2nd
July 2012 was the 5th day
of the Azhagiya Singar Uthsavam at Thiruvallikkeni. In the evening, it was ‘Hanumantha
Vahanam’. The son of Vayu – Hanumar is
the epitome of great virtues. He had
physical power, vast knowledge, strong will power, concentration, commitment,
and vast capability of deliverance – still Anuman exhibits the rare qualities
of kindness, humility, and deep attachment to Lord Rama.
Sri
Thelliya Singar in His resplendent splendour
on ‘Hanumantha Vahanam’ gave darshan to devotees, which was a great
sight to behold.
அழகிய சிங்கர் உத்சவத்தில் ஐந்தாம் நாள் மாலை 'ஹனுமந்த வாஹனம்'. திண்ணம் , அறிவு, கொடுத்த வேலையை திறம்பட முடித்தல், கவனம், ஒருங்கிணைப்பு, மன உறுதி, உடல் பலம் ஆகிய அனைத்து திறன்கள் உடையவராக இருந்தும், மிகுந்த பணிவு, பரிவு, அடக்கம், அதீத பக்தி இவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் - அஞ்சனை மைந்தனான அனுமார். வைணவத்தில் இவர் 'சிறிய திருவடி' என்று சிறப்புடன் விளங்குகிறார். பெரியாழ்வார் - அனுமார் இராமபிரானின் கட்டளைப்படி பிராட்டியாரை தேடி இலங்கை சென்று, இராமரின் சேனை பலத்தை இலங்கை மன்னன் உணருமாறு செய்ய, இலங்கையை தீயிட்டு அழித்ததை, தனது 'பெரியாழ்வார் திருமொழியில்' - "அடங்கச் சென்று இலங்கையையீடழித்த அனுமன் புகழ் " என பாடியுள்ளார்.
திருவல்லிக்கேணி
ப்ரம்மோத்சவத்தில், அனுமந்த வாகனத்துக்கு தனி ஏற்றம் உண்டு. நிறைய பாகவதர்கள்,
ஒன்று கூடி 'அனுமன் புகழ் பாடி ஆடி வருவார்கள்'. அழகிய சிங்கர் அனுமந்த வாகனத்தின்
மீது அழகுற காட்சியளித்த சில படங்கள் இங்கே.
அடியேன் ஸ்ரீனிவாச
தாசன்.
No comments:
Post a Comment