To search this blog

Wednesday, July 4, 2012

Sri Azhagiya Singar Brahmothsavam - Day 7 - Thiruther:


Sri Azhagiya Singar Brahmothsavam - Day 7 -  Thiruther:  அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் - ஏழாம் நாள் காலை - திருத்தேர் புறப்பாடு

இன்று ஏழாம் நாள் உத்சவம்காலை திருத்தேர்.  On the 7th day of Uthsavam is Car Festival (Thiruther).  Early Morning Sri  Azhagiya Singar with Ubaya nachimar [consorts] ascended the Thiruther.  The purappadu began at around 07.00 am and concluded around 09.30 am.

மக்கள் அனைவைரையும் கவர்ந்து இழுக்கும் உத்சவம் - தேர். தேர்த் திருவிழா என கொண்டாடப்படும் இது, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேரும் விழா.   தேர் என்றால் பிரம்மாண்டம் - மேலும் தேர் திருவிழா நடக்க ஊர் மக்கள் ஒன்று கூட வேண்டும்- 'ஊர் கூடி தேர் இழுத்தல்' என்பது மரபு.  மரபு, பண்பாடு கடைபிடிக்கப்பட்டு வரும் கிராமங்களில் இன்றும், தேர் அன்று ஆண்கள் எவரும் ஊரை விட்டு போகமாட்டார்கள்.  அனைவரும் ஒன்று கூடி, தேர் திருவிழாவை சிறப்பிக்கச் செய்வர்.

ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் உள்ள திருத்தேர் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  சுமார் இருபது ஆண்டுகள் முன்பு சீரமைக்கப்பட்டபோது,  சற்று சிறியது ஆகிவிட்டது. பிறகு, மரச் சக்கரங்களுக்கு பதிலாக, இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன.  தேரோடும் மாட வீதிகளும் சிறியவை; எனினும் தேர் தொடங்கி, மறுபடி நிலைக்கு வர சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.  காலை ஏழு மணிக்கு பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா; கோஷத்துடன் வடம் பிடிக்க துவங்கிய தேர் சுமார் ஒன்பது அரை மணிக்குதான் நிலைக்கு வந்தது.

திருத்தேர் கோஷ்டியில், திருவெழுக்கூற்றிருக்கை  பிரபந்தமும், பிறகு  'வாடினேன் வாடி வருந்தினேன்' என கலியனின் திருமொழி துவக்கமும் சேவிக்கப்பெற்றன.  "ஒருபேருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை' எனும்  திருவெழுக்கூற்றிருக்கை  ஒன்றிலிருந்து தொடங்கி  வரிசையாக, தேர் போன்று சித்திரக் கவிதையாக அமைக்கப்பட்டதாகும்.

அல்லிக்கேணி அழகியசிங்கர் திருத்தேரின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :  அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.




2 comments:

  1. very nice write up..greatly missing the occassions

    ReplyDelete
  2. beautiful photo - great desciption - Thiruvallikkeni at its best - Kumaran

    ReplyDelete