The
most dreaded thing that the World is facing is not even terrorism, it is Corona
virus – Covid 19 (it was so carefully named to ensure that there are no
references to the country where it originated and spread !) – the irritating
news ! : update and statistics on Corona cases in social media. As the coronavirus cases continued to
increase in the country, a number of states on Sunday decided to extend
lockdown beyond June 30. Saying that it is not possible to completely withdraw
the lockdown at this critical time, these states issued fresh guidelines for
the people and urged them to adhere to it.
~ what would happen from July 1 is the Q ? – life would not be far
different. Towards peace and goodness,
let us all pray our Emperuman that the virus is contained sooner and life is
normal. On day 2 [30.6.2020] of Aani
Brahmothsavam, it would have been Sesha vahanam for Sri Azhagiya Singar. Here are some photos of 2010 & 2017
reminiscing those glorious days and praying for better days.
Chant – Om Namo Narayana and pray that all evils vanish !!
முதலாழ்வார்களுகுப் எம்பெருமானுடைய
விபவ அவதாரங்களில் கிருஷ்ணாவதாரமும், த்ரிவிக்ரமாவதாரமும்,
அர்ச்சாவதாரங்களுள் திருவேங்கடமலையும் அடிக்கடி வாய்வெருவும்படியாயிருக்குமென்பது குறிக்கொள்ளத்தக்கது. கண்ணபிரானது
வாழ்க்கையே ஒரு சிறந்த நீதி காவியம்.
ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்து நந்தகோபர் திருமாளிகையிலே வளர்ந்த அவர், குழந்தை பருவத்திலேயே பல சோதனைகள்,
கஷ்டங்கள், உயிர் தாக்குதல்களை தாண்டி தனது அவதார மஹிமையை அவ்வப்போது வெளிப்படுத்தி
வளர்ந்தவர். நமது திருக்கோவில்களில் பிரமோத்சவத்திலே
- எம்பெருமானுடன் தொடர்பு கொண்ட - சேஷ, கருட, ஹனுமந்த வாகனங்கள் மிக சிறப்பு.
திருவல்லிக்கேணி ஆனி ப்ரஹ்மோத்சவத்தில்
இரண்டாம் நாள் காலை 'சேஷ வாஹனம்'.
எம்பெருமானது தரிசனத்துக்கு ஏங்கும் நமக்கு திருமலை ஒரு வழிகாட்டி
!. திருமலை திருப்பதியும் மார்ச் 20 ம் தேதி
முதல் தரிசனத்தை ரத்து செய்தது. ஆகம விதிகளின் படி பெருமாளுக்கு தினமும் ஆராதனைகள் நடைபெற்றுவந்த நிலையில் ஜூன்
8 -ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி ஜூன் 8 ம் தேதி முதல் ஸ்ரீவாரி ஊழியர்களுக்கு சோதனை அடிப்படையில் தரிசனங்களை
அனுமதித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஜூன் 11 முதல் சிறப்பு தரிசனம் மூலம் பக்தர்கள்
தரிசனம் செய்ய அனுமதித்தது. மேலும் ஜூலை 1
முதல் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன சேவையும் நாள் ஒன்றுக்கு 3,000 பேருக்கு அனுமதி
வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன்களை திருப்பதியில்
உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளேஸ்களில்
பெற்றுக்கொள்ளலாம். சர்வ தரிசன டோக்கன்களை ஒருநாள் முன்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன்படி ஜூலை 1 ம் தேதிக்கான டோக்கன்கள் நாளை (30.6.20) முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Snake
worship has been prevalent in many cultures. The Kingdom of Dahomey was an
African kingdom (located within the area of the present-day country of Benin)
that existed from about 1600 until 1904, when the last king, Béhanzin, was
defeated by the French, and the country was annexed into the French colonial
empire. In Africa the chief centre of serpent worship
was Dahomey, but the cult of the python seems to have been of exotic origin,
dating back to the first quarter of the 17th century. The rainbow-god of the
Ashanti was also conceived to have the form of a snake. His messenger was said
to be a small variety of boa, considered sacred.
There are
more than 3,000 species of snakes on the planet and they’re found everywhere
except in Antarctica, Iceland, Ireland, Greenland, and New Zealand. About 600
species are venomous, and only about 200—seven percent—are able to kill or
significantly wound a human. The
serpent, or snake, is one of the oldest and most widespread mythological
symbols. The word is derived from Latin serpens, a crawling animal or snake.
Of those who render
service to MahaVishnu, Ananthan – the AdiSesha
serves Him in the best possible manner that one could visualize. He is with Him when He is moving, sitting and
at Thirupparkadal, Emperuman is reclining on him. The serpentine Ananthazhwaan is ever at the
service of the Lord in every possible manner.
There is the
illustrious lineage of Purvacharyargal – the hierarchy of Srivaishnava
preceptors – through whom the glorious traditions passed by in
generations. Its happy culmination with
Namperumal Himself becoming disciple of Acarya Mamunigal redounds the wisdom of
our holy lineage. Swami Emperumanar (Sri
Ramanujar) and Mamunigal – both were incarnation of Adisesha. Born as Nayanar, Mamunigal was an ocean of
knowledge, yet learnt at the feet of his erudite father and others – the way
Sri Rama and Sri Krishna did, during their stay on earth – through courses
under great sages of their times like Vasistha, Viswamitra, Sandeepani .. ..
இதோ இங்கே திரு பூதத்தாழ்வாரின்
அற்புத வரிகள். : -
பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய்,
மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும்
காவலனே, ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன்
நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை.
எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே
! ஸர்வரக்ஷகனே !, எங்களை என்றென்றும் காப்பாற்றும் ! திருவாய்ப்பாடியில் சிறு குழந்தையாயிருந்து வளரும் வேளையில், பெரியதொரு
வண்டியின் உருவில் வந்த சகடாசுரனை கட்டழியும்படி
உதைத்துத் தள்ளினாய்; இந்த பூமியை மஹாபலியினிடத்தில் யாசித்துப் பெற்று, எல்லா ஆத்மாக்களையும் ரக்ஷித்தருளினாய். இவ்வாறெல்லாம் சிறப்பு வாய்ந்த ரக்ஷகனான
உன்னை மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால், நான், உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள
நாக்கை உடையவனாயிருக்கிறேன்; உனக்கு பிடித்தமான, உன்னை அர்ச்சிப்பதற்கு உரிய புஷ்பங்களை
உடையவனாயிருக்கிறேன்; உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான் வெகுகாலமாக
கொண்டுள்ள தாழ்வுகளை போக்கியருள வேணும். ~ என பிரார்திக்கின்றார்.
உத்சவ காலத்திலே 2ம் நாள்
காலை இந்த பாசுரங்கள் சேவிக்கப்பெறும். எம்பெருமான்
தெள்ளியசிங்கரது திருவடி தொழுது, நாமும், உலக
நலனுக்காகவும், நம் சம்ப்ரதாயம் சீர் பெறவும், நம் அனைவரும் வளமுடன் வாழ்ந்து - எம்பெருமானின்
பல உத்சவங்களை, பற்பல திவ்யதேசங்களிலே சேவிக்கப்பெறுவோமாக !!
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli
Srinivasan Sampathkumar
30.06.2020.
No comments:
Post a Comment