Ever
wondered what is the purpose of life ? ~ why were we born .. why did Emperuman
bless us with good hands, legs and tongue ? – what are we to do with the
members of the body ??
To
the Western World, there are many insignificant happenings .. today is a Full
moon day. In the Northern
Hemisphere, the full moon closest to the autumn equinox is known as the Harvest
Moon. Depending on the time zone, 2019’s
autumn equinox for the Northern Hemisphere comes on Sept 22 or 23 ~ and the
September full moon comes today, on the night of Friday, Sept 13, for the most
of North America, and on September 14 for much of the rest of the world. Thus,
for the Northern Hemisphere, this upcoming full moon – the full moon closest
to autumn equinox – is our Harvest Moon.
For the Southern Hemisphere, the Harvest Moon always comes in March or early
April.
Harvest Moon is
just a name. In some ways, it’s like any other full moon name. But these autumn
full moons do have special characteristics, related to the time of moonrise. A Full Moon on Friday the 13th only happens
once every 20 years on average. Stargazers were last treated to a Full Moon on
the spooky date in October 2000. The next Full Moon on Friday the 13th will
take even longer and will not appear until August 13, 2049.
For us such mundane
things do not worry .. .. we are blessed
with the good heart supported by strong and good faculty of hands, legs, mouth,
tongue with its faculty of speech – all
provided for the purpose of praising our Emperuman Sriman Narayanan all the
time and to those who do not indulge in such practices despite have strong
limbs, we should feel sad for such people
who make no effort to praise the Lord get to accrue further Karmas by their act of
non-performance !.
‘நம்மை எம்பெருமானான ஈச்வரன் படைத்தது எதற்கு ? நமக்குக் கைகால், வாய்,
மூக்கு, நாக்கு போன்ற அங்க அவயங்களை நல்லபடி தந்தது எதற்கு ?? ~ எந்த ஆராய்ச்சியும்
தேவையில்லை. பகவத் விஷயத்திலே பல்லாண்டு
பாடி எம்பெருமானை துதிப்பதே நம் வாழ்க்கை வழிமுறை என்கிறார் சுவாமி நம்மாழ்வார் தமது
'பெரிய திருவந்தாதியில்".
வகைசேர்ந்த நல் நெஞ்சும் நாவுடைய வாயும்*
மிகவாய்ந்து வீழா எனிலும்* -மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தாதிருப்பர் இதுவன்றே?
மேலைத்தாம் செய்யும் வினை*
ஞானத்தினால்
எம்பெருமானை அடைந்து உய்வதற்கு மார்க்கமாக
ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும், எம்பெருமானை
நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும்,
இப்புவியில் சேதநராயப் பிறந்திருக்கிற
தாங்கள், நன்றாக ஆராய்ச்சி பண்ணி எம்பெருமானைப் போற்றிப் பேசுவதற்கு இயல்பான நாவோடு கூடிய வாக்கும் கிடைக்கப்பெற்றும், எம்பெருமான்
ஸ்ரீமன் நாராயணனை வாழ்த்தாமல் வெறுமனே இருப்பவர்கள்,
இனி எஞ்சி இருக்கக்கூடிய காலமும் கெட்டுப்
போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது - என அங்கலாய்க்கிறார் சுவாமி நம்மாழ்வார்
தமது பெரிய திருவந்தாதி பாசுரத்திலே !
.. .. திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்திரத்தில் இன்று பவித்ரோத்சவத்தின் ஆறாம் நாள். பல்வேறு உத்சவங்களில்
ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம்
அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். இன்று மாலை நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், பெரிய அழகு மலர் மாலையுடன், கிரீடம், புதுப்பூணூல் சாற்றிக்கொண்டு அற்புத புறப்பாடு கண்டு
அருளினார். இன்றைய படங்களிலே பெருமாள் பல வண்ணப் பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம்.
இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.
Here are some photos of Sri Parthasarathi Perumal taken during 6th
day of Thiru Pavithra Uthsava purappadu at Thiruvallikkeni in the evening of
today.
~adiyen
Srinivasadhasan. 13.09.2019.
No comments:
Post a Comment