17th Feb 2019 - was
‘Punarvasu (punarpoosam) nakshathiram’
in the month of ‘Maasi’ – the Thiruavathara thirunaal of Sri Kulasekhara
Azhwaar. Kulasekarar was the amsam
of ‘kausthubam’ – the jewel adorning Sriman Narayana. He was born at
Thiruvanjikulam as son of King Thiruviradhan and ruled the Chera Empire. I
had posted on Sri Kulasekarar Sarrumurai at Thiruvallikkeni and on alwar’s
avatharasthalam at Thiruvanjikalam [Sri Kula sekara pattinam]
sri Kulasekara azhwar at Thiruvallikkeni
This Azhwar’s unique contribution is ‘Perumal
Thirumozhi’ ~ that describes his bakthi
to Thiruvarangan, his attachment to Arangan, the holy Thirumala and what Azhwar
aspires to be there, Thiruvithuvacode, .. .. and canto 7 [ezham thirumozhi] is
on lamentation of Devaki who could not enjoy the deeds of Krishna as he grew
up. We have been brought up hearing the beautiful
life history of Bhagwan SriKrishna who was born at Mathura to Devaki and
Vasudevar inside the prison of Kamsa, and on the same night on that rainy day,
was taken across river Yamuna to Gokul where he grew with Yasodha and
Nandagopar.
பூர்ணாவதாரம் என்று புகழப்படுகின்ற ஸ்ரீகிருஷ்ணரின் லீலைகளில் மயங்காதவர்கள் யார்?
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே மண்ணுலகோர் உய்வுறும் வண்ணம்
தன் தனிப்பெருங்கருணையால் ஒரு மானிடக் குழந்தையாக தேவகிக்கும் வாசுதேவருக்கும் - கம்சன்
சிறைதனிலே அவதரித்தது ஒரு அற்புதம் எனின், அன்று கொட்டும் மழையிலே, யமுனை
ஆறு வழி விட, ஆதிசேஷன் குடை பிடிக்க, கோகுலம் சென்று யசோதா நந்தகோபரிடம் வளர்ந்தது ஒரு அத்புதம்.
கோதை பிரட்டி தனது திருப்பாவையிலே செப்பியது
: ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலானாகித்
தான்தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபர் என்று நால்வர்
இயற்றிய தவத்துக்கு ஈடு இணையற்ற ஒரே யாதவ ரத்னமாக கண்ணன் பிறந்தான். பாலகிருஷ்ணன்
பிறந்த சில மணிக்குள்ளே, தன் சங்க சக்ராதி அம்ஸங்களை மறைத்துக்கொள்ள தேவகி ப்ரார்த்திக்க
உடனே அப்படி தன் அம்சங்களை மறைத்துக்கொண்டு அவள் இட்ட வழக்கை செய்து காட்டினான். சிறைச்சாலையில் பிறந்து, பிறந்த சில மணித்துளிக்குள்ளாகவே,
கொடும் இரவில், கொட்டும் மழையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து வேறொருத்திக்கு
மகனாய் போய் சேர்ந்தானே! என்ன ஆச்சர்யமான சம்பவங்கள்! பிறந்த குழந்தைக்குத் தான் எத்தனை எதிரிகள்?.
பூதனை, சகடாசுரன், கேசி, காளிங்கன் என எவ்வளவு அசுரர்கள் - ஒரு பக்கம் யசோதை 'என் குழந்தைக்கு மட்டும் ஏன் இப்படி?' என்று தினம் வருந்த - தேவகி எப்படி
வருந்தினாள்.
குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் கண்ணனது
பால லீலைகளைக் காணப் பெறாத உண்மைத் தாயான தேவகியின் புலம்பலை மிக அழகாக விவரித்துள்ளார். இந்த பாசுரம் அறிந்ததே ! - ஆயின், நம் ஸ்ரீநிதி அக்காரக்கனி ஸ்வாமியின் எளிய நடை விவரணம் கட்டி இழுத்து. இதோ இங்கே பாசுரமும், அவரது எழுத்தும் !
Sri Mannathar at Thiruvallikkeni.
'மருவும் நின் திருநெற்றியில் சுட்டி* அசைதர மணிவாயிடை
முத்தம்
தருதலும்* உன்தன்
தாதையைப் போலும்; வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர*
விரலை செஞ்சிறுவாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கும்
அவ்வுரையும்*
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே !
பாலகிருட்டிணன் ஆய்ப்பாடியில் வளர்ந்த பொழுது, அவர் அணிந்த அழகான நெற்றிச்சுட்டி
அசைய, ‘உன் வாயில் முத்தம் தரவும் உன் அப்பா சாயலில் இருக்கிறாய்’ என்று உள்ளம் குளிரவும்’ விரலை வாயில் வைத்து வெகுளியாய்ப் பேசும் மழலைப்பேச்சை
ரசிக்கவும் பாக்கியமில்லாத நான் பெறவில்லை. யசோதைக்குக் கிடைத்ததே என தேவகி புலம்புவதாக
! ~ இதோ இங்கே ஸ்ரீநிதி ஸ்வாமியின் எழுத்துக்கள்.
பரம்பொருளையே பிள்ளையாகப் பெற்ற யசோதை ; ஒப்பற்றவள்
! ஈடு இணையற்றவள் என்று கொண்டாடப்படுகின்றாள் ! தேவகிப் பிராட்டி , கண்ணனைக் கருவிலே
சுமந்திருந்தாலும் , அவளும் யசோதைக்கு ஈடாகாள் ! ஏனெனில் ,கண்ணனுடைய கோலச் செயல்களை,
சேஷ்டிதங்களை அவளைப் போல் அனுபவித்தாளல்லளே இவள்..
குலசேகரப் பெருமாள் நெடுங்காலமாக , ஜந்ம ஜந்மாந்தரங்களாகத்
தாம் இறைவனைப் பெறாதொழிந்ததையெண்ணி , வருத்தமுற்றுக் கிடந்தார் ! அவனோடே (இறைவனோடே
) ஊடுவதற்கும் ( சண்டை போடவும் ) கூடுவதற்கும் உரிமையுள்ள நாம் , இப்படி அவனை இழந்தோமே
என்று வேதனைப்பட்டார்.. அப்பொழுது அவருக்கு தேவகிப்பிராட்டியின் நினைவு வந்ததாம்.
ஐயோ பாவம் அவள்.. கண்ணனைப் பிள்ளையாகப் பெற்று வைத்தும்
, அவனைப் பெற்ற அன்றே இழந்தவளன்றோ அவள். பிறந்த உடனே அவனைத் திருவாய்ப்பாடிக்கு அனுப்பி
விட்டாளே ! குழந்தையாயிருந்த போது , அவன் விளையாடின விளையாட்டுகள், அவன் செய்த லீலைகள்
என்று எதனையும் அனுபவியாது போனாளே .. கண்ணன் கம்ஸனைக் கொன்றொழித்து, தாய் தந்தையரை
( தேவகி - வஸுதேவர் ) வணங்கினபோது, தேவகி தன் குறைகளையெல்லாம் சொல்லிப் புலம்பினாளாம்.
இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்த குலசேகராழ்வார்,
தம்மை தேவகியாகவே எண்ணிக் கொண்டு பாடத் தொடங்குகிறார் பெருமாள் திருமொழி - ஆலைநீள்
கரும்பு பதிகத்தில். அதில் 'மருவும்
நின் திருநெற்றியில் ' என்கிற
பாசுரத்தில் தேவகி , அசோதையை தெய்வ நங்கை என்று கொண்டாடுவதாகப் பாசுரமமைத்துள்ளார்.
தன்னைத் திருவிலாதவள் ( பாக்கியமற்றவள் ) என்றும் தேவகிப்பிராட்டி நொந்து கொள்கிறாளாம்.
கண்ணனுடைய திருநெற்றியில் திருச்சுட்டி ரொம்ப அழகாக இருக்கிறதாம்.
அவன் நடந்தால், அதுவும் அசைகின்றதாம். ஊரில் பலபேர் தங்கள் குழந்தைகளுக்கு நெற்றிச்
சுட்டி அணிவித்தாலும் , கண்ணனுக்குப் போலே அத்தனை பொருத்தமாக யாருக்கும் அது அமையவில்லையாம்.
பெரியவாச்சான் பிள்ளை அவ்விடத்தில் அருமையானதொரு விளக்கம் தருகிறார்.
கண்ணனுடைய திருநெற்றிச்சுட்டி , அவன் கூடவே பிறந்தது
போல அவனுக்குப் பொருந்தியிருக்கிறதாம். தேவகி சிந்தித்துப் பார்க்கிறாள் ! இப்பொழுது கம்ஸனை முடித்த கண்ணன் என் முன்னே நிற்கிறான்.
அவன் நெற்றியில் சுட்டி இப்பொழுதும் அழகாகத் தான் இருக்கிறது. ஆனாலும்.. குழந்தையில்
இன்னமும் அழகாகவன்றோ அது காட்சி தந்திருக்கும். இப்படியிருக்குமோ..
பார்ப்பவர்கள் எல்லாம், அசோதையினிடத்திலே ஒரு கேள்வியைத் தவறாது கேட்பார்களாம்.
அது எப்படி உங்கள் பிள்ளை மட்டும் , பிறக்கும் போதே நெற்றிச்சுட்டியுடன் பிறந்தான்
?! இதற்கென்றும் ஏதேனும் நோன்புளதோ ? என்று வினவுவர்களாம். யசோதை அவர்களிடம் , அப்படியெல்லாமில்லை
அம்மா ! அது சாதாரண நெற்றிச் சுட்டி தான் என்றாலும் யாரும் நம்புவதில்லையாம் ! பதில்
சொல்லிச் சொல்லியே களைத்தும் , தளர்ந்தும் போயிருந்தாளாம் யசோதை ! உடனே அவள் , கேள்வி
கேட்போரைப் பக்கத்திலே நிற்க வைத்துக்கொண்டு, கண்ணனை அணைத்தபடி, அவர்கள் பார்க்க அவன்
நெற்றிச் சுட்டியை சற்றே நெற்றியில் இருந்து (கழற்றாமல் ) அசைத்துக் காண்பித்து , அவர்கள்
ஐயம் தீர்த்திடுவளாம்.
இந்த பாக்கியம் நான் பெறாதொழிந்தேனே என்று கதறுகின்றாள்
தேவகி. யசோதை நிச்சயமாக தேவமாது ( தெய்வநங்கை ) தான் ! தைவம் திஷ்டம் பாகதேயம் என்கிறபடி
அவள் பாக்கியத்தையே இங்கு தெய்வம் என்றாளோ !! யசோதையைப் போலே நாமும் திருவுடையவர்களே
! அர்ச்சையில் அநவரதமும் நமக்கு அவன் வடிவழகு சேவையாகின்றதே ! நீங்களும் ( அவன் ) ' மருவும் திருநெற்றியில் சுட்டி
' காணுந்தோறும் இப்பாசுரத்தையும் இவ்விளக்கத்தையும் நினைவில் கொள்ளுங்கள் ! அவன் உங்கள்
மடிகளில் தவழ்வதை உணர்வீர்கள் !!
குலசேகரப் பெருமாள் திருவடி போற்றி !
with pranams and thankful gratitude to Sri Srinidhi Akkarakkani Swami..
adiyen Srinivasadhasan
20th Feb 2019.
No comments:
Post a Comment