To search this blog

Thursday, May 10, 2012

Thiruvallikkeni Thiruther Today - Car Festival at Triplicane


Sri Parthasarathi Brahmothsavam - Day 7 -  Thiruther

இன்று ஏழாம் நாள் உத்சவம் -  காலை திருத்தேர்.  On the 7th day of Uthsavam is Car Festival (Thiruther).  Early Morning Sri Parthasarathi with his consorts ascended the Thiruther.  The purappadu began at around 07.31 am and concluded around 09.30 am. 

தேர் என்றால் பிரம்மாண்டம் - மேலும் தேர் திருவிழா நடக்க ஊர் மக்கள் ஒன்று கூட வேண்டும்- 'ஊர் கூடி தேர் இழுத்தல்' என்பது மரபு.  மரபு, பண்பாடு கடைபிடிக்கப்பட்டு வரும் கிராமங்களில் இன்றும், தேர் அன்று ஆண்கள் எவரும் ஊரை விட்டு போகமாட்டார்கள்.  அனைவரும் ஒன்று கூடி, தேர் திருவிழாவை சிறப்பிக்கச் செய்வர். 

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருத்தேர் அழகானது. மிகப் பெரியது என்று சொல்லமுடியாது எனினும் அது உருண்டு ஓடி வரும் கொள்ளைகொள்ளும் அழகு பிரமிக்க வைக்கும்.  இதனது சக்கரங்கள், இரும்பாலானவை.   மாட வீதிகள் தார் ரோடுகள் ஆனதால் சுமார் இரண்டு மணி நேரத்தில் புறப்பாடு முடிந்து விடும்.  ஏராளமான மக்கள் கூடி தேர் இழுப்பர்.  தேர் வடம் சில ஊர்களில் தாம்புக் கயிற்றினால் ஆனதாக இருக்கும்; சில இடங்களில் இரும்பு.  திருவல்லிக்கேணியில் - இரும்பு.  
the wheels

இன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் வேத கோஷத்துடன் அதிகாலை 03.15 மணியளவில் திருதேருக்கு எழுந்து அருளினார்.   07.31 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க, புறப்பாடு  ஆரம்பித்து 09.30 மணியளவில் தேர் நிலை திரும்பியது.  இன்று சாயந்திரம் வரை பக்தர்கள், திருத்தேர் மீது ஏறி பெருமாள் சேவிக்கலாம்.  முன்பு திருத்தேர் முடிந்து, பெருமாள் இளைப்பாற வசந்த பங்களா எழுந்து அருளி, திருமஞ்சனம் கண்டுஅருளி வந்தார்.  இப்போது புறப்பாடும் திருமஞ்சனமும் நடை பெறுகிறது.

இன்றைய திருத்தேர் படங்கள் இங்கே. 

the crowds at Triplicane today for the festivity 


the wooden wedges used to steer and stop
and those putting wedge from inside the moving thiruther 

View of  Sri Parthasarathi inside the Thiruther

providing momentum to the ther from  behind (spud bar principle)



No comments:

Post a Comment