மயர்வற
மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலங்கள் **108 திருப்பதிகள்** என புகழ் பெற்று விளங்குகின்றன. பத்தராவிப்பெருமாள்
என புகழப்படும் ஸ்ரீபக்தவத்சலர் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் திருத்தலம்
திருநின்றவூர். சென்னையில் இருந்து திருஎவ்வுள்
எனும் திருவள்ளூர் செல்லும் பாதையில் இரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில்
திருமலை பெரிய ஜீயர் மடத்தின் பராமரிப்பில்
உள்ளது.
இங்கு
சிறப்பாக நடைபெற்று வருகின்ற ப்ரஹ்மோத்சவத்தில் ஆறாம் உத்சவத்தில் பெருமாளை சேவிக்கும்
பாக்கியம் கிட்டியது. 7.4.2018 அன்று
மாலை 5.30 அளவில் நடைபெற்ற புறப்பாட்டின் சில
விசேடங்கள்.
o
ஸ்ரீபக்தவத்சல பெருமாளுக்கு மிக அழகாக ஸ்ரீ வேணுகோபாலன்
சாற்றுப்படி
o
இன்று மூலம் திருநக்ஷத்திரம் ஆனதால் சுவாமி மணவாளமாமுனிகளும்,
பெருமாள் உடன் புறப்பாடு கண்டு அருளினார்.
o
திருவீதி புறப்பாட்டில் திருச்சந்தவிருத்தமும் பிறகு
உபதேசரத்தினமாலையும் சேவிக்கப் பெற்றன.
o
திருவேங்கடவனின் திருக்கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு
ஸ்ரீஉடையவராலே வழிமுறையாய் கிடைக்கப்பெற்ற திருமலை பெரிய கேள்வியப்பன் ஸ்ரீ சடகோப ராமானுஜ
பெரிய ஜீயர் சுவாமி கோஷ்டியில் அந்வயித்தார்.
o
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி வந்திருந்து,
ஸ்ரீ பக்தவத்சலருக்கு - திருவேங்கடமுடையானின் சேஷ வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பெற்றன.
o
யானை, திருச்சின்னம், தோரணங்களுடன், அருளிச்செயல்
வேதபாராயணத்துடன் அதி விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது.
o
கோஷ்டியில் திருமலை ஏகாங்கிகள் ~ திருவல்லிக்கேணி
அத்யாபகர்கள் ஸ்ரீகுவளை கண்ணன் சுவாமி; ஸ்ரீ MS ஸ்ரீனிவாசன் சுவாமி மற்றும் பலர் அலங்கரித்தனர்.
o
வீதிதோறும் மக்கள் ஆசையாய் பெருமாளுக்கு தட்டு சமர்ப்பித்து
எம்பெருமானை சேவித்து மகிழ்ந்தனர்.
ஏறு என்றால்
பலம் மிக்க காளை ~ காளையை பலத்துக்கும் திறமைக்கும்
உழைப்பிற்க்கும் உபமானமாய் கூறுவது வழக்கம்.
இதோ இவ்வூர் எம்பெருமானை திருமங்கை மன்னனின் மங்களாசாசனம்.
ஏற்றினை இமயத்துளெம்மீசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை,
ஆற்றலை
அண்டத்தப்புறத்துய்த்திடும் ஐயனைக் கையிலாழியொன்றேந்திய
கூற்றினை,
குருமாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை,
காற்றினைப்
புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே.
காளையைப்
போல் செருக்குடையவனும், இமயமலைத் திருப்பிரிதி எனும் அற்புத திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற ஸ்வாமியும், இஹலோகத்ததுப்
பலன்களை அளிப்பவனும்; இம்மையைத் தாண்டி மறு உலகத்திலும் அனைவரையும் காக்க வல்லோன் ஆனவனும்;
பரிபூர்ண சக்தியாய் இருப்பவனும், அண்டங்களுக்கு அப்பாலுள்ள பரமபதத்தில், ஸ்ரீமன் நாராயணின் திருப்பாதம் பணிந்தோர்களை காக்கும்
- ஒப்பற்ற திருவாழியை தரித்துக்கொண்டு, எதிரிகட்கு
யமன் போன்ற மிக குளுமையான சிறந்த நீலமணிமயமான மலைபோன்ற அவெம்பெருமானை (நின்றவூர் நின்ற
நித்திலத்தொத்தினை) - திருநின்றவூரில் எழுந்தருளியிருக்கின்ற
முத்துத்திரள் போன்ற எம்பெருமானை, தேடிச்சென்று
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன்.
ThiruNinravur is a beautiful
divyadesam – it is around 30 km from Chennai on Arakonam railway, situated
closer to another divyadesan of Thiruvallur (Thiru Evvul). Moolavar here is in standing posture ‘Sri
Patharavi Perumal also known as PatharavipPerumal; Thayar is Ennai Perra thayar who granted
boons to Samuthira Rajan.
The most beautiful Uthsavar is
likened to cool precious stone and nonchalant water ~ the annual brahmothsavam
is now on and 7.4.2018 was day 6 when after Churnabishekam, there was purappadu
in the evening. Sri Bakthavatsalar was
ornate as Sri Venugopal, the divine flautist.
As it was ‘Thirumoolam’ Swami
Manavala Mamunigal also had purappadu with Perumal.. Brahmothsavam is a grand festive occasion and
there were so many shops and people. In
the evening purappadu, it was Thiruchanda virutham and Mamunigal’s Upadesa
Rathinamalai. His Holiness Thirumalai Sri Periya Kelviyappan Sadagopa
Ramanuja Pedda Jeeyar swami graced the occasion.
The Emperuman at this kshetram is
greatly benevolent and grants boons satisfying the wishes of devotees. Kubera, who had lost his wealth, offered
prayers to the Goddess here and regained all his riches and hence called
Kuberapuram. This temple though under HR&CE is administered by Thirumala
Periya Jeeyar Mutt.
Here are some photos taken yesterday
during the purappadu on 7.4.2018
~ adiyen Srinivasa dhasan (S.
Sampathkumar)
_________________________________________________________________________________
No comments:
Post a Comment