தாதி பாசுரங்கள் சேவிக்க அமைந்தது இன்றைய அற்புத புறப்பாடு*

Here are some photos taken during the purappadu
~adiyen Srinivasadhasan.






No comments:

Post a Comment