இது சிறப்பான ஆடி மாதம். ஆடிபூரத்தில்
அம்பாளுக்கு வளையல் சார்த்துவதும், வளையல் காணிக்கை, வளையல் மாலை அணிவிப்பதும் பக்தர்களின்
நீண்ட கால நம்பிக்கை. ஸ்ரீவைணவ திருக்கோவில்களில்
கூட, ஆண்டாளுக்கு திருவாடிப்பூரத்தன்று பக்தர்கள்
வளையல்களை காணிக்கையாக அளிப்பர். சில ஆண்டுகளுக்கு
முன்பு வரை கிராமங்களில் திருவிழா என்றவுடன் ராட்டினம், பச்சை குத்துபவர்கள், வளையல்
வண்டிக்கார்கள், பலூன் விற்பவர்கள் எனக் கிராமமே களைகட்டும். பல பழைய படங்களில், வளையல் விற்பவர்கள் கதாபாத்திரமாக
வருவது நினைவு இருக்கலாம். வாழ்க்கை மாறிவிட்டது.
In the last
quarter of 2020-21, India’s gold consumption was up 37% to 140 tonnes over the
same period in 2020, just before the first lockdown. But for many sellers what
was to follow was another death knell. The second wave dried up business, and
even as it waned, higher gold prices put a damper on any possible recovery. ..
.. .. are Indians buying less of Gold !
Hong Kong
was found to be the priciest city in the world for luxury products and
services, according to a report by private bank Julius Baer. It is the most
expensive place to hire a lawyer, due to being a financial center, with a
simple will consultation setting someone back $1,050 on average. Hong Kong also
has among the highest price tags for property, cars, a business class flight,
fine dining, a wedding banquet and beauty services. However, Hong Kong puts no
duties on jewelry, meaning it can be a relatively the cheap city to buy this
high-end product, though a Cartier Love bracelet will still cost $42,228. It
costs even more in Brazil’s capital of Rio de Janeiro, at $54,852, as taxes on
jewelry can be double the levies charged in North America and Europe.
Though this
is not backed up any statistics, a friendly jeweler informed that ‘golden
bangle’ sales constitutes 40% of their turnover – remember, every gold purchase
includes % of wastage and making charges ! - the making charge would depend on the design
and fine intricate ones will have more wastage and more of making charges
! In one famous shop, after the wife
selects the jewellery – the husband would be directed to the sales manager –
who would in turn talk to somebody and would offer a reduction of couple of
hundred rupees on making charges ! with the value of purchase being more than
30000!!
Gold bangles
have adorned and ornamented women’s dainty wrists since forever. This is a
symbol of status, prosperity, and wealth. Wrists vary in size, thickness,
texture, strength, and symbolize kindness as well as for gallantry. Wrists must
be decorated with jewels not because they help establish the human connection! More
so because they are status symbols. Diamond Bangles also sell well ! the Jewellers cash more in experimentation
with so called newer designs, patterns, styling, engraving and more ! - some
would prefer very delicate thin gold
bangles while some would insist them being solid and weighing more !
ஆண்டாள் நாச்சியார் திருமொழி பாசுரத்தில் ஒரு சொல் 'கோல்வளை' - இது பெயர்ச்சொல் - ஒரு வளையல்வகை. வளையல்
என்பது இரண்டு கைகளிலும் மணிக்கட்டில் அணியும் ஒரு அணிகலனாகும். பொதுவாக வட்ட
வடிவமானது. ஆனால் வளையக் கூடியதல்ல. இது ஒரு இந்தியப் பாரம்பரிய ஆபரணமாகும். தங்கம்,
அலுமினியம், பிளாட்டினம், கண்ணாடி, எனப் பலதரப்பட்ட
பொருட்களால் உருவாக்கப்படுகின்றன.
** பெய்யுமாமுகில் போல் வண்ணா!
உன்றன் பேச்சும்செய்கையும்
எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாயமந்திரந்தான் கொலோ ! **
For
Srivaishnavaites, the month of Aadi is of special significance – as
Thiruvadipuram [Puram Nakshathiram in the month of Aadi] – is the
most blessed day for all Srivaishnavaites – marking
the birth of Kothai Piratti [Andal]
This year Thiruvadipuram falls on Wednesday 11th Aug 2021 and today
commences the Andal Uthsavam.
தமது திருப்பாவையில் -
"வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறுபெற
உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே
சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் இன்று முதல் இனிதே துவங்குகிறது. அவரது திருப்பாவையின் யாப்பு மிக கடினமான இலக்கண கோப்பு வாய்ந்தது. திருப்பாவை முப்பது பாடல்கள் - சங்க தமிழ்மாலை என
போற்றப்படுகின்றன. ஆண்டாளின் திருப்பாவையும்
நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சொல்லழகும் பொருள் அழகும் சிறப்புற மிளிர்பவை. "நம்மையுடைவன் நாராயணன்" என மானுடவரான நாம் 'பரம்பொருளின் உடமை' என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்.
ஆண்டாள்
அபரிமிதமான பக்திக்கு உன்னத உதாரணம். கோதைப்பிராட்டி
தான் கொண்ட பக்தியினாலே , எம்பெருமான் வாக்கு மாறமாட்டான், நம்மை ரக்ஷிப்பான், தம்மைக்
கைக்கொள்வான் என்று உறுதியாக இருந்தாள். அவரது
பாசுரங்களில் நாரணன் தன்னை ஏற்க தாமதாவதில் வருத்தமும் அதே சமயத்தில், ஸ்ரீமன் நாராயணனையே
கை பிடிப்பேன் என்ற மனதிண்ணமும் விளங்கும்.
இதோ இங்கே ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் இருந்து ஒரு பாசுரம் : -
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வராகாதே !!
பொங்கும்
அலைகள் சூழ்ந்த நிலமும்,விண் உலகமும், எந்தக் குறையுமின்றி,தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான்,
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார், என் வளையாலா துன்பம் தீரப் பெறுவார்? அது முடியாதே
என நினைந்து ஆண்டாள் உடல் மெலிந்ததாம்.வளையல்கள் கழண்டதாம் ! எம்பெருமானையே நினைத்து பாடி மகிழ்ந்து, பரிதவித்து,
மாலை சூடி கொடுத்து, எம்பெருமானையே கைப்பிடித்த கோதை பிராட்டியின் திருவவதார உத்சவ
சமயத்தில், ஆண்டாளின் தாள் பணிந்து தொழுவோம்.
சென்ற வருடமும் இந்த வருடமும்
புறப்பாடு இல்லை. ஆண்டாள் உத்சவம் வீதி புறப்பாடுகளை முன்னாளில் கண்டு ஆனந்தித்தோம். இப்போது இயலவில்லை !! கோதைப்பிராட்டி தனது நாச்சியார் திருமொழியில் அனுபவித்தது
போல " மழை திரண்டு பொலியும் கார்மேகத்தைப் போன்ற எம்பெருமானது வடிவழகு, நம் அனைவரையும்
மயக்கி, அவன்பக்கல் மென்மேலும் மையலுற வைக்கிறது.
பழையவற்றை நினைத்து ஸ்ரீஆண்டாள் நீராட்ட உத்சவம் 2016ன் சில படங்கள் இங்கே
:-
Praying Emperuman Sriman Narayana and Kothai piratti that
dreaded diseases like Covid end and are eliminated once for all. We pray to Him
for his continued, unhindered darshan, festivities like veethi purappadu and
more. Here are some photos of Sri Andal
neeratta uthsavam at Thiruvallikkeni on 6th & 9th Jan
2016.
Sri Andal thiruvadigale saranam !
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2nd Aug 2021.
No comments:
Post a Comment