Poigai Azhwaar,
Boothathazhwaar and Peyazhwaar are collectively known as Muthal
Azhwaargal. Peyazhwaar was born in a
well in present day Mylapore (the birth place is at Arundale Street, Mylapore)
– the place was collectively known as ‘Mylai Thiruvallikkeni’ those days. He rendered 100 songs known as ‘Moondram
Thiruvanthathi’.
At
Thiruvallikkeni, sannathi of Sri
Peyazhwaar is situated as a separate temple by itself. Renovation has been done at the cost of Rs.
30 lakhs + by Thiruvallikkeni Sri Manavala Maamunigal Sabai. The place now looks great, clean, broad and
beautifully ornate.
The Samprokshanam is
fixed at 09.15 to 10.15 am on Monday, 16th April 2012. On 14.4.12 at around 0930 pm, most beautifully ornate Lord Krishna vigraham and Sri Peyazhwaar were
taken in purappadu from Sri Parthasarathi temple to the Yagasalai at Peyazhwaar
kovil and Thiruvaimozhi goshti was rendered.
Here are some photos
of the day 1.
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து நற்றமிழால் நாட்டை உய்த்த முதலாழ்வர்களில்
பேயாழ்வார் - மயிலை திருவல்லிக்கேணியில் ஒரு கிணற்றில் அவதரித்தவர். திருமகள்
கேள்வனான எம்பெருமானை இவர் மூன்றாம் திருவந்தாதியில் பாடி உள்ளார். 'அழகிய திருமேனியையும் சூரியன் போன்று விளங்குகின்ற ஒளியையும், போரில் கிளர்ந்து எழுகின்ற அழகிய சக்கரத்தையும் உடைய எம்பெருமானை கண்டேனே என
பொருள் படும் 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழுமருக்கன் அணி நிறமும் கண்டேன்' என துவங்குகிறது
இவரது மூன்றாம் திருவந்தாதி.
ஐப்பசி மாதம் சதய நக்ஷத்திரத்தில் அவதரித்த பேயாழ்வாருக்கு திருவல்லிகேணியில்
சன்னதி தனி கோவிலாகவே அமைந்துள்ளது. சுமார் முப்பது லக்ஷரூபாய் செலவில், இவரது சன்னதி
புதுப்பிக்கப் பெற்று மஹா சம்ப்ரோக்ஷணம் திங்கள் (16.4.20120)
காலை 09.15 மணி
முதல் 10.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடை பெற
உள்ளது. இந்த திருப்பணியை திருவல்லிக்கேணி ஸ்ரீ மணவாள மாமுனிகள் சபையினர் சிறப்புற
செய்துள்ளனர். திருக்கோவில் மிக அழகாக புது பொலிவுடன் விளங்குகிறது.
14.04.12 அன்று இரவு மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் இருந்து 'ஸ்ரீ கண்ணனும் பேயாழ்வாரும்' - பேயாழ்வார்
சன்னதியில் அமைக்கப் பெற்ற யாக சாலைக்கு எழுந்து அருளினர். நேற்று
எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
'திருக்கண்டேன்
என நூறும் செப்பினான் .... பேயாழ்வார் தாளினை இப் பெருநிலத்தில் வாழியே!"
அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்
No comments:
Post a Comment