Today 23rd July 2012 - is Thiruvadipooram [Puram Nakshathiram in the
month of Aadi] – a most blessed day for all Srivaishnavaites – for this day
marks the birth of Kothai Piratti [Andal]
Andal’s was found in a thulsi garden at Sri Villiputhur by Vishnu Chithar
[Periyazhwaar]. Our Acharyas have hailed
the birth of Andal – as Andal represents the quitessence of bakthi, abundance
of love to God Himself expressed in choicest tamil verses. Sri
ANDAL is the incarnation of Shri Bhuma Devi, the divine consort of
Sriman Narayana, who took birth on this earth to liberate suffering human beings
from worldly bondage. She sang thirty sweet songs containing the cardinal
principles of Sri Vaishnava Dharma.
Other than Thiruppavai which is specially sung in all the days of the
month of Margazhi, She also gave us 143 verses known as ‘Nachiyar Thirumozhi’.
Today, there will be grand procession [purappadu] of
Andal at Srivilliputhur, Srirangam, Kanchipuram, Thiruvallikkeni and many other
divyadesams. The 10 day celebrations are
on at Thiruvallikkeni also, which culminates grandly today.
Her philosophy is clear and unmistakable. She says ‘immaikkum ezhezhu piravikkum
patraavan, nammaiyudaivan Narayanan nambi’
- "Sriman Narayana is our
refuge now and for ever and He will not let us down, for we are His
possessions".
Here are some
photos taken during the 8th day purappadu on Saturday – 21st
July 2012 at Thiruvallikkeni.
23/07/2012 - இன்று
மிகச் சிறந்த நன்னாள் ! ஸ்ரீ ஆண்டாள்
அவதரித்த தினம். 'திருவாடிப்பூரம்" - ஸ்ரீ வில்லிபுத்தூரில்
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசி மலரில் பூமிபிராட்டி அம்சமாய் தோன்றிய கோதை
பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை தொடங்கியே 'மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி பேருக்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது.
நம் பொய்யில்லா மணவாள மாமுனிவன், தமது 'உபதேச ரத்தினமாலையில்' திருவாடிப்பூர திரு
நக்ஷத்திரத்தில் பூமி பிராட்டி
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உயர்ந்த அனுபவத்தை விட்டுவிட்டு பெரியாழ்வாருக்கு
திருமகளாக இந்த உலகத்தில் நாம் உஜ்ஜீவிப்பதற்கு அவதரித்தருளினதை, அழகிய ஆடி மாதத்தின்
பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு தினத்துக்கு
கிடையவே கிடையாது. ஆண்டாளுக்கு சமானமாக ஒருவர் உண்டு என்பதானால், உண்டாகுமானால்,
இந்த நாளுக்கும்
சமானமாக ஒரு நாள் உண்டாகக்கூடும் என :
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோ மனமே உணர்ந்துப் பார் ஆண்டாளுக்
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு - என பாடி மகிழ்கிறார்.
ஆண்டாள் பாடலில் 'ஓங்கி உலகளந்த உத்தமன்
பேர்பாடி, ..... நீங்காத செல்வம் நிறைந்தேலோர்
எம்பாவாய்' என வேண்டுகிறார்.
ஆண்டாளை அனுதினமும் சேவித்து,
ஆண்டாள் அருளிச்செய்த
பாசுரங்களை, தங்கள் சிந்தையிலே அனுசந்தித்து வாழ்பவர்கள், பெருமை பொருந்திய
திருவடிகளையுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே எந்நாளும் பிரியாமலிருந்து
நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Tailpiece : Today a beautiful pathakkam [a spectacular
ornament] is being dedicated to Lord Parthasarathi by Sree Parthasarathi Swami
Sripadam Trust. This Trust formed and
run by Sri Vaishnavaite Thennacharya youngsters are the bearers of Perumal
during all Purappadu and are engaged in many welfare activities also. This ornament called ‘Iruthalai Pakshi
Pathakkam’ [it resembles birds on either side – with beautiful stones etched on
Gold] – it weighs 115 grams of Gold and is more than Rs.4 lakhs.
Excellent post - the jewel is so beautiful - Kaviya
ReplyDeleteAndal Thiruvadigale Saranam - Kumari
ReplyDelete