Sri Azhagiya Singar Nachiyar Thirukolam ~ day 5 at
Thiruvallikkeni 2017
On day 5 of Sri Thelliya
Singar brahmothsavam – the most beautiful Azhagiya Singar enraptured
us in “Nachiyar Thirukkoalam” – dressed as EzhilmiguThayar in a grand
sitting posture.....Srimannarayana- the ever merciful Lord is always our esteemed
protector. He is our Rakshak. He is glorified in the Vedas as the Supreme
entity. He is "Veda Mudalvan". The sublime beauty and oozing
benevolence as exceptionally visible in the Thirumugam [face] of Perumal –
Nachiyar.
Being day 5, it is Swami
Nammalwar’s Thiruvirutham, the essence of Rig veda. Nammalwar
experiencing ‘Parankusanayaki’ expresses her attachment to the immortal Sriman
Narayana and that perhaps is the reason for Nachiyar thirukolam on this morning
purappadu.
..... the beautiful
women of Thiruvallikkeni were circling around to have darshan of Him, look and
envy the best of silk saree tastefully worn (some may debate on the colour /
border combination !) - among the dazzling ornaments was this
‘pavalam’[red coral] – simply marvellous. The golden parrot was ensconced above
the abhaya hastham of Nachiyar. More than the ornate style of
dressing, it was the benevolence [karunyam] in the face of Perumal that
showered blessing on His devotees.
பெருமாளின் அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. கருத்துக்கு மிக
எளியனான அப்பெருமாளின் கருணைமிகுந்த திருக்கோலத்தை காண பக்தர்களுக்கு ஆசை வருவது
இயல்பு. பெருமாள் தனது வாத்சல்யம், சௌலப்யம் போன்ற கல்யாணகுணங்களை எல்லாம்
நமக்கு அருளி, மிகஅழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து
அபயஹஸ்தத்துடன் காட்சிதரும் எழில்மிகு திருக்கோலமே நாச்சியார் திருக்கோலம்.
திருவல்லிக்கேணியில் எல்லா பெரிய உத்சவங்களிலும் ஐந்தாம்நாள் ஸ்வாமி நம்மாழ்வார்
அருளிச்செய்த 'திருவிருத்தம்' சேவிக்கப்பெறுகிறது. ருக்வேதசாரமான
திருவிருத்தம் 100 பாடல்கள்
கொண்ட அந்தாதி; கட்டளைக் கலித்துறை பாடல்களால் ஆனது.
நம்மாழ்வார் ஆழ்வார் ஆற்றாமை அதிகரித்துத் தாமான தன்மையழந்து 'நாயகியாய்' தம்மை பாவித்து பிராட்டி நிலைமையடைந்து ‘பராங்குச நாயகி’யானார். நாயகன் ஆன எம்பெருமானின் ரூப
வைலக்ஷண்யமுரைத்த பாசுரம் இது:
கண்ணும்
செந்தாமரை கையும் அவை அடியோ அவையே*
வண்ணம்
கரியது ஓர் மால்வரை போன்று மதிவிகற்பால்*
விண்ணும்
கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்*
எண்ணும்
இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே?
எம்பெருமானுடைய திருக்கண்கள்; திருக்கைகள்; திருவடி என்னுமுறுப்புகள் ஸாக்ஷாத் தாமரைமலர்களே; திருமேனி நிறமோவெனில், ஒரு அஞ்சனமாமலை போன்றுள்ளது;ஞானத்தில்
மேம்பட்ட பரமபதத்து நித்யஸூரிகளும் விவரிக்க முடியாத அதிரூபசௌந்தர்யம் எம்பெருமானது திருமேனியழகு. ஐந்தாம் நாள் காலை பக்தர்களுக்கு
அருள்பாலித்த நாச்சியார் திருக்கோலம் இங்கே:
~ adiyen Srinivasadhasan.
27th June 2018.
No comments:
Post a Comment