To search this blog

Monday, July 3, 2017

Sri Azhagiya Singar Brahmothsavam 2017 : புன்னை கிளை வாஹனம்.

Sri Azhagiya Singar  Brahmothsavam 2017  : Punnai Kilai vahanam - day 1 Eve

On the evening of day 1 of Brahmothsavam-  3rd July 2017 ,  – it is Punnai Kilai Vahanam with Sri Azhagiya Singar  as Sri Krishna, the Divine Flautist. 



Unlike Ramavathara, Lord Krishna exhibited glimpses of divinity many a  times... as he grew up in Vrindavanam, people were attracted to Him with boundless devotion longing for the Lord, longing to hear His melodious flute; yearning to get near and be with Him.  It was not the earthly love but the infinite devotion to the Lord  ~ the Punnaikilaivahanam depicts his iraasaleelai with gopikas. 






ஸ்ரீ அழகிய சிங்கர்  ஸ்ரீக்ருஷ்ணாவதார நாயனாக அற்புத சேவை அளிக்கும் -  ப்ரம்மோத்சவத்தில்முதல் நாள் மாலை புன்னை கிளை வாஹனம். வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக 'புன்னை கிளை வாஹனத்தில்  " குரவை  ஆய்ச்சியர்களோடு விளையாடும் திருக்கோலம்." புன்னை மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும்.  இதன் இலைகள் சற்று பெரியதாகவும்,பளபளப்பாகவும் இருக்கும். புன்னைமரத்தின் அறிவியற் பெயர்: calophyllum inophyllum : calophyllum என்பதன் பொருள்அழகான இலை.




இன்று ஆனி ஸ்வாதி ஆகியபடியே பொங்கும் பரிவாலே பெரியாழ்வார் எனும் பெயர் பெற்ற பட்டர்பிரானின் திருவவதார திருநாள்.  மழை பெய்தபடியால்  வாகன புறப்பாடு இல்லை.  பெருமாளும் ஆழ்வாரும் போர்வை சாற்றிக்கொண்டு எழுந்து அருளின புறப்பாடு.  பெரியாழ்வார்  தனது பாசுரங்களில்கண்ணனின் குழலோசையை  "தூவலம்புரியுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே"  எனவும் ........ 
மதுசூதனன் வாயில் குழலி னோசை செவியைப்பற்றி வாங்க*
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து*
கின்னரமிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோமென்றனரே."

                                                          ~   என்றெல்லாம் சிறப்புற அனுபவிக்கிறார்.

கண்ணபிரானுடைய வாயில் (வைத்து ஊதப்பெற்ற) வேய்ங்குழலினுடைய  ஸ்வரமானது,செவிகளை கவர்ந்திழுக்கநல்ல வீணையைக் கையிலுடைய தும்புரு முனிவனும்,நாரதமஹர்ஷியும் தங்கள் தங்களுடைய வாத்தியங்களை இனி தொடவும் மாட்டோம் என்றனராம்.

Here are some photos of Sri Azhagiya Singar  in Punnai Kilai vahanam taken  this evening.  The above vahana photo is one taken in 2012 Brahmothsavam.   It rained and hence there was no vahana purappadu.  It was Periyazhwar Sarrumurai being Swathi nakshathiram in the month of Aani and alwar had purappadu with Perumal.




Adiyen Srinivasadhasan

No comments:

Post a Comment