Today
is Sree Ramanavami. At Thiruvallikkeni, Sri
Ramapiran had grand purappadu on ‘Hanumantha
Vahanam” (atop Hanuman)
Here
are some photos taken during the purappadu (courtesy My friend – Thirumazhisai Kannan)
இன்று ஸ்ரீ ராம நவமி. திருவல்லிக்கேணியில் ஸ்ரீ ராமபிரான் சிறிய
திருவடியாம் அனுமனின் மீது, (அனுமந்த
வாஹனத்தில்) புறப்பாடு கண்டு அருளினார்.
அங்கணெடு மதிள்
புடை சூழ் அயோத்தி என்னும் *
அணி நகரத்து
உலகனைத்தும் விளக்கும் சோதி **
வெங்கதிரோன்
குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி *
விண் முழுதும்
உய்யக்கொண்ட வீரன் ................ (பெருமாள் திருமொழி - பத்தாம் திருமொழி)
உயர்ந்த
மதில்களினால் நாற்புறமும் சூழப்பட்டதும் அயோத்யா என்று ப்ரஸித்தமுமான அழகிய நகரத்திலே,
சூர்ய வம்சத்துக்கே சிறப்பு உண்டாகும்படி அவதரித்து
விண்ணுலகத்தவர்களையும் உய்யக்கொண்ட ஸ்ரீ ராமபிரான் பிறந்த புனித நாள் இந்நாள்.
' கற்பார்
இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ' - எனும்படி
எப்போதும் இராமபிரானது சரிதையை செவியால் கண்ணால் பருகுபவர்களுக்கு இம்மையிலும்
மறுமையிலும் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
இராமபிரானைப்
பற்றிய எந்த நினைவும், 'அமுது
அளாவிய புனல்'
என தேவரமுதத்தோடு கலந்தநீர்ப் பெருக்கு போல இனிமையும்
நல்லவைகளையும் அளிக்கும்.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
No comments:
Post a Comment