To search this blog

Saturday, May 11, 2024

நாளும் பணிமின் பரமேட்டி தன் பாதமே ! Sri Parthasarathi Perumal thiruvadigal

நாளும் பணிமின் பரமேட்டி தன் பாதமே !

 

பரமேட்டி என்றால் மிக மேன்மையான எம்பெருமான் என்று பொருள்.  எம்பெருமான் திருவடி நிலைகளை பற்றுதல் மோக்ஷம்.  மிகவும் இனியதான திருவடிகளை அடைந்தவர்களுக்கு மற்றைய விஷயங்களில் ஆசை ஆகிற வியாதியும் கழிந்துவிடும்.  சுவாமி நம்மாழ்வார் மணியும் பொன்னும் சேர்ந்த மதிள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்திலே பரமபதத்தில் இருப்பதைப்போலே இருப்பவனின் திருவடிகளை எப்பொழுதும் வணங்கி அனுபவிக்குமாறு நமக்கு உபதேசிக்கிறார். 

ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் விடையாற்றி சாற்றுமுறை அன்று (10.5.2024)  மணமிக்க புஷ்பப்பல்லக்கில் புறப்பாடு கண்டருளினார்.  இங்கே மூன்று படங்கள் : -

1.  புஷ்பப்பல்லக்கு மலர்களின் படம் (close-up)

2.  உபயநாச்சிமார், எம்பெருமான் நடுவே அல்லிக்கேணி கோபுர தரிசனம்

3.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திருவடிகள். 

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
தூசிமாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார் 

No comments:

Post a Comment