26th Aug 2016 was Sri Jayanthi - celebrated at
Thiruvallikkeni divyadesam, at many other divyadesangal; at every home -
in the manner of Lord Krishna being born at every home – devotees were
elated. The next morning there was the purappadu of Sri
Krishna. At Thiruvallikkeni, the
presiding deity is Sri Parthasarathi ~ Lord Krishna Himself, as He volunteered
to drive the chariot of Arjuna and offer to the World, the great Bhagwad Gita.
In the morning of 27th – the day after His
birth, occurs purappadu of beautiful Bala Krishnan in Sesha vahanam. This
Birthday purappadu enters Nagoji rao street and Yadava chathiram – traditional
places where those who tendered to cows lived, much to the happiness of Sree
Krishna.
ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு
நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான். பெரியாழ்வார் கண்ணனிடத்திலே அளவு கடந்த பிரேமையாலே
வடமதுரையிலே பிறந்த கண்ணபிரானை திருக்கோட்டியூரிலே பிறந்ததாக கொண்டாடுகிறார்.
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம் கலந்து அளராயிற்றே.
திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான்
திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தவளவில்
அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும்
ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து
அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக ஆக்கிவிட்டன ~ என கண்ணனது
பிறந்த நேர கொண்டாட்டங்களை பாடுகிறார் நம் பட்டர்பிரான். [திராவிட வேதா எனும்
அற்புத இணையத்தில் இருந்து - சுவாமி அண்ணங்கராச்சாரியார் உரை.]
When Lord Sri Krishna was born in Thirukottiyur
(Periyaalwar in his bakthi refers the birth place of Vada Mathura as
Thirukkotiyur !] He sings that when Lord
was born in the beautiful mansion, the occupants in unbounded joy spilled oil
and turmeric power on one another, slushing the portico of Krishna’s house –
such was their delight.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று காலை [27.8.2016] ஸ்ரீகிருஷ்ணர் சேஷவாஹனத்தில் புறப்பாடு கண்டுஅருளினார்.
தள்ளித்தளர் நடையிட்டு இளம்பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த
லீலாவிநோதங்களை நினைவுகூறும் விதமாக காளிங்கநர்த்தனம் புரியும் அழகான குட்டிகண்ணன் சேஷவாஹனத்தில் பக்தர்களுக்கு அருள்செய்தார்.
பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து, வாழ்ந்து, நாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையை' அருளிய கண்ணபிரானின்
திருவடிகளைபற்றியவருக்கு, நிர்ஹேதுக க்ருபை உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும்
தானேஅளித்து, நம்மை பாதுகாப்பார்.
"வடமதுரைப் பிறந்த தாதுசேர்தோள்
கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே." : வடமதுரையிலே
அவதவதரித்த, மாலையணிந்த, தோள்களையுடைய கண்ணனைத் தவிர நமக்கு
வேறொரு புகலில்லை. அவன்தாள்களே சரணம்.
Here are some photos taken during this purappadu.
எம்பெருமான் திருவடிகளேசரணம்; ஜீயர் திருவடிகளே
சரணம்;
ஆச்சார்யன் திருவடிகளேசரணம் !!!
No comments:
Post a Comment