To search this blog

Wednesday, February 17, 2016

Thirukachi Nambigal Sarrumurai 2016


ஆலவட்டம்  துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட,
வட்டமான பெருவிசிறி

இன்று 'மாசி மிருகசீர்ஷம்'  - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள்.   திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆச்சார்யர் ஆவார்இவர் சௌம்ய வருஷம்,  1009 ஆம் ஆண்டுவைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.  சென்னையில் இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்லும் மார்க்கத்தில் இந்த ஊர் உள்ளது.   இவ்வூர் தர்மபுரீ என்றும் புருஷமங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தது எனவும் திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம் வைத்த காரணத்தால், பூவிருந்தவல்லி என்னும் பெயர் பெற்றது எனவும் அறிகிறோம்.   பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு மிக  அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் திருக்கச்சிநம்பிகள் சம்பந்தப்பட்டது.  புராதானமான  இக்கோவிலில், திருக்கச்சி  வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர் என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார்.  திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு  சமீபத்தில், 2009ஆம் ஆண்டு  விமர்சையாய் கொண்டாடப்பட்டது.
Thirukachi Nambigal at Thiruvallikkeni – photo taken in 2014.

Living in Chennai, you would for sure have travelled by this road – the arterial road connecting Chennai to its suburb…. Approx 25 km stretch starting from Muthusamy Bridge near Medical college, winds through Ega, Pachaiyappas, Aminjikarai, Ampa Skywalk, DG Vaishnav, Maduravoyal … reaches Poovirundhavalli (Poonamallee) ….. it was once the point through all vehicles travelled towards Sriperumpudur, Kanchipuram, Bangalore … Thirumazhisai, Thiruvallur, Thiruttani, Tirupathi…. This road has more hospitals than any other roads in the city and is popularly known as the city's 'Med street'.  The town of Poonamallee is situated at a distance of 23 kilometres from Fort St George and 17 kilometres from Sriperumbudur on the Chennai-Bangalore highway.  The name "Poonamallee" is derived from "Poovirundavalli", meaning "the place where flowers are cultivated". In Sanskrit, the place is called Pushpakavalli.  Near the main bus stand is the temple of Lord Varadharaja whose consort is Pushpakavalli, who gave this place the name ~ and this place is more significant to us for its attachment to our Acharyar who lived 1000 years ago and who had a great role in the life of our Greatest Acharyar Sri Ramanujar.

Today, 17th Feb 2016 is Masi Mirugaseersham nakshathiram denoting the  Sarrumurai (Birth celebrations) of Acharyar Thirukachi Nambigal born to  Veeraghava chettiyar  and Kamalai.  He was the disciple of Aalavanthar and had association with Thirukoshtiyur Nambigal too.  Thirukachi Nambigal is reverred for his devoted committed service of  ‘thiru aalavatta kainkaryam – (service of providing air by hand fan) to Devathirajar, the Lord at Thirukachi.  Nambigal is reverred as acharyan of Swami Ramanujar.  In the Kaliyuga, Nambigal was blessed that Sri Perarulalar spoke to Nambigal in person and through him, Devathirajar gave message of ‘Six words’ to Ramanuja – of which ‘Aham Eva Param Thatvam’ – Lord Sriman Narayana is Supreme is the first message. 

On this day let us prostrate at the feet of Acharyar Thirukachi Nambigal, Sri Bhagawath Ramanuja and all our Acharyar and pray to Sriman Narayana for all good things in life and after.  At Thiruvallikkeni this being Thavana Uthsavam, this morning Nambigal had purappadu with Sri Parthasarathi Swami to Thavana Uthsava bungalow.  Sri Boothathazhwar’s irandam thiruvanthathi was rendered.  In the evening, it will be sarrumurai purappadu from Bungalow, whence Sri Ramanuja Noorranthathi will be rendered.  Here are some photos of Nambigal at Thirukachi

ஸ்ரீ ஆளவந்தாருடைய  சிஷ்யரான இவருக்கு "பார்க்கவப்ரியர்"  என்பது இயற்பெயராம். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த திருநாமம், "பேரருளாள தாஸர்" என்பதாகும்.  காஞ்சி ஸ்ரீவரதாரஜ பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி வீசுதல்)கைங்கர்யம் செய்துவந்தவர்.  தேவாதிராஜர் அர்ச்சாவதாரத்தை தாண்டிஇவருடன் பெருமாள் தினமும் உரையாடி வந்தாராம்.   இளையாழ்வார்  (உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள் பதில் அளித்தாராம்.  அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன.  "அஹமேவ பரம் தத்வம்" - என்பது முதல் வார்த்தை.  'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்' என்பது ஆகும்.  நாம் "இமையோர் தலைவன் மாதவன் பேர் சொல்லுவதே நம் வாழ்வின்  சிறப்பு"என்பதை உணர வேண்டும்.  எம்பெருமானிடம் மட்டுமே ஈடு கொள்ளல் வேண்டும்; அவன் மட்டுமே நமக்கு இம்மையிலும் மறுமையிலும் புகலிடம் தர வல்லன்.


திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை இன்று(17th Feb 2016); -  நம்பிகள், ஸ்ரீ பார்த்தசாரதியுடன் எழுந்தருளினார். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.


PS: photos of Thirukachi Nambigal at Thirukachi – photos credit : Sri VN Kesavabashyam

No comments:

Post a Comment