செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்.
செவிக்கு
இன்பம் ஆவது புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய
திருநாமமே; அந்த இனிய திருநாமமே இப்பூவுலகில் வசிப்பவரெல்லாம் கவலையற்று ஒதுங்குவதற்கு
இடமாகவும் அமையும். மகா புருஷனான ஸ்ரீமன்
நாராயணன் ஒருவன் மட்டுமே பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருப்பவன் . அவனையே தெய்வாதீனமாக அடையப்பெற்றேன், ஆராய்ந்து
பார்த்தால் வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.
எம்பெருமானைத்
தவிர்த்து மற்றையோரைச் கவிபாட நினைத்தால் சொற்களையும் பொருள்களையும் திருடித் திருடிக்
கவிபாட வேண்டும். அங்ஙனன்றிக்கே எம்பெருமான் கவிக்கு நிறைந்த பொருளாயிருப்பன், என்கிறார்
நம் திருமழிசைப்பிரான்
On day 4 of Kodai Uthsavam, it was chinna mada veethi
Kulakkarai purappadu for Sri Parthasarathi who was exceptionally beautiful
adorning another different crown.
Nanmukan Thiruvanthathi of Thirumazhisai Alwar was
rendered. Alwar tells us : - the
sweetest music to ears if the name of Lord Sriman Narayana who has beautiful
red eyes; He and His feet are the refuge
of all humanity, whom I have arrived and praising with poetry. He is the centric of all poetry, worthy of it
(for praising others, one would only make wrong exaggerated comparisons) - Come to think, it is the very substance of
the Vedas.
Here are some photos of today’s purappadu
-adiyen Srinivasadhasan
27th June 2017
Class. As usual. thanks a lot.
ReplyDelete_/|\_