Today (14th Sept 2019 – Avani 28) is the
concluding day of Thirupavithrothsavam at Thiruvallikkeni. Sri Parthasarathi had grand periya mada
veethi purappadu at Thiruvallikkeni. Apart from the beautiful crown,
the big garlands and His most attractive face, one can worship the silken
threads (pavithram) adorning Him.
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள் கொண்ட ஸ்ரீமன் நாராயணனை எவ்வாறு
அழைத்து கழிப்புறுவீர் ? .. மாதவ, கேசவா, வாமனா, மதுசூதனா, நாராயணா, வாசுதேவா, புருடோத்தமா
... .. என நினைவுகள் விரியலாம். நம் சுவாமி
நம்மாழ்வார் அனுபவித்து "என்னுள் கலந்தவன்’ என்று ஒரு திருநாமம் சாற்றுகிறார்.
ஏழு நாட்கள் விமர்சையாக நடந்த திருப்பவித்ரோத்சவம் இன்றுடன் முற்றப்பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக
சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால்
யாக யக்னங்களும், அத்யாபகர்களால் திவ்யப்ரபந்த திருவாய்மொழி சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும்
திருவீதி புறப்பாடும் நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல
வண்ணங்கள் உடைய திருப்பவித்ரமாலை சாற்றப்படுகிறது.
Sriman
Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short. The
festivals are only intended to be error correction [dosha nirvana] of the
rituals that we, the humans conduct and fail in some manner. Lord
only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we
deserve. For a Srivaishnavaite, nothing needs to be done by self as
Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide
us to do kainkaryam to Him.
இதோ ஸ்வாமி நம்மாழ்வார் எம்பெருமானை கொண்டாடும் விதம் .. :
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான்
இல்லையே
ஆழ்வாரின் மனதிலே குடிகொண்டு, அவருள் முழுமையாய் கலந்தவனாக விளங்குகின்ற, அற்புத ஒளி பொருந்திய மலை போன்ற பெருமானின் சிவந்து கனிந்த திருவாய் , செந்தாமரை மலர் போன்றது
; - திருக்கண்களும் திருவடிகளும் செந்தாமரை மலரே என ஆயின; மன்னு நிலைபெற்ற ஈரேழு பதினான்கு லோகங்களும், எம்பெருமானின் திருவயிற்றில் அடங்கியுள்ளன. இத்தைகைய சிறப்பு சேர்ந்த எம்பெருமானிடத்திலே சேராதது
யாதொரு பொருளுமேயில்லை ! என்கிறார் சுவாமி
நம்மாழ்வார்.
Here are some photos of grand purappadu on Thiru Pavithrothsava
Sarrumurai 2019.
No comments:
Post a Comment