Sri Lakshmi Narasimha Thirukolam –
Thiruvallikkeni Azhagiya Singar Brahmothsavam Day 8
At
Thiruvallikkeni divyadesams both the Brahmothsavams – one of Sri Parthasarathi
and that of Sri Azhagiya Singar, are celebrated
in grand manner. There are some small differences – On day 8th morning
it is ‘Vennak thazhi kannan’ for Sri Parthasarathi, while it is ‘Lakshmi
Narasimhar’ for Azhagiya Singar.
For
us Pirattiyar is all divine grace and kind to devotees of Sriman
Narayana. Emperuman is absolute, matchless and blemishless in all
aspects. Piratti complements HIM ~ she is always associated with
Emperuman. It is only She who can direct us towards the blessings of
Emperuman. At Thiruvallikkeni, Lord Narasimha is in the most pleasing
form – He is Thelliya Singar, also called Azhagiya Singar. Today 13th
July 2014, it was Lakshmi Narasimha
Thirukolam, the most beautiful Perumal had Lakshmi Pirattiyar closest to Him
and it was the greatest darshan a baktha could have. Here are some photos
taken during today’s purappadu.
திருமங்கை மன்னன் தனது 'திருமொழியில்' - திருவல்லிக்கேணி அழகியசிங்கரை “பிறையெயிற்றனல் விழிப்பேழ்வாய் -தெள்ளியசிங்கமாகிய
தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். இரணியனை கொல்வதற்காக நரசிம்ஹர்,
பிறை போன்ற பற்களையும், நெருப்பு பொறி கிளர்கின்ற கண்களையும் பெரிய வாயையும் உடையவனாக
திருவவதாரம் பண்ணினாராம். திருவல்லிக்கேணி திவ்யக்ஷேத்ரத்தில் "நரசிம்ஹர்"
- யோக நரசிம்ஹராக எழுந்து அருளியுள்ளார். உத்சவர் அதீத அழகு பொருந்திய சாந்த ஸ்வரூபி
- தெள்ளிய சிங்கர். இவரது வடிவழகின் காரணமாக 'அழகிய சிங்கர்' என்றும் திருநாமம்.
இவ்வளவு வடிவழகிய பெருமாள் இன்று காலை - "லக்ஷ்மி நரசிம்ஹராக' உபய நாச்சிமாருடன்
அற்புத தரிசனம் அளித்தார். பல்லக்கில், சௌந்தர்யமாக காலை மடித்து அமர்ந்து, ஒரு
கை அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று நாச்சிமாரை அரவணைத்தும் அற்புதமாக எழுந்து அருளி இருந்தார்.
புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
Adiyen
Srinivasa dhasan.
No comments:
Post a Comment