Swami Manavala Mamunigal
650th Sarrumurai 2020 :
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் ***
Sri:
Srimathe Ramanujaya Namaha:
Srimath Varavara Munaye
Namaha:
குணமணி நிதயே! நமோ நமஸ்தே; குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |
வரவரமுநயே நமோ நமஸ்தே ; யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே ||
சிறந்த
குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு
வணக்கம். மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம்
அறிந்தவரே உமக்கு வணக்கம். இன்று ஓர் அற்புத நாள் - நமது ஆசார்யர் ஸ்வாமி மணவாளமாமுனிகளின் 650வது திருவவதார வைபவம். சாற்றுமுறை.
Corona has severely affected the way people live .. .. the
continuous lockdown has caused difficulties – now shops, malls, cinema shooting, public transportation – all opened
but not Temples. Darshan are allowed
during restricted hours and there are no purappadus. Today 21st Oct 2020 being
Aippaisyil Thirumoolam would have been far different. At Thiruvallikkeni, the day would start with
Mamunigal mangalasasanam at all sannathies and .. .. the greatest darshan one would dream -
the divine blessing of ‘Kaithala Sevai’ ~ [Lord Parthasarathi
and consorts being carried in the hands of the battars] – then the beautiful
white umbrellas – 20 of them from 14 jon to 24 jon would open up - spotless
white parasols – the divine kodais for the grand sarrumurai purappadu of Acaryar with Sri Parthasarathi
Perumal, commemorating the birth of
divine Acharyar Swami Manavala Mamunigal.
ஸ்ரீ வைஷ்ணவத்தின் சொர்க்க பூமியான
பூலோக வைகுண்டத்தில் நிகழ்ந்த முகம்மதியர் படையெடுப்பால்
பல்லாயிரக்கணக்கானோர் கோயிலையும்,
நம்பெருமாளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிர் ஈந்தனர். வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழிலரங்கம் எனும் புகழ்ச்சி பெற்ற திருவரங்கத்து மதில்களும், வீதிகளும் அங்கு வாழ்ந்த
ஸ்ரீவைஷ்ணவர்கள் துயரங்களை கண் நோக்கிய - பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக
மோசமாக தொடங்கியது. டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள், பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த
தமிழகத்தை சூறையாட படை எடுத்த காலம் அது.
1311ம் ஆண்டு மாலிக்காபூர் , ஸ்ரீரங்கத்தையும் சுற்றுப்புறங்களையும் அடைந்து, செல்வங்களையும் கொள்ளை கொண்டு .. சூறையாடி பலரை கொன்ற துக்க காலம். திருவரங்கன் தனது உறைவிடத்தில் இருந்து எழுந்து அருளப்பட்ட கொடிய காலமும் கூட. ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த ஆசார்யர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறினார்கள் , பிள்ளை லோகச்சரியார் அரங்கன் திருமேனியியை தாங்கி தென் திசை நோக்கி சென்று மதுரை அருகே அழகர் கோவிலில் தங்கினார் ....பின்பு ஜ்யோதிஷ்குடி என்கிறவூரில் நோய்வாய் பட்டு மறைந்தார் .. திருவரங்கத்தில் வாழ்ந்த பல்லாயிறவர் அன்று தன்னுயிர் ஈன்று அரங்கன் திருமேனியை காத்ததால் ,இன்று நாம் பல சேவைகளை கண்டு மகிழ்கிறோம்.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக
கோயிலும், கோயில் நிர்வாகமும் ஸ்தம்பித்த வரலாறும்
ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஏடுகளில் ஓர் இருண்ட காலமாகும். இதனால் பாழ்பட்டு இருந்த
இக்காலத்தில் பழைய பெருமைகளை மீண்டும் ஒளிர, ஸ்ரீவைஷ்ணவம் என்னும் ஆலமரம் தழைக்க
ராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினார் ஸ்ரீ மணவாள மாமுனிகள்.
Mamunigal is fondly known as ‘Yatheendra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar [Yatheendrar]. Sri Manavala Mamunigal is the incarnation of Adisesha. He was born in Sikkil Kidaram in AD 1370. At birth he was known as ‘Azhagiya Manavala Perumal Nayanaar’. Later he was hailed in very many names such as ‘Yatheendra Pravanar’, Ramyajamathru, Saumyajamatru, Visada-Vak-Sikhamani, Varayogi, Varavaramuni and more…..
His parents were Thigazhakidanthan Thirunaveerudayapiran Thatharannan, a disciple of Sri Pillailokacarya, and Sriranga nachiyar.. He became a sishya of Tiruvaimozhippillai. Manavala mamuni's devotion to Nammalvar, Ramanuja and to his own Acharya grew as he studied the Alwar's hymns and rahasya arthangals at Alwar Thirunagari. He lived for 73 years on this earth performing many Kainkaryams at Sri Rangam and undertook many pilgrimages to many Sri Vaishnava Divyadesams spreading knowledge and bakthi culture. His patent style was to elucidate the pramanams fully ‘following the words of the Purvarcharyas without deviating a wee bit’. He filled his vyakhyana granthas with the words of purvAcharyas. As followers of Mamunigals, duty thus is cast on us to understand the significance of preserving, maintaining, supporting and following the rituals and customs associated with all our traditional Temples.
For a Srivaishnavaite, Kainkaryam is essential; Selfless and unconditional “kainkaryam i.e., service to Lord” cleanses the soul of the performer. One must adore and be attached to their Acharyan and only the direction of Acharyar will lift us from all earthly evils – and for Us fallen at the feet called ‘Ponnadiyam Sengamalam’ – Swami Manavala Mamunigal will direct us and take us to salvation. Those of us who try and uphold the ideals of our religion and its cultural heritage, will sure be benfitted as it then becomes the responsibility of Acharya to take care of Sishya's Atma guna poorthi.
Of the many works, ‘Upadesa Rathinamalai’ is one which all of us should know and recite regularly. There are 73 paasurams + thanian given by Kovil Kandadai annan and another one rendered by Erumbiappa. His another magnum opus is - Thiruvaimozhi Noorranthathi, which presents essence of Nammazhvar’s Thiruvaimozhi in hundred sweet verses of poetry, with each verse capturing the essence of a decad (a decad comprises approximately ten songs). The literary structure of this work is worth an independent study in its own right. Mamunigal has set this in Venpa style, a metrical prosody comprising four lines; in every song he conveys the essence (tatparya) of a decad of Thiruvaimozhi, in every verse he extols Nammalwar by his various names and yet has striven to keep the Anthathi style of composition, thereby beginning each verse with the same word the previous verse ended with. A real classic !
ஸ்ரீமந் நாராயணனால் தன் விஷயமான மயர்வற மதிநலம் (பரிபக்குவமான பக்தி) அருளப்பெற்றவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் நமக்கு அருளிய அற்புத பிரபந்தங்கள் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி. திருவாய்மொழி ஸாமவேதத்தின் ஸாரமாகக் கருதப்படுகிறது. திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம் திருவாய்மொழியின் அர்த்தங்களை நன்கு விளக்குகிறது. நம் போன்ற சகலரும் இத்தகைய அற்புத பகவத் விஷயங்களில் திளைக்க மாமுனிகள் தாம் திருவாய்மொழி நூற்றந்தாதி அருளிச்செய்தார்.
இவ்வுலகில் உயர்ந்தது எது ? - என்றால் - முத்தும் மணியும், வைரமும் நன்பொன்னும், பட்டு போன்ற ஆடைகளும், வாகனங்களும், வீடுகளும், மாளிகைகளும், ஏனைய பொருட்களும், தேக ஆரோக்கியமும், பதவி, செல்வாக்கு போன்றவையும் என பற்பல விரியும். உயர்ந்தவையென்று பேர்பெற்ற மற்ற வஸ்துக்கள் எல்லாவற்றினுடையவும் உயர்த்தி உண்மையன்றென்னும்படியும் தன்னுயர்த்தியே சாச்வதமாகும்படியும் உயர்ந்த கல்யாணகுணங்களை யுடையவன் நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் மட்டுமே என்பதை உணர்தலே வாழ்க்கை. திருவாய்மொழி பாசுரம் இப்படியாக துவங்குகிறது :
உயர்வற
உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற
மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும்
அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
எம்பெருமானது திருக்கமல பாதங்கள் எவ்வளவு உயர்ந்தவை ! - "துயரறு சுடரடி" - அடியார்களுடைய துக்கங்களையெல்லாம் போக்கி அதனால் ஒளிபெற்று விளங்குகின்ற திருவடியல்லவா அவை !! மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார். இந்த முதல் பதின் பாசுரங்களின் இரத்தின சுருக்கமாக, ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருவாய்மொழி நூற்றந்தாதி முதல் பாசுரம் விளங்குகிறது. இதில், மாமுனிகள் எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளைப் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்” என்று சொல்லும் முதல் திருவாய்மொழி சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று அருளிச்செய்கிறார்.
உயர்வே பரன் படியை உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து
மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும்
மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு !
மேன்மைகள் பொருந்திய எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே ஸர்வேச்வரன். அவனது கல்யாண குணங்களை முழுவதுமாக அநுஸந்தித்த ஸ்வாமி நம்மாழ்வார், தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல், உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழிசெய்யும். ஸ்ரீவைணவர்களுக்கு நம்மாழ்வாரின் சொல்லே வேதம், அவையே எம்பெருமானை அடைய வழி வகுக்கும் மார்க்கம்.
In the few years that he lived on this earth, Sri Varavara Muni physically ensured renovation of numerous temples, reorganised rituals and set up ways of worship and ensured continuance of traditions through his eight famous disciples known as Ashtadiggajas (elephants of the eight directions). Sri Vanamamalai Mutt at Nanguneri was established by Mamunigal through his first disciple Sri Ponnadikkal Jeeyar in 1410.
At Thiruvallikkeni Divyaesam WE miss the purappadu of our Acaryar Manavala Mamunigal with Sri Parthasarathi - reminiscing the past, here are some photos of 2016.
இப்படிப்பட்ட
கீர்த்திமிகு ரம்ய(அழகிய) ஜாமாதர(மணவாள) முனி(மாமுனிகள்)கள் திருவடிகளுக்கு
பல்லாண்டு, பல்லாண்டு பாடுவோம்.
21st Oct 2020.
Very nice.. super photos
ReplyDelete