To search this blog

Thursday, March 10, 2016

Sri Parthasarathi Theppam day 3 : 2016 at Triplicane

இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் தெப்பொத்சவத்தில் மூன்றாம் நாள்.   ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி  மிக அற்புதமான சாற்றுப்படியில் அழகாக எழுந்து அருளி சேவை சாதித்தார். 

தெப்பம்பற்றி வலையில் தேடியதில் - கம்பரின்  இராமாவதாரத்தில்- அயோத்யா காண்டம் வனம்புகு படலத்தில், அண்ணல் இராமபிரான் யமுனை ஆற்றை  கடந்தது பற்றிய காப்பிய வரிகள் ஈர்த்தன*

வாங்கு வேய்ங் கழை துணித்தனன்மாணையின் கொடியால்,
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து,   அதன் உம்பரின், உலம்போல்
வீங்கு தோள் அண்ணல்;    தேவியோடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினான், அந்த நெடு நதிஇரு கையால் நீந்தி,.

இளையோன் ஆன இலக்குவணன்  வளையும் தன்மையுள்ள மூங்கிற்கழிகளை வெட்டி; மானைக் கொடிகளைக் கொண்டுஉயர்ந்த தெப்பம் ஒன்று அமைத்து -  அதன்மேல் திரண்ட தோள்களை உடைய இராமன்; தேவியொடு இனிது வீற்றிருப்ப - அந்தப் பெரிய யமுனை நதியை; இருகையால் நீந்தி – கடந்தானாம்.

Today 10th Mar 2016 is day 3 of Sri Parthasarathi theppothsavam at Thiruvallikkeni.  Here are some photos of the dazzling Lord.


Adiyen Srinivasadhasan.






1 comment: