Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam –
Day 8 Evening – Kuthirai Vahanam
Tuesday, 22nd Apr 2o14 was the 8th day of Sri Parthasarathi Swami
Brahmothsavam. .. this is very special – not only for the ‘aesal
(oyyali)’ that occurs at Car
Street [Theradi theru] but more
so for the ‘Thirumangai Mannan Vaibhavam’. On the Kuthirai vahanam, Sri Parthasarathi
was wearing a new cap worthy of a King (one with silver lining and pearl beads
embedded on it) ~ this and a new
pathakkam has been dedicated to Lord by the Thennacharya Sri Padham Thangigal
Trust (and a devotee )… here are photos of the pendant; the newly made cap (fondly Savari paagai) and Perumal wearing the same.
The Lord holds the reins of the golden horse – Azhwar
Kaliyan comes chasing on his ‘adalma’. Neelan, (Kaliyan) – known by
various other names was a local chieftain’ who used to feed thousands
everyday. He had vowed to feed thousands of persons each day and also
needed money to build temples. Thirumangai mannan’s disciples were
-Neermael nadappan, Nizhalil odhunguvan, Thaloodhuvan,
Tholavazhakkan. Not finding enough resources he and his disciples
had to resort to robbery and Sriman Narayanan in his various Leelas chose
to play with him, by getting robbed, making him realize his folly and turning
him to his trusted devotee. Kaliyan understanding the significance became
Thirumangai Azhwaar and rendered Periya Thirumozhi; in Naalayira
Divyaprabandham, Thirumangai mannan has contributed 1137
hymns. Neelan, ordained to listen to the Ashtakshra mantra,
becomes Thirumangai Azhwar. In the photo of Azhwar on the small
horse, one can see him armed with sword and shield.
This divine act is recalled and as stated in the ‘sthala puranam
of Thiruvallikkeni’ – Perumal and those accompanying Him lose their
valuables. The entire act is read out in a sanctimonious rite called ‘pattolai’ (literally
the verses in palm leaves covered with silk) – which is rendered by Dr
M.A. Venkatakrishnan Swami in his inimitable style.
In the Thiruvallikkeni Sthala puranam, Emperuman and those
accompanying him lose their gold, jewelry and valuables. The ‘Thalayari
Thalaivan’ of the place stands before the Perumal with folded hands, pleads
forbearance, chases Aalinadan, recovers the ornaments and punishes the mischief
monger. After the enactment of this, Kaliyan learns ‘Ashtakshara
mantra’ and in the purappadu the opening of Periya Thirumozhi ‘"வாடினேன் வாடி வருந்தினேன்" ~ is rendered.
Here are some photos of the Kuthirai vahana purappadu. The
bigger horse is that of Perumal; Thirumangai mannan also comes in a horse
[smaller one]; then there was the horse of the Perumal [that of chinna pasanga]
~ all providing a great treat to the bakthas and bagavathas at Thiruvallikkeni
divyadesam. It was late in the night ~ but the enthusiasm and the crowd
will have to be seen to be believed.
Azhwar Emperumanaar Jeeyar Thiruvadigale
saranam.
Adiyen Srinivasa dhasan.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பிரம்மோத்சவத்தில் எட்டாம் திருநாள்
மாலை குதிரை
வாஹனம். மற்ற வாகனங்களுக்கு இல்லாத சிறப்பு குதிரைக்கு மட்டும் என்ன
?
குதிரை சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும், புராணங்களிலும்
சிறப்பாக கருதப்பட்டு உள்ளது. குதிரை, புரவி தவிர ~ மா,
பரி, மான், இவுளி, கலிமா - இதனது வேறு பெயர்கள்.
பூம்புகாரின் செல்வவளம் நிறைந்த வீதிகளை பற்றி பட்டினப்பாலையில் குறிப்பிடுகையில்
: **செல்கதிர் நுழையாச்செழுநகர் வரைப்பின், செல்லா நல்லிசை அமரர் காப்பின்
நீரின்வந்த நிமிர் பரிப்புரவியும்.............வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்......** என சூரியனின் கதிர்கள் நுழைய முடியாத வளமான பூம்புகாரில் , வெளிநாடுகளிலிருந்து
கடல் வழியே கப்பலில் வந்த நிமிர்ந்து வேகமாகச் செல்லும் வடக்கே உள்ள மலையில் விளைந்த
மணி வகைகளும், பொன்னும், மேற்குமலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், தென்கடலில் கிடைத்த
முத்தும் போன்ற அரிதான பொருட்களும் குவிந்து கிடந்தாக சொல்லப்பட்டு உள்ளது.
நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் குதிரை வாஹனத்தில் எழுந்து அருள்வது சிறப்பானது. கருட, யானை,
குதிரை வாகனங்களில் ஏளும் நாட்களில் ஏசல் (ஒய்யாளி) உண்டு. குதிரை வாகன ஏசல்,
தேரடித் தெருவில் நடக்கும். குதிரை வாகன புறப்பாட்டில், திருமங்கை மன்னனின் திருவவதார
மகிமையை விளக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கலியன், நீலன், திருவாலிநாடன்
என பலவாறு பெயர்பெற்ற திருமங்கை ஆழ்வார், ஒரு மன்னர். தினமும் 1008 பெருமாள்
அடியார்களுக்கு அன்னமிட்டு உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த
செல்வம் குறைந்து, அப்பணியைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கலங்காத அவர்
ஒருகட்டத்தில் களவு செய்தாவது அடியார்களுக்கு அன்னமிடும் சேவையைத் தொடர்ந்தார்.
அவரது பக்தியை வெளிப்படுத்துவதற்காக பெருமாள், திருமணக்கோலத்தில் சென்று எட்டெழுத்து
மந்திரத்தை உபதேசித்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி,"திருமங்கையாழ்வார்' என்று பெயர்பெற்றார்.
இந்த உன்னத நிகழ்வை நினவு கூறும் விதமாக இன்று ஸ்ரீபார்த்தசாரதி
தங்க குதிரையின் மீது எழுந்து அருளினார்; திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற
குதிரை மேல் ஏறிக்கொண்டு புறப்பாடு காண்கிறார். பெருமாளுடன் வரும் கொத்து
பரிசாரங்களையும் மிரட்டி அவர்களிடம் உள்ள எல்லா பொருட்களையும் கவர்கிறார்.
ஸ்ரீமான் நாராயணன், ஆலி நாடரை கலியனாக ஆட்கொண்டு "ஓம் நமோ நாராயணா"
என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார்; சிந்தை தெளிந்து அருள் பெற்ற ஆழ்வாரும்,
"திருமொழி" பாசுரங்களை "வாடினேன் வாடி வருந்தினேன்" என தொடங்குகிறார்.
திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் எட்டாம் நாள் இரவு ஸ்ரீபார்த்தசாரதி
பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருள்கிறார். சிங்கராச்சாரி தெருவும்
தேரடி வீதியும் சேரும் இடத்தில உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே, ஏசல் முடிந்து ஆழ்வார்
மங்களாசாசனம் நடந்து பட்டோலை படித்தல் நடைபெறுகிறது. இன்று பெருமாள் பரிவட்டத்துடன்
ஸ்ரீ உ.வே. வேங்கடகிருஷ்ணன் சுவாமி தனது கணீர் குரலில் திருவல்லிக்கேணி தல புராணத்தில்
உள்ள இந்த நிகழ்ச்சியை படித்தார். அனைத்து பக்தர்களும் அதை கேட்டு மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு ஊரிலும் தல புராணங்களில் சில வித்தியாசங்கள் இருப்பது உண்டு.
எம்பெருமான் புறப்பாடு கண்டு அருளும் போது கலியன் திருவாலவட்டங்களையும்
திருவண்கொத்தக்குடைகளையும் எம்பெருமானின் கூட வந்தவர்களின் உடமைகளையெல்லாம் பறித்துக்கொண்டு
போகிறார். அவ்வூர் தலையாரித் தலைவன் ராஜ பயத்தால் கள்வன் அடி தொடர்ந்து
ஒரு மூலையிலே ஒளிந்து நிற்கும் திருமங்கை மன்னனை பிடித்துக் கொண்டுவந்து அகிலாண்ட கோடி
பிரம்மாண்ட நாயகனான ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருமுன்பே நிறுத்தி களவு போன உடைமைகளின் கணக்கையும் வாசிக்கும்படி செய்கிறார். அந்த நகைகளின் விவரங்களும் மதிப்பும் வாசிக்கப்படுகின்றன. எம்பெருமான் கடாக்ஷத்தினாலே ஞானம் பிறந்த கலியன் எம்பெருமானின் திருப்பரிவட்டம்,
திருமாலை, ஸ்ரீ சடகோபம் பெற்று 'வாடினேன் வாடி வருந்தினேன்' என திவ்யப்ப்ரபந்தம் சாதித்து
அருளினார் என தல புராணத்தில் உள்ளது.
ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், கலியனது பங்கு அதீதம். பெரிய
திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய
திருமடல், சிறிய திருமடல் என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார். சிறிய
திருமடல், பெரிய திருமடல் என்னும் இரண்டு படைப்புகளிலும் தன்னைத் தலைவியாக 'பரகால நாயகியாய்' உருவகித்த நிலையில்
அவர் பாடல்களைப் புனைந்துள்ளார்.
திருமாலடியார்களுக்கும் அவர் தமக்கு தொண்டு செய்பவர்களுக்கும், என்றென்றும்
சகலவிதமான செல்வங்களும் பெருகும்; அவர்களுக்கு எல்லா நன்மையையும் நடக்கும். நாம்
செய்ய வேண்டியது எல்லாம் - ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளில் ஈடுபாடு கொண்டு,அவனது அடியார்களுக்கு
எல்லா கைங்கர்யங்களும் செய்ய வேண்டியது மட்டுமே! திருமங்கை மன்னனின் 'பெரிய திருமொழி
- முதற்பத்து - முதல் திருமொழியில்' இருந்து இங்கே ஒரு பாடல்
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை*
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்*
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன் செல்கதிக்குய்யுமாறெண்ணி*
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன் நாராயணாவென்னும்நாமம்.
எவ்வளோவோ சிறப்பு பெற்ற ஆழ்வாரே தம்மை தாழ்த்திக்கொண்டு ‘தாம்
சாஸ்த்ரங்களை கற்றறிந்தவனல்லேன்; பஞ்சேந்திரியங்கள் விரும்புகின்ற விஷயங்களிலே நெஞ்சைச்
செலுத்திக் கிடந்தேன்; அதனால் நான் ஒரு நன்மையும் பெறாதவனாயினேன்; இந்த பிரம்மாண்ட
பூமியிலேயுள்ள எல்லா உயிர்க்கும் தீங்கு செய்வதையே வேலையாகக் கொண்டு திரிந்து
கொண்டிருந்தேன்; இவ்வாறு கேட்ட செயல்கள் செய்து கொண்டிருந்த நான் இன்று
பகவத் கடாக்ஷத்தாலே இக்கொடுமைகளெல்லாம் தவிரப்பெற்றேன்; செல்ல வேண்டிய நல்வழியை நண்ணி
உஜ்ஜீவிக்கும்படியைச் சிந்தித்து நாராயணா என்னும் நாமத்தை நல்துணை ஆக பற்றினேன்' என
- நலம் தரும் சொல் 'நாராயணா" என்னும் நாமம் மட்டுமே என அறுதியிட்டு உரைக்கிறார்.
நல்லதே எல்லாமே தரும் சொல் அது~ 'ஓம் நமோ நாராயணாய"
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
kolam and kolattam... celebrations..
Sri Kaliyan ~ see the sword...
Dr MAV pattolai parivattam
chinna pasanga kuthirai vahanam (below)
No comments:
Post a Comment