To search this blog

Sunday, November 8, 2020

Praying Emperuman to be in our heart - மனத்தடைய வைப்பதாம் மாலை - Theppam 2020

எம்பெருமான் நம் மனத்திலே என்றென்றும்  குடியிருப்பான் !  ~  நாம் செய்யவேண்டியது, அவ்விடத்தை தூய்மைப்படுத்தி, அவனுக்கு ஏற்ற கோவிலாக மணம் திகழ வைத்திருப்பது தான்.  ஒரு சாதாரண இல்லத்தை வாடகைக்கு விட வேண்டும் என்றாலே, அவ்விடத்தை சுத்தமாக மற்றவரை கவரும்படி வைத்திருக்க வேண்டுமல்லவா !!  - எம்பெருமான் ஸ்ரீமன்நாரணன் நம் மெய் குடியேற - நமக்கு அவனிடத்தில் அளவிடமுடியாத ஆர்வமும், ஈடுபாடும், பக்தியும், நற்குணங்களும் வேண்டும். எம்பெருமான் இடத்திலே பக்தியுடன் தொழுது அவன் அடியார்க்கும் கைங்கர்யங்கள் செய்தாலே, நம் மனதிலே ஸ்ரீமந்நாரணன் சர்வ நிச்சயமாக குடியேறுவான்.  



The much-awaited Northeast monsoon has arrived  in Tamil Nadu and Pondicherry around October 28, the Regional Meteorological Centre said.  Meanwhile, the depression in the bay crossed West Bengal and Bangladesh coasts between Sagar Islands and Khepupara over Sundarbans on Friday. The Southwest monsoon, has been active over Karnataka. However, it is expected to withdraw from all parts of the country from  October 27, clearing the path for retreating Northeast monsoon to set in over the southern India.

Met Office stated that the Northeast monsoon is expected to bring near-normal rains over north Tamil Nadu and below normal rains in the southern parts. For the past couple of days, North Tamil Nadu, including Chennai, has been receiving intense pre-monsoon showers and thunderstorms.  Many parts of Chennai received rain on Tuesday morning as northeast monsoon entered an active phase. As day progresses, strong easterlies would move over interior regions bringing convective rainfall.  The western and southern districts of Tamil Nadu will continue to get heavy rainfall, while Chennai will witness light to moderate rains for the next two days before getting a break. The regional meteorological department on Friday issued a heavy rainfall warning to Thanjavur, Tiruvarur, Nagapattinam, Cuddalore, hill ranges of Theni and Nilgiris districts.   The rainfall activity is the result of a cyclonic circulation over the Gulf of Mannar and adjoining Sri Lanka now concentrated over the Comorin area.

Rains are important but whether they will come or not, is never in our hands – what we should do is keeping channels, lakes, ponds, reservoirs clean and ensure that rain water is not wasted but channelized through RWH pits and natural ponds to reach the storage area and percolate into the ground.  This would raise the ground water table besides improving the quality of water.  Boothathazhwar teaches us the significance and importance of keeping the place ready – be it for holding the rainwaters as and when they come 0r more importantly, keeping Emperuman Sriman Narayanan in our hearts .. ..  



இதிஹாச புராணங்களிலும் சரி, பலர் ரசிக்கக்கூடிய திரைப்படங்களிலும் சரி, வீரம் போற்றிப்பேசப்படும் குணம். வீரன்தான் கதைக்கு நாயகன்.  வீரதீர பராக்கிரமங்கள்  தான் கதைக்கு மெருகு கூட்டுபவன !    “வீர்யமாவது வீரனுடைய குணம். வீரன் எவன் என்பதை லட்சண ரூபமாகக் காட்டுவதைக் காட்டிலும், திருஷ்டாந்த ரூபமாகக் காட்டினால் நன்கு விளங்கும். சவ்யசாசி எனும் அர்ஜுனன் பெரிய வில் வீரன்.  வீரர்கள்  தர்மவீரர் என்றும், அதர்ம வீரர் என்றும் இருபாற் படுவர். பார்த்தன் போன்றோர் தர்ம வீரர்; கவுரவர்கள் அதர்ம வீரர்.  திருஷ்டாந்தம் என்ற பெயர்ச்சொல்லுக்கு : உதாரணம், மேற்கோள், என பொருள்.

ஆழ்வார்களின் பாடலில் தமிழும், அர்த்தமும், சத்விஷயங்களும் கமழும்.  த்ருஷ்டாந்த வாக்கியார்த்தத்தின் ஸ்வாரஸ்யத்தை உணர்ந்த கொண்டு அதற்கிணங்க பாசுர வரிகளின் அர்த்தத்தை அறிவது இனிமையானது.   விண்ணின் கொடையே மழை .. அம்மழை நீரை சேமிக்கும் அவசியத்தை சென்னை போன்ற நகரங்களில் வசிப்போர் நன்கு அறிவர். கடந்த சில வருஷங்களாக மழை நீர் சேமிப்பு முறைகளை சரியாக மேம்படுத்திய பகுதிகளில், மழைநீர் நிலத்திற்குள் பாய்ந்து பூமியை வளப்படுத்துவது கண்கூடு. 

இதற்காகவே நம் முன்னோர்கள் குளங்களையும் ஏரிகளையும் வெட்டினர்.  காடெழுந்து மேடாயிருந்த நிலத்தைச் சீர்திருத்தி ஏரியாக வெட்டுகின்றோமாயின் இக்காரியம் மழைபெய்வதற்கு ஸாதநமாக மாட்டாது;  நாம் ஏரி வெட்டுகிறோமென்பது கொண்டே பர்ஜந்யதேவன் மழை பெய்து விடுவனோ? மழை பெய்வதென்பது பகவத் ஸங்கல்பாதீநமாகையால்.  அப்படிப்பட்ட மழைக்கு ஏரிவெட்டுதல் உபாயமாகமாட்டாது.  இஃது உலகறிந்த விஷயம்.  ஏரி வெட்டுதல் மழைபெய்வதற்கு உபாயமன்றாகில் வீணாக ஏரி வெட்டுவானேன்?  என்று நினைக்கலாகாது; எப்பொழுது  பகவத் ஸங்கல்பத்தாலே மழை பெய்கிறதோ !  அந்த மழை நீரை வனத்திடர் தாங்கிக் கொள்ளமாட்டாது; நாம் அந்த வனத்திடரைச் சீர்திருத்தி ஏரியாக அமைத்து வைப்போமாயின், மழை பெய்யும்போது வரும் தண்ணீர் அதிலே தங்குவதற்குப் பாங்காகும்.  ஆகவே மழைநீர் பழுதுபடாமைக்காக ஏரி வெட்டுதலேயன்றி மழையைப் பெய்வித்தற்காகவன்று என்பது விளங்கும்.  இவ்வாறே, நாம் சேதநராகப் பிறந்துள்ள வாசிக்காக நம்முடைய நிலைமைய சீர்ப்படுத்திக் கொள்வதானது பகவத்ப்ராப்திக்கு  ஸாதநமாகமாட்டாது; ஒருகால்  பகவான் நம்மை திருவுள்ளம் பற்ற வருவானாயின் அவனுடைய விஷயீகாரம் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப் பாங்காகும்.  நம்மை நாம் சீர்திருத்தி வைத்துக் கொள்ளுதல். இதோ இங்கே நம் பூதத்தாழ்வாரின் அற்புத வரிகள் : 

தனக்கடிமை பட்டது தானறியானேலும்

மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை

ஏரியாம் வண்ணம் இயற்றும்  இதுவல்லால்,

மாரியார் பெய்கிற்பார் மற்று.

சேதநனாகிய தனக்கு அடிமை  அமைந்திருக்கின்றது  என்பதை  தான்தெரிந்துகொள்ள அசக்தனாயிருந்தாலும்,  எம்பெருமான் தானாகவே மனத்திலே வந்து சேர்ந்த அளவிலே, அப்பெருமானை  இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;  பக்தனான இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்; காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை, பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி, ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி பின்னும் மழையை பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள் யாவருளர்? (மழை பெய்வது பகவத் ஸங்கல்பத்தாலன்றோ?.) 


எம்பெருமானை பூஜித்தலும், அவன் உகக்கும் செயல்களையும், அவனடியார்க்கு நற்சேவைகள் செய்வது போன்றவை மூலம், பக்தர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டு எம்பெருமானிடத்திலே மென்மேலும் ஈர்க்கப்பட்டு, அவனையே தங்கள் உள்ளங்களில் கொண்டு ஆனந்திப்பர்.

தெப்போத்சவம் ஒரு இனிய அனுபவம்.  திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே  16.2. 2018 அன்று நடந்த தெப்போத்சவ  இரண்டாம் நாள் புறப்பாட்டின் சில படங்கள் இங்கே.  இரண்டாம் நாள் மட்டும் சிறிய மாட வீதி புறப்பாடு - ஸ்ரீ பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி சேவிக்கப்பெறுகிறது.  

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
08.11.2020

நன்றி:  கட்டற்ற அற்புத சம்பிரதாய களஞ்சியம் : திராவிட வேதா இணையம் ; கச்சி ஸ்வாமிகள் - திரு உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி விளக்க உரை. 











1 comment:

  1. திருவல்லிக்கேணி திவ்ய தேசம் ஆசார்யன் இராமானுஐரை தந்தது. மற்றைய நம் காயங்கள் மாற்ற உதவுகின்றது

    ReplyDelete