தாய்மொழியாம் தமிழ் தனிலே புலமை கொண்டவரோ ! - ஒரு எளிய கேள்வி - - 'கை' என்றால் என்ன ??
A hand is a prehensile, multi-fingered appendage located at the end of the forearm or forelimb of primates such as humans, chimpanzees, monkeys, and lemurs. The anatomy of the hand is complex, intricate, and fascinating. Its integrity is absolutely essential for our everyday functional living. Our hands may be affected by many disorders, most commonly traumatic injury.
The hand is composed of many different bones, muscles, and ligaments that allow for a large amount of movement and dexterity. There are 3 major types of bones in the hand itself, including: Phalanges; Metacarpal bones and Carpal bones. Numerous muscles, ligaments, tendons, and sheaths can be found within the hand. The muscles are the structures that can contract, allowing movement of the bones in the hand. The ligaments are fibrous tissues that help bind together the joints in the hand. The sheaths are tubular structures that surround part of the fingers. The tendons connect muscles in the arm or hand to the bone to allow movement. In addition, there are arteries, veins and nerves within the hand that provide blood flow and sensation to the hand and fingers.
கை மனிதர்களின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று. மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் உறுப்பு. கை - பொதுவாக ஓர் முதனியின் கரம் அல்லது முன்னுறுப்பொன்றின் இறுதியில் இருக்கும், பொருட்களைப் பற்றிக்கொள்ளும் தன்மையுடையதும் பல விரல்களைக் கொண்டதுமான உடலுறுப்பாகும். கைகள் தன்னைச் சுற்றியுள்ளவற்றை கையாள முக்கியமான உறுப்பாகும். பெரிய பொருட்களைப் பற்றிக் கொள்ளவும் (பெரு உந்துதிறன்) சிறு கற்களையும் பிரிக்கவும் (நுண் உந்து திறன்) இவை பயனாகின்றன. விரல்முனைகள் உடலின் மிக அடர்த்தியான நரம்புத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், தொடு உணர்ச்சி மூலமான பின்னூட்டம் கிடைக்கிறது;
திருவல்லிக்கேணி
வாழ் எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி - கண்ணபிரான் .. பாரதப்போர் தனிலே பார்த்தனுக்கு
சாரதியாய் அம்பு பட்ட காயங்களுடன் நமக்கு சேவை அளிப்பவன். ஸ்ரீமன் நாரணன் கிருஷ்ணாவதாரத்திலே - கற்றினம்
மேய்த்தவன் .. .. வெண்ணெயில் உண்டான ஆசையால் இடக்கையாலும் வலக்கையாலும் வாங்கி
உண்டான். பைந்தமிழில், இந்த பொய்யான சரீரத்தை ‘மெய்’ என்பது - மங்கல வழக்கு. இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் ஒன்று :
வைகலும் வெண்ணெய், கைகலந்து உண்டான்
பொய் கலவாது என், மெய்
கலந்தானே.
கிருஷ்ணாவதாரத்திலே ‘நாள்தோறும் வெண்ணெயை இரண்டு கைகளாலும் கலந்து உண்டவனான எம்பெருமான், பொய் இல்லாதபடி என் சரீரத்தில் கலந்தான்,’ என்கிறார் நம் சடகோபன்.
சரி இந்த சங்க தமிழ் பாடலை கேட்டுள்ளீர்களா ?
கழனி யுழவர் கலியஞ்சியோடித்
தழென மதவெருமை தண்கயம் பாயும்
பழன வயலூரன் பாணவெம் முன்னர்ப்
பொழெனப்பொய் கூறா தொழி.
தமிழ் இலக்கியம் மிக பரந்தது .. .. சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவற்றிலே நாம் நன்றாக அறிந்தது - திருக்குறளும் நாலடியாரும். சற்று குறைவாக அறிந்தது : நான்மணிக் கடிகை; கார்நாற்பது; களவழி நாற்பது; இன்னா நாற்பது ; இனியவை நாற்பது - போன்ற சில !! கைந்நிலை என்ற நூல் வாசித்துள்ளீர்களா ??
கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இஃது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் வெண்பா பாவகையில் உள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பது நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. நூலாசிரியர் தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப் பெற்றவர்போலும்! மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.
கை' என்பது இங்கே ஒழுக்கம் என்று பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு ஒழுகலாறு பற்றியது என்று பொருள் உரைக்கலாம். ஐந்திணை ஒழுக்கம் பற்றியது இந் நூலாகும். முன்பு படித்த கைந்நிலை பாடலின் அர்த்தம் : வயலின் கண் உழுகின்ற உழவர்கள் ஆரவாரத்தைக் கேட்டுப் பயந்து விரைந்து சென்று; செருக்குடைய எருமை தழென ஒலியெழும் படி குளிர்ந்த தடாகத்தில் வீழும் இயல்புடைய; மருத நிலங்களையும் வயல்களையும் உடைய தலைவன் விடுத்த பாணனே!; எம் முன்னர் - எங்கள் முன்னிலையில் நீ; பொய்ம்மொழி கூறாதிருப்பாய்; உண்மையே கூறு என உறைத்தாளாம் !!
For a Srivaishnavaite, life is simple ! fall at the lotus feet of Sriman Narayana. At Thiruvallikkeni, Sri Parthasarathi who is the embodiment of Bhagwan Sree Krishna – shows us His Abhaya Hastham (that protective hand) – worship Him and for sure every good things would happen.
Here
are some photos of Sri Parthasarathi emperuman and His abhaya hastham taken
during thirumanjanam on 22.4.2022 – on the evening of thiruther during
Chithirai brahmothsavam at Thiruvallikkeni divyadesam.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29th Sept. 2022
🙏🙏🙏🙏🙏
ReplyDelete