இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் தெப்பொத்சவத்தில்
மூன்றாம் நாள். ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி மிக அற்புதமான சாற்றுப்படியில் அழகாக எழுந்து
அருளி சேவை சாதித்தார்.
தெப்பம்பற்றி வலையில் தேடியதில் - கம்பரின்
இராமாவதாரத்தில்- அயோத்யா காண்டம் வனம்புகு படலத்தில், அண்ணல் இராமபிரான் யமுனை ஆற்றை கடந்தது பற்றிய காப்பிய வரிகள் ஈர்த்தன*
வாங்கு வேய்ங் கழை
துணித்தனன்; மாணையின் கொடியால்,
ஓங்கு தெப்பம் ஒன்று
அமைத்து, அதன் உம்பரின், உலம்போல்
வீங்கு தோள் அண்ணல்; தேவியோடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினான்,
அந்த நெடு நதி, இரு கையால் நீந்தி,.
இளையோன் ஆன
இலக்குவணன் வளையும் தன்மையுள்ள
மூங்கிற்கழிகளை வெட்டி; மானைக் கொடிகளைக் கொண்டு; உயர்ந்த தெப்பம் ஒன்று அமைத்து -
அதன்மேல் திரண்ட தோள்களை உடைய இராமன்; தேவியொடு இனிது வீற்றிருப்ப - அந்தப் பெரிய யமுனை நதியை;
இருகையால் நீந்தி – கடந்தானாம்.
Today 10th Mar 2016 is day 3 of Sri Parthasarathi
theppothsavam at Thiruvallikkeni. Here
are some photos of the dazzling Lord.
Adiyen Srinivasadhasan.
every post is very nice, am enjoying fully.
ReplyDelete