Sri Parthasarathi Brahmothsavam ~ Angurarpanam 2022:
Senai Muthaliyar purappadu
Now
is the time for Special Brahmothsavam at Thiruvallikkeni
divyadesam for Sri Parthasarathi Perumal, conducted now in lieu of the original
one in Apr 2021 missed out due to Corona. Angurarpanam
is today. Tomorrow 20.2.2022 is dwajarohanam after thiruveethi purappadu @ 6 am.
சேனை (பெயர்ச் சொல்) : = படை - பண்டைய காலத்தில்
பல படைகள் ஒன்றிணைந்தது சேனையாகும். சேனை என்ற சொல்லுக்கு அடிச்சொல் சேர்தல், கூடுதல்
என்பதாகவும் கொள்ளலாம். சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம் அல்லது
பிற பொருளிற் பல எண்ணிக்கை என்றும் கொள்ளலாம். போர்தனை வெல்ல பெரிய சேனையும்,
ஆயுதங்களும், சிறந்த சேனாபதியும் அதி அவசியம்.
சேனைத்தலைவர் (சேனைக்குடையார், சேனையார், சேனை முதலியார், சேனைக்குடியர், சேனை
குல வேளாளர்) என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளதாக அறிகிறோம். சேனைத்தலைவர்
- ஒரு சிறந்த போராளியாக, மதி வியூகம் அமைக்க தெரிந்த படைத்தலைவர் - மன்னனது சபையில்
முக்கிய ஆலோசகர். தவிர இப்பதவி வகிப்போர் - நிலச்சுவான்தார்களாக, பண்ணையார்களாக,
ஆயுதம் செய்யும் கலை அறிந்தவர்களாக, வணிகர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்
காலத்தில் இவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சில குறிப்பேடுகள் இயம்புகின்றன.
நமக்கு போரோ, வணிகமோ,பிற பொருட்செல்வமோ முக்கியமல்ல - எம்பெருமான் மட்டுமே
முக்கியம். அவர்தம் திருவீதி புறப்பாடுகளை முக்கியமாக உத்சவ புறப்பாடுகளை அதிலும்
அதி முக்கியமாக - ப்ரஹ்மோத்சவ வைபவங்களை விரும்பி எம்பெருமானை சேவித்து அருள் பெறுவோம். திவ்யதேசங்களில்,
ப்ரஹ்மோத்சவத்திலே - முதல் புறப்பாடு - அங்குரார்ப்பணம் தான் - அன்று எம்பெருமான் புறப்பாடு
கண்டருள மாட்டார் .. .. நம் சம்பிரதாய ஆசார்யர் சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனருக்குத்தான்
புறப்பாடு !!
In the
most reverred epic Mahabharata, rich encomiums are paid to Lord Krishna, His
names are handed down to Yudhishthira by the famous warrior Bhishma who was on
his death bed (of arrows) in the battlefield of Kurukshetra. Yudhishthira asks
Bhishma the following questions “kimekam daivatam loke kim
vāpyekam parāyaṇam”…..
In this
universe - Who is the one (ekam) refuge (parāyaṇam) for all? Who (kim) is
the greatest (ekam) Lord (daivatam) in the world (loke)? …. ..in the invocation
of Sri Vishnu Sahasranamam is a verse which reads : Vignam
nignanthi sathatham, Vishvaksenam thamaasraye.’ This verse pays
homage to the commander-in-chief of Sri Vishnu’s army – Sri Vishwaksena – who
controls the several two-tusked elephant warriors and other beings who serve in
this army.
திவ்ய
தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்யத்விரத வக்ராத்யா .. .. .. விக்னம்
நிக்நந்தி விஷ்வக்ஸேனம் தாமஸ்ரயே' என்று ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ச்லோகத்தில்,
“நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை) விலக்கிக் கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஸ்ரயிக்கிறேன்”
என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரை வணங்கி நம் கவலைகள் தீர்வோம்.
யஸ்யத்விரத வக்ராத்4யா: பாரிஷத்3யா: பரஷ்ஷதம் |
விக்4னம் நிக்4னந்தி சததம் விஷ்வக்சேனம் தமாஷ்ரயே ||
நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து
தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச்
சீடரானார். ரஹஸ்யார்த்தங்களை தங்கள் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கு முன்பு அந்த சிஷ்யர்கள்,
தங்கள் க்ருபைக்குப் பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து, தங்கள் மனம் நோகாதவண்ணம் ,
அதே சமயம், தங்கள் மனம் உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள் என்று உறுதி செய்து கொண்ட
பிறகே உபதேசம் செய்வார்கள். இது ஓராண் வழி ஆசார்யர் சிஷ்யர் என வாழையடி வாழையாக வந்த
மரபு.
எம்பெருமான், பெரிய பிராட்டி தாயாரை தொடர்ந்து நம் ஸத்ஸம்பிரதாயத்தில்
ஆசார்ய பரம்பரையில் மூன்றாவதாக இருப்பவர் சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேநர். இவர் எம்பெருமானின் படைகளுக்கு தலைவராக
இருக்கிறார். ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள்
அனைவரையும் அந்த அந்த செயல்களில் நியமிப்பவராக உள்ளார். இவரே
நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட நித்யவிபூதியையும்,
லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்பவராக இருக்கிறார். ஸேனை
முதல்வர், ஸேநாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர். சூத்ரவதி
என்று இவருடைய திவ்ய மஹிஷியின் திருநாமம். எம்பெருமானின் சேஷ ப்ரசாதத்தை முதலில்
கொள்பவராதலால், இவருக்கு சேஷாஸனர் என்ற திருநாமமும் உண்டு. விஷ்வக்சேனர்
அவதரித்த திருநக்ஷத்திரம்: ஐப்பசி, பூராடம்; இவர் அருளிய சாஸ்திரம்: விஷ்வக்ஸேன
ஸம்ஹிதை.
On Angurarpanam day, Senai Muthaliyar, has purappadu and at Peyalwar sannathi rituals are conducted to collect mirtigai [sacred earth] for construction of the yagasalai.
So from tomorrow morning, for 10 days there would be purappadu
in the morning and evening in various vahanams for Sri Parthasarathi
Perumal. Come to Thiruvallikkeni and
have darshan of Sri Parthasarathi Emperuman in His special Brahmothsavam
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19th Feb 2022.
Very nice.
ReplyDelete