To search this blog

Friday, August 27, 2021

Theppothsavam 2010 - கங்கைகாண் படலத்திலே - ஸ்ரீராமனுக்காக, குகன் கொணர்ந்த நாவாய்கள்!!

ஸ்ரீராமனின் காதை  "இராமாயணம்" ஒரு அற்புத காவியம்.  கம்ப நாட்டாழ்வான் - கங்கைகாண் படலத்திலே - ஸ்ரீராமனுக்காக, குகன் கொணர்ந்த நாவாய்கள் பெரிய கங்கை நதியில் மிதந்து சென்ற    அழகை  விவரிக்கிறார்.  

வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் 16.10.1799. அந்த நாளை நினைவுபடுத்தி 108 ஆண்டுகளுக்குப் பிறகு வ.உ. சிதம்பரானார் சுதேசி நாவாய் சங்கம் கண்ட நாள் 16.10.1906. சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியமான நாள் அந்நாள் !!   கப்பலில் வணிகம் செய்யவந்த பிரிட்டிஷ்காரர்களை அதே கப்பல் கம்பெனியை ஆரம்பித்து மூட்டை முடிச்சோடு அனுப்புவதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் செயல்பட்டு ஆரம்பித்த அற்புதமான  அறப் போராட்டம்.  அது வெற்றியடையாதது பெரிய சூழ்ச்சி .. இந்திய சந்ததியினருக்கு இத்தகைய செயல்கள் இருட்டப்படிப்பு செய்யப்பட்டு, அடிமை வம்சங்களையும், கருணையுள்ள கானிங்கு பிரபுக்களையும் , அரசியல் கைதிகள் அவர்களது வாரிசுகளுக்கு எழுதிய கடிதங்களையும் சரித்திரமாக்கியது ஒரு சிவந்த சூழ்ச்சி.  

On the city roads, we see some Electric cars, scooters and there is much talk about them occupying the central space pushing out the petrol / diesel variants !

Is there an electric future for every mode of transportation? Perhaps that could occur in every possible manner as the merits of battery power seemingly pushing everything else out !!  Companies are working on electric cars and trucks, of course, but also buses, planes, tractors, golf carts, snowmobiles and boats. These projects are at varying stages of development and also varying stages of realism about near-term appeal and utility. Some of these nascent technologies will upend entire categories of transportation; others will be far more niche, at least for now. Electric boats, for example, currently work best for those willing to pay top dollar for a smaller model that doesn’t go very far and doesn’t need a lot of power to get there. That’s a mere sliver of the overall market.

Even before the Covid-19 pandemic left many Americans stuck at home, boating was on the rise. The boom has been fueled in part by innovations that make boats easier to use, new models of drawing customers — such as boat clubs and subscriptions — and a push to attract a broader swath of the American population. The U.S. boat market bottomed right after the financial crisis. In 2010, there were just shy of 178,000 boats sold in the U.S., totaling about $27.3 billion dollars, according to data from the National Marine Manufacturers Association.  Now the numbers are really blooming ! 

Candela has just revealed its latest hydrofoil electric boat, the Candela C-8. With the high-tech, ultra-premium electric boat designed for mass production, the company is calling this “an iPhone moment for the boat industry.” Candela’s first flying electric boat, the C-7, debuted last year as a radical new option in the boating industry. It flew above the water on hydrofoils, allowing it to achieve far better efficiency and range than any other electric boat. While it excelled at demonstrating the efficacy of Candela’s innovative technology, the boat was also largely hand-built from exotic materials in low-scale production for individual buyers. The C-7 sold so well that it greatly outstripped supply, leading Candela to develop the C-8 intended for mass-production.


இது சாலை ஊர்திகள் / சரித்திர  / அரசியல் பதிவு அல்ல !  - கம்ப ராமாயணமும், அலைகடலிலும் பெரிய நதிகளிலும் சென்ற அழகான படகுகள் - நாவாய்கள் - திருவல்லிக்கேணி எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளின் தெப்போத்சவ வைபவம். The reason that a ship floats is that it displaces a lot of water. The displaced water keeps pushing  the ship upwards – this force is called the buoyancy force. The more water that is displaced, the stronger the buoyancy force is which pushes the object up.  This is about the divine float – the Theppam for Lord Sriman Narayana  

தமிழரின் கடல் வாணிபம் மிகத் தொன்மையானது. தமிழர்கள் பெரிய பாய்மரக் கப்பல்களிலே சரக்குகளை ஏற்றிக்கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்துள்ளனர். தமிழர் நாவாய் வைத்து வாணிபம் செய்ததற்கு ஆதாரமாகப் பானை ஓடுகள், காசுகள், சுவரோவியங்கள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் இலக்கியங்களும் தமிழரின் கடலோடிய ஆற்றலைப் பறைசான்றுகின்றன.  நாவாய் சாத்திரத்தில் கப்பல் கட்டுவதற்கு மரத்தைத் தேர்வு செய்தல், கப்பல் கட்டும் முறைகள், கப்பலின் உறுப்புகள், கப்பலைச் செலுத்தும் முறைகள், மரக்கலம் செய்வதற்கான நல்ல நாள், மரம் வெட்டிவரச் சாத்திரம் ஆகியன கூறப்பட்டுள்ளன. இந்நூலில் கப்பலைக் குறிக்க நாவாய், வங்கம், கலம், ஏரா, தோணி, யாத்திரை மரம், படகு, ஓடம், கப்பல் முதலிய பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.




நாவாய்  என்பது படகு.  நம் தெப்பமும் ஒரு நாவாய்தான் !  வாய்நீரில் கிடக்கும் நாக்கு போல் நுனி குறுகி நீரில் ஓடும் கலத்தை நாவாய் என்றனர். இந்த நாவாய் வங்கம், கலம் என்னும் சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாவாயின் தோற்றம் பற்றியும், அவை இருந்த துறைமுகங்கள் பற்றியும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன. கங்கை கரையை கடந்து அப்பாற்செல்ல நினைத்த இராமபிரானின்  கருத்தை அறிந்துகொண்ட குகன், விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர்போலும் கண்களை உடைய இராமன் அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிவிட்டு, அழகு திகழ் சீதையோடும் இலக்குவனோடும் படகில் இனிதாக ஏறினான்.: 

சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி,

வங்க நீர்க் கடலும் வந்து தன் வழிப் படர, மானப்

பொங்கு வெங் களிறு நூக்க, கரை ஒரீஇப் போயிற்று அம்மா-

கங்கையும் இராமற் காணும் காதலது என்ன மாதோ! 

கங்கை நதியில், பெரிய மீன்களும், முதலைகளும் [Gangetic Gariyal] நீந்தி செல்வது இயல்பு .. .. நதிக்கும் யானைக்கும் தொடர்பு உண்டா ? - இதோ கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வாய்மொழி.  இராமனின்  மீது அபரிமிதமான ஆசையும், மரியாதையும் கொண்ட  குகனை நோக்கிப் படகை விரைவாகச் செலுத்துக என்றான் இராமபிரான்.   உடனே படகு விரைவாகவும், இள அன்னம் நடப்பதைப் போல அழகாகவும் சென்றது.  பெருமை பொருந்திய, மிக்க பலம் வாய்ந்த மேல் கிளம்பிய தந்தங்களை உடைய  பலம் பொருந்திய யானைகள் தம்  தள்ளுதலால் -  சங்கு, சுறாமீன், முத்து, மணிக்கற்கள் ஆகியவற்றைத் தள்ளி,  மரக் கலங்களையுடைய நீர் மிகுந்த கடலும்,  தன்னிடத்து வந்து பரவும்படி;  கங்கா நதியும்   இராமனைக் காணும் அன்பு மிக்கூர்ந்தது எனும்படி; கரை கடந்து  சென்றது.  யானைகள் கங்கையில் நீந்தித் தென்கரை செல்லும்போது,  கங்கைத் தண்ணீர்தள்ளப்பட்டுக் கரைக்கு மேலே பரவி யானைகளுக்கு முற்பட்டுத் தென் கரை அடைவது, கங்கையேஇராமனைக் காணும் காதலால் செல்வது போன்றது  என்று இசைக்கிறார் கம்பர். 

Reminiscing the good olden days – here are some photos of Sri Parthasarathi Perumal theppothsavam on 14.2.2010 – yes more than 11 years ago ! – one could see young people rejoicing – the heartening point is most of them seen in these photos are still continuing their kainkaryam with same zeal.

 

adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
27th Aug 2021.










1 comment: