அசைந்து ஆடி கட கடவென உருண்டு ஓடி வரும்
தேர் தனி அழகு. துரதிஷ்ட வசமாக சமீபத்தில்
தேர் விபத்து பற்றி செய்திகள் வந்தன. தேர்
திருவிழாவை, சரியாக நடைமுறை படுத்த ஹிந்து அறநிலையத் துறை கோவில்களுக்கு அனுப்பிய
சுற்றறிக்கை விவரம் இங்கே : (நன்றி தினமலர் நாளிதழ்)
photos of Thiruther at Thiruvallikkeni above and Srirangam Chithirai Thiruther below
****************************************
அடுத்தடுத்து
நடந்த தேர் விபத்துகள், முறையான விதிகளை பின்பற்றாததால் ஏற்பட்டதாக பக்தர்கள் கருத்து
தெரிவித்தனர். விழாக்காலம் தொடர்வதால், அடுத்து பல கோவில்களில் தேரோட்டம் நடக்க உள்ளது.
இந்த கோவில்களில், விதிகளை முறையாக பின்பற்றி தேர் ஓட்டம் நடத்த வேண்டும் என்று, அறநிலையத்துறை
கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பல்வேறு விதிகளை சுட்டிக்காட்டி
அவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.
விபத்துக்
காப்பீடு: *ஒவ்வொரு கோவிலிலும் தேருக்கு விபத்துக் காப்பீடு, மூன்றாம் நபர் காப்பீடு
செய்யப்பட வேண்டும்.
*
தேர் மரச்சக்கரங்கள் அனைத்தும் இரும்புச் சக்கரங்களாக மாற்றப்பட வேண்டும்.
*
ஹைடிராலிக் பிரேக் எனப்படும் நீராற்றலால் நிறுத்தப்படும் இயக்கிகளைப் பொருத்த வேண்டும்.
*தேர்
ஓடும் பாதையில், சாலை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை உரிய ஆய்வு மூலம் தெளிவுபடுத்திக்
கொள்ள வேண்டும்.
*தேர்
ஓடும் பாதையில், குறுக்கிடும் மின் கம்பிகளில் மின் ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை
உறுதி செய்யவேண்டும்.
அதிக வேகம் ஆபத்து: அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (பொது) தனபால்
கூறுகையில்,"தேர் விபத்துகளுக்கு புதிதாக போடப்பட்ட சாலைகள், அதிகளவில் கூடும்
மக்கள், அவர்கள் ஒன்று சேர்ந்து இழுக்கும் போது அதிகரிக்கும் இழுவைத் திறன் போன்றவை
முக்கிய காரணங்கள். புதிதாக போடப்பட்ட சாலைகளில், அளவுக்கு அதிகமான வேகத்துடன் தேர்
இழுக்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
வேண்டும்: அறநிலையத்துறை
உதவி ஆணையர் சிவக்குமார் கூறுகையில், "இப்போதெல்லாம் தேர்கள் மணிக்கு 10 கி.மீ.,
வேகத்தில் இழுக்கப்படுகின்றன. அவ்வளவு வேகத்தில் செல்லும் அளவுக்கு அவற்றின் வடிவமைப்பு
இல்லை. பெரும்பாலும், சிறிய தேர்கள் தான் விபத்துக்குள்ளாகின்றன. பக்தர்களுக்கு இதில்
கடமைகள் உள்ளன. தேருக்கு அருகே நிற்க கூடாது. தேவையான நபர்களுக்கு அதிகமாக வடத்தில்
நிற்க கூடாது. இவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றார்.
கடைபிடிக்க வேண்டிய
நெறிமுறைகள் :
*
தேரோட்டத்திற்கான நாள், ஆகம விதிகளை கற்றுணர்ந்தவர்கள் மூலம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
*
தேர்ச் சக்கரம், அச்சு உள்ளிட்ட பாகங்களை தேர் ஸ்தபதி மூலம் சரிபார்த்து உறுதி செய்ய
வேண்டும்.
*
"பெல் நிறுவனம் மூலம் இரும்புச் சக்கரங்கள், ஹைடராலிக் பிரேக் பொருத்த வேண்டும்.
*
இரும்புச் சக்கரம் என்றால் அவை சரியாக சுழல்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
*
தேர் நிலை பற்றிய சான்று, பொதுப்பணித் துறையிடம் பெற வேண்டும்.
*
வளைவுகள், திருப்பங்களில் தேரின் வேகம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
*
தேருக்கு முன்னும் பின்னும், 25 அடி இடைவெளி விடப்பட வேண்டும். பக்கவாட்டில், 7 அடி
இடைவெளியில் பக்தர்கள் எவரும் வராமல் பாதுகாக்க வேண்டும்.
*
தேரின் முன்புறச் சக்கரங்களில் யாரும் விழுந்து விடாமல் இருக்க, பாதுகாப்பு அமைப்பினை
(கார்டு) வடிவமைத்து இணைக்க வேண்டும்.
*
புதிய தேர்களில், உட்புறம் சக்கரங்கள் இருக்கும்படி வடிவமைக்கப்பட வேண்டும். பழைய தேரைப்
புதுப்பிக்கும் போது, உட்சக்கரத்தை அகற்றக் கூடாது.
*
தேரோடும் பாதையில், தற்காலிக மின் தடைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
*
இந்த நடவடிக்கைகளை தேரோட்ட விழாவிற்கு, 6 மாதங்களுக்கு முன்பாகவே துவக்கி, முறைப்படுத்திய
பின் தேரோட்டம் நடத்த வேண்டும்.
சென்னையில்,
கோவில்களில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, முன்னெச்சரிக்கையாக இந்த அறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது. இந்த விதிகள், கடந்த 2007 ம் ஆண்டே உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment