Sri Thelliya Singar
Brahmothsavam Day 6 : @
Thiruvallikkeni divyadesam Ananda Vimanam : சூர்ணாபிஷேகம்
உத்சவம். .
Sri Thelliya Singar Aani
Brahmothsavam starts tomorrow at Thiruvallikkeni ~ of the most important purappadus :
Sat 15.6.19 morning is
Garuda Sevai
17.6 eve : Yoga
Narasimhar thirukolam followed by Hanumatha vahanam
18.6 eve – Yanai vahanam
19.6 (Wed) – morn –
Thiruther
20.6 – eve - Kuthirai
vahanam
25.6 eve – Pushpa
pallakku.
Last year somehow I could
not post couple of purappadus and one
missed out was day 6 – Churnabisheka vimanam.
Here are some photos of purappadu on Thurs 28.6.2018.
திருவல்லிக்கேணியில் சிறப்புற
நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் 28.6.2018 அன்று
ஆறாம்நாள் ~சூர்ணாபிஷேகம் உத்சவம். அன்று காலை அருள்மிகு ஸ்ரீஅழகியசிங்கர் அழகு பொலிந்திட
தங்கசப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.
சூர்ணாபிஷேகம் சிறப்பு.: சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள்
மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது
நறுமணத்திற்கு ஆகவும் பெரியவாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு
பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக
இடிக்கப்பட்டு, பெருமாள்
திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.
திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய "கருச்சந்தும் காரகிலும்
கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்" அனுசந்திக்கப்படுகிறது.
விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. இதோ இங்கே திருமழிசைப்பிரானின் ஒருபாடல் *திருச்சந்தவிருத்தத்தில்*
இருந்து :
அச்ச நோயொடல்லல் பல்பிறப்பு அவாய மூப்பிவை
வைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றி வானிலேற்றுவான்
அச்சுதன் அநந்தகீர்த்தி ஆதியந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேதகீதனே.
பயம், வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பல பிறப்புகள்
ஆகிய இவற்றையும்; இவற்றை
அனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும், அல்லல் படும் சரீரத்தையும் போக்கடித்து ~ நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்க்க
வல்லவன் - அடியாரை
ஒருநாளும் கைவிடாதவனும், எல்லையில்லா
கீர்த்திகளையுடையவனும், முதலும்
முடிவும் இல்லாதவனும், விரோதிகளை
அழிக்க வல்ல ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும், வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டவனான ஸ்ரீமன்
நாராயணன் ஒருவனே !
On 28.6.2018 was 6th day
of Brahmothsavam at Thiruvallikkeni Divyadesam for Sri Thelliya Singar.
In the morning after
‘Choornabishekam’, Sri Azhagiya Singar had purappadu in ‘AnandaVimanam
[PunniyaKodivimanam]’. In the purappadu, ‘Thiruchanda Virutham’
given to us by Sri Thirumazhisai Azhwaar was rendered. These 120
songs fall under the type ‘viruthapaa’ – they are replete with numbers and fall
under a specialized category of tamil grammar called ‘ennadukkicheyyul’.
Some photos taken during the
morning purappadu are here. Feeling
sad in having to miss out 2019 uthsavam that starts tomorrow !!
adiyen Srinivasadhasan
12.6.2019
No comments:
Post a Comment