Kanchipuram has been the repository of many magnificent temples. There are several big temples and for Sri Vaishnavaites “Perumal Kovil” would mean the temple of Lord Devarajar – Athigiri Arulalar. Legend has it that Brahma performed Asvamedha yaga at mokshapuri i.e., Kanchi and Lord Vishnu emerged out of the fire with Sanku Chakram. It is believed that the annual Uthsavam was initiated by Brahma himself. Sri Varadha Rajar has a sannathi in Thiruvallikkeni divyadesam.
At Thiruvallikkeni, in a unique form, moolavar Sri Varadharajar is in Garuda vahanam ~ the one who readily flew on Periya Thiruvadi to save His baktha, Gajendra, the elephant, upon caught by a crocodile. Sri Gajendra Varadhar is giving darshan to devotees as worshipped Maharishi Saptharoma – on every Hastham thirunakshathiram, there is siriya mada veethi purappadu of Sri Varadharajar.
Tomorrow the Uthsavar Sri Varadhar at Thiruvallikkeni will adorn new kavacham – dedicated by Sri Krishnamachari Trust … - on display at Thirukovil this evening.
திருமங்கைமன்னன் மங்களாசாசனம் செய்தபடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள் உத்சவருக்கு - திருக்கிரீடம், கர்ணபத்திரம், ஹஸ்தம், திருமார்பு, திருமுதுகு, பீதாம்பர கவசங்கள், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார் கமல. லம்ப ஹஸ்தங்கள் நாளை சாற்றப்பட உள்ளன. வெள்ளியிலான கவசம் சுமார் 22கி 400 கிராம் எடையில் சுமார் 10 லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீகிருஷ்ணமாச்சாரி டிரஸ்ட் மூலம் உபயமாக வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை திருக்கோவிலில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
நாளை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோவிலில் இந்த கவசம் சாற்றிய ஸ்ரீ வரதராஜர் பெருமாளை சேவித்து எல்லா அருளும் பெறுவோமாக !!
Here is a beautiful verse of Thirumazhisai Azhwar from his Nanmukhan thiruvanthathi.
ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டுமிழ்ந்த,
பேராழியான் தன் பெருமையை,- கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான், அவன்
வைத்த
பண்டைத்தானத்தின் பதி.
ஈரேழு உலகங்களையும், (பிரளய காலத்தில்) உண்டு (பிறகு) உமிழ்ந்த பேராழியான் (சிறப்பு வாய்ந்த திருச்சக்கரமான திருவாழிதனை) தனது கரங்களில் ஏந்திய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் பெருமையை அறிபவர் ஆரே ! என கேள்வி எழுப்பிய திருமழிப்பிரான், தனது நான்முகன் திருவந்தாதியிலே தானே பதிலையும் அளிக்கிறார். .. அவ்வளவு சிறப்பு வாய்ந்த எம்பெருமானின் மகிமைகளை முழுமையாய் அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை). அவ்வெம்பெருமான் முன்பே ஸாதித்து வைத்த பரமபதமார்க்கமென்னத் தகுந்த சரமச்லோகத்தை, நீலகண்டனான சிவனும், நான்கு முகங்களை உடையவனும் கூட காண்கின்றிலர் .. .. அவர்களே அறியமாட்டாதபோது மற்றபேர்கள் அறியமாட்டார்களென்பது சொல்ல வேணுமோ? .. .. நமக்கு எளிய உபாயம் அவனது திருவடிகளை பற்றி இருப்பதே ! ~ திருமழிசைப்பிரான் தனது நான்முகன் திருவந்தாதியில்.
The photos of Sri
Varadharajar here were taken during
Thirumazhisai sarrumurai on 7.2.2023 and photos of kavacham taken this evening.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.2.2023
No comments:
Post a Comment